புது பைக் வாங்கி ஒரே வாரத்துல போலீசில் மாட்டிய டிடிஎஃப் வாசன்! என்ன பண்ணாரு தெரியுமா?

ஊட்டியில் தனது புதிய ஹயாபுஸா சூப்பர் பைக்கில் அதிவேகமாகச் சென்றதற்காகப் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இவர் இந்த சூப்பர் பைக்கை டெலிவரி எடுத்திருந்தார். அதற்குள் இந்த பைக்கில் வேகமாக ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். அதே நேரத்தில் இவர் மீது அதிவேகத்தில் பைக்கை ஒட்டி இளைஞர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதாகவும் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவதாகவும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது.

ttf vasan ooty rash drive

இவர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாலும், வாகனம் ஓட்டும்போது மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காகவும் இவர் மீது போலீசார் பலமுறை வழக்குகளைத் தொடர்ந்து உள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து இவர் தனது மோட்டோ விலாக்குகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் சுஸூகி நிறுவனத்தின் ஹயாபுஸா என்ற சூப்பர் பைக்கை வாங்கி இருந்தார்.

டிடிஎஃப் வாசன் இந்த ஹயாபுஸா சூப்பர் பைக்கை வாங்கியது பெரும் வைரலானது. இந்நிலையில் இவர் இந்த பைக்கை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார். அப்பொழுது இவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் பைக்கில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. ஊட்டியில் பல இடங்களில் இவர் பைக்கில் வேகமாக வலம் வந்துள்ளார்.

ttf vasan ooty rash drive

அப்பொழுது ஊட்டியில் உள்ள ஹில்பங்கு என்ற பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்பொழுது டிடிஎஃப் வாசன் அப்பகுதியில் வேகமாக தனது ஹயாபுஸா பைக்கில் சென்றுள்ளார். போலீசார் அவரை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன் பைக்கை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதையடுத்து போக்குவரத்து போலீசார் டிடிஎஃப் வாசனை துரத்திப் பிடித்துள்ளனர். அதன்பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போது தான் அது டிடிஎஃப் வாசன் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டியதால் அவருக்கு ரூபாய் ஆயிரம் அபராதமாக வைத்தனர்.

மேலும் டிடிஎஃப் வாசனிடம் பைக்கில் வேகமாகப் பயணிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வேகத்தை எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தும் போதும் அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தன் பாணியில் போஸ் கொடுத்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் சூப்பர் பைக்கை வைத்திருந்தாலும் சாலையில் செல்லும் போது குறிப்பிட்ட வேகத்தைப் பின்பற்ற வேண்டும். அதிவேகமாக செல்லும்போது சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தும். சூப்பர் பைக்கை வைத்திருப்பவர்கள் அதை நெடுஞ்சாலையில் அதிவேகமாக ஓட்டலாம் அதுவும் குறிப்பிட நெடுஞ்சாலைகளில் உச்சபட்ச வேகம் என இருக்கிறது அதை எக்காரணத்தைக்கொண்டும் தாண்டக்கூடாது. பைக்கின் முழுமையான திறனை டெஸ்ட் செய்ய வேண்டும் என்றால் டிராக்கில் தான் ஒட்டி பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 13:45 [IST]
English summary
Ooty police fined ttf vasan for rash driving in hayabusa superbike
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+