அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

கூகுள் நிறுவனர் லாரி பேஜ் வழங்கிய முதலீட்டில் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற பறக்கும் வாகனம் உருவாகி இருக்கிறது. இந்த பறக்கும் வாகனத்தில் இருக்கும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்யும்போது, அதிகபட்சமாக

By Saravana Rajan

கூகுள் நிறுவனர் லாரி பேஜ் வழங்கிய முதலீட்டில் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற பறக்கும் வாகனம் உருவாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய பறக்கும் வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த பறக்கும் வாகனம் குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

எதிர்காலத்தில் நகர்ப்புறங்களுக்கான போக்குவரத்து தேவையை மனதில் வைத்து உலகின் பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார் மாடல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில், சில நிறுவனங்கள் வெற்றிகரமாக பரிசோதனைகளை மேற்கொண்டுவிட்டன. மேலும், வணிக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

இந்த நிலையில், பிளாக் ஃப்ளை என்ற புதிய பறக்கும் வாகனத்தை கனடா நாட்டை சேர்ந்த ஓபனர் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் ஓபனர் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க முதலீட்டை வழங்கி இருக்கிறார்.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

பிளாக் ஃப்ளை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பறக்கும் வாகனமானது முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் மின்சார பறக்கும் வாகனமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

இந்த பறக்கும் வாகனத்தில் இருக்கும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்யும்போது, அதிகபட்சமாக 40 கிமீ தூரம் வரை பறக்கும். மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

இந்த பறக்கும் வாகனத்தை ஒரு எளிய ஜாய் ஸ்டிக் மூலமாக இயக்க முடியும். மேலும், இந்த பறக்கும் கார் செங்குத்தாக மேல் எழவும், கீழே இறங்கவும் திறன் பெற்றிருக்கிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

இந்த பறக்கும் வாகனத்தின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இறக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுடன், அதில் மின்மோட்டார்கள் துணையுடன் இயங்கும் 8 ரோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

அதிர்வுகள் இல்லாமல் மிகவும் சொகுசான பயண அனுபவத்தை இந்த பறக்கும் வாகனம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயணியை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டவுடன், தானாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு தானியங்கி முறையில் திரும்பிவிடும் வசதியை பெற்றிருக்கிறது. இது டாக்சி நிறுவனங்களுக்கு சிறந்த வர்த்தக வாய்ப்பை அளிக்கும்.

இந்த பறக்கும் வாகனத்தில் தரை இறங்கும்போது நிறுத்துவதற்கான தாங்கி அமைப்பு எதுவும் இல்லை. நீர் நிலைகளில் தரை இறக்கும்போது மிதக்கும் வகையில், இதன் வயிற்றுப் பகுதி புடைப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

அமெரிக்காவில் இந்த பறக்கும் வாகனத்தை இயக்குவதற்கு பைலட்டுகளுக்கான தேர்வு எழுதி, பயிற்சி பெற வேண்டும் என்ற விதிமுறை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பைலட் கட்டுப்படுத்தும் அவசியம் இல்லாத வகையில் தானியங்கி கட்டுப்பாட்டு வாகனமாக களமிறக்குவதற்கு ஓபனர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்!!

இந்த பறக்கும் வாகனமானது இதுவரை 10,000 மைல்கள் [16,090 கிமீ] தூரம் பறக்கவிட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இது வெற்றிகரமாக இருந்ததாக ஓபனர் நிறுவனம் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஓபனர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மிக குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரவும் ஓபனர் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Opener BlackFly Personal Aircraft Revealed.
Story first published: Monday, July 16, 2018, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X