பாகிஸ்தான் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய ரஃபேல்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?

பாக் பயங்கரவாதிகள் கடந்த ஏப் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு இந்திய ராணுவம் விமான படை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பயங்கரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தியா தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் தயார் நிலையில் இருந்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி வழியாக பறக்க தடை கூட விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்திய ராணுவ விமானங்கள் உள்ளே நுழைந்தால் சுட்டு வீழ்த்துவதற்கு 24 மணி நேரமும் ரேடார் காணிப்பும் செய்து வந்தனர். அதையும் மீறி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது.

Operation Sindoor Rafale Used

இந்தியா இந்த தாக்குதலுக்கு சிந்தூர் என பெயர் வந்ததுள்ளது. இந்நிலையில் இந்த ஆப்ரேஷன் சிந்தூருக்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆப்ரேஷனிற்காக இந்திய ராணுவம் ரஃபேல் போர் விமானங்களையும் ஸ்கால்ப் மற்றும் ஹாமர் போன்ற ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடக்க இந்த ரஃபேல் விமானங்கள் முக்கியமான காரணமாக இருந்துள்ளன.

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நிச்சயம் தாக்கதல் நடத்தும் என பாகிஸ்தானிற்கு தெரிந்திருக்கும். இதனால் தான் இந்திய விமானங்கள் வான் வழி தாக்குதல் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இது போக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானிற்குள் வந்தால் அதை சுட்டு வீழ்த்தவும் ரேடார்களை செட் செய்திருப்பார்கள். அதையும் மீறி இந்திய ராணுவம் பாகிஸ்தானிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ரஃபேல் போர் விமானங்கள் உதவி செய்துள்ளது.

Operation Sindoor Rafale Used

இந்தியா சமீபத்தில் தான் இந்த ரஃபேல் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. இந்த விமானங்களில் என்னென்ன விஷயம் எல்லாம் இருக்கிறது என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மீது இந்தியா ரஃபேல் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்தியன் மூலம் இந்த விமானத்தில் ரேடாரில் சிக்காமல் பறக்கும் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாக ரேடார்கள் வான்வெளியை கண்காணிக்க குறிப்பிட்டி உயரத்திற்கு மேல் பறக்கும் அனைத்து விஷயங்களையும் டிராக் செய்துதகவல் தரும். அதை வைத்து குறிப்பிட்ட விமானம் எங்கு பறக்கிறது என லைவ்வாக டிராக் செய்து அதன் மீது தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அந்த ரேடார் கண்ணிலும் சிக்காமல் ரஃபேல் விமானங்கள் பறந்துள்ளது. இதற்காக என்ன தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்திய ராணுவம் ரகசியமாக வைத்துள்ளது.

Operation Sindoor Rafale Used

ரஃபேல் விமானத்தை பொருத்தவரை முழுமையாக கஸ்டமைஸ் செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்ட போர் விமானம் ஆகும்.இந்த விமானம் சூப்பர் சோனிக் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதாவாது இந்த விமானம் மணிக்க 2000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த விமானத்தில் பல வகையான ஆயுதங்களை தாங்கி செல்ல முடியும். வானிலேயே தாக்குதல் நடத்துவது, வானில் இருந்து பூமியை நோக்கி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட ஆயுதங்களை இதில் பொருத்த முடியும்.

இந்த ரஃபேல் விமானம் ஒரு மணி நேரம் இயங்கினால் சுமார் ரூ13.97 லட்சம் செலவாகும். என்ன இவ்வளவு செலவாகுமா என நீங்கள் நினைக்கவேண்டாம். மற்ற போர் விமானங்களை இயக்குவதற்கு ஆகும் செலவுகளை ஒப்பிடும் போது இதற்கான செலவு மிக குறைவு தான். மேலும் இந்த விமானத்திற்கான பராமரிப்பு செலடும் குறைவு தான். இந்த செலவு, எரிபொருள், பேட்டரி உள்ளிட்ட உபகரண செலவுகள் மற்றும் தரையிறங்கியற்கு பிறகு ஆகும் ரிப்பேர் செலவுகள் இதில் கணக்கிடப்படுகிறது. எஃப் 35 ரக போர் விமானத்தை ஒரு மணி நேரம் இயக்கினால் ரூ30 லட்சம் வரை செலவாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் முழுவதும் சகிப்பு தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் இந்தியாவின் இந்த நடவடிக்கை பல உலக நாடுகளால் வரவேற்கப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இதற்காக ரஃபேல் போன்ற அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த வாகனங்கள் நிச்சயமாக தேவைப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2025, 11:45 [IST]
English summary
Operation sindoor rafale fighter jet used know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X