100 ரூபாய் எல்லாம் இல்ல செப்டம்பர் மாதம் முதல் பெட்ரோல் விலை எக்குதப்பா ஏறப்போகுது...
ஒப்பக் அமைப்பு கச்சா எண்ணெக்கான விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் செப்டம்பர் மாதம் இந்தியாவில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் தான் மிகவும் அடிப்படையாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா பொருளாதாரத்தையே பாதிக்கிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல்களின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் கிடைக்கவில்லை.

அதனால் இந்த மூலப்பொருளை வெளிநாடுகளிலிருந்து இறுக்குமதி செய்யப்பட்டு இங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. பெட்ரோலிய பயன்பாட்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாதான் இருக்கிறது. இதில் சீனாவும், இந்தியாவும் சவுதி அரேபியாவிலிருந்து தான் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

இந்நிலையில் பெட்ரோலிய மூலப்பொருளான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாக ஒப்பக் திகழ்கிறது. இந்த அமைப்பு தான் கச்சா எண்ணெய்யின் விலையை முடிவு செய்து வருகிறது. இந்நிலையில் ஒப்பக் அமைப்புவரும் செப்டம்பர் மாதம் முதல் கச்சா எண்ணெய்யின் விலைய பேரலுக்கு 10.80 அமெரிக்க டாலர் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதனால் இந்தியாவில் இதுபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 85 சதவீதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதில் பெரும் பகுதி சவுதி அரேபியாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ஈராக் மற்றும் ரஷ்யா, யூஏஇ ஆகிய பகுதிகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் சுவுதி அரேபியா மட்டும் 1.83 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஆனால் இந்தியா சவுதி அரேபியாவை விட ஈராக்கிடம் தான் அதிகமாக மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதன் மதிப்பு 2.40 லட்சம் கோடியாகும். கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்தியாவில் பெட்ரோல் விலை பெரும் பிரச்சனையாக ஏறிக்கொண்டே இருக்கிறது.

தற்போது லிட்டர் ரூ100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 12 மாதங்களில் மொத்தம் 70 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலைக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்ட தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு அதிரடியாக தள்ளுபடி செய்தது.

இதனால் விலை ஒரளவிற்கு குறைந்த நிலையில் மீண்டும் ஒப்பக் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளது. தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலையில் கணிசமான அளவிற்கு உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இந்தபிரச்சனையை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் அடுத்து மீண்டும் வரியை குறைக்குமா? இல்லை இந்த பாரம் மக்களிடம் தலையில் தான் விடியுமா? இதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








