”சைக்கிள் பயன்படுத்தினால் வரி கட்ட வேண்டும்...” மாநில அரசின் உத்தரவை கழுவி ஊற்றும் குடிமக்கள்..!!

Written By:

அமெரிக்காவின் ஒரகான் மாகாணத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் அதற்கு வரி கட்ட வேண்டும் என்ற விசித்தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

சூப்பர் கார்கள், சூப்பர் பைக்குகள் உட்பட பல திறன் பெற்ற வாகனங்களை வாங்கும் அளவிற்கான வாடிக்கையாளர்களை கொண்ட நாடு அமெரிக்கா.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கான தீர்வுகளை சரிவர அமல்படுத்தி அதை மக்கள் சரியாக கடைப்பிடிப்பதும் அமெரிக்காவில் தான்.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

வாகனங்களால் உருவாகும் மாசுவிற்கு அரசு தான் மாற்று வழிகளை அமல்படுத்த வேண்டும் என்று எண்ணாமல், பல அமெரிக்கர்களும், புகை மாசுவை கட்டுபடுத்த தாங்களாகவே முன்வந்து பல செயல்பாடுகளை எடுத்து வருகின்றனர்.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் ஒரகான் மாகாணத்தில் சைக்கிளை பயன்படுத்துபவர்கள் அதிகளவில் உள்ளனர். சுற்றுச்சூழலை காப்பாற்றுவதே இவர்களது நோக்கமாக உள்ளது.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

ஆனால் சில காலமாக இந்த மாகாணத்தில் வரி வசூல் நிலைமை அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. அதன் காரணமாக தற்போது சைக்கிள்களுக்கென தனி கலால் வரியை ஒரகான் அரசு இயற்றியுள்ளது.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

இந்திய மதிப்பில் ரூ.13 ஆயிரத்திற்கு மேற்பட்ட விலையை பெற்ற சைக்கிள்களும் மற்றும் 26 அங்குல சுற்றளவிலான சக்கரங்களை பெற்ற சைக்கிள்களும் ஆயிரம் ரூபாய் கலால் வரி செலுத்த வேண்டும் என ஒரகான் மாகாணத்தின் அரசு உத்தரவிட்டுள்ளது.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

சைக்கிகளுக்கு வரி உத்தரவை பிறப்பித்த ஓரகான் அரசை பார்த்து உலகமே தற்போது ஆச்சர்யத்தில் உள்ளது.

மேலும் இது அம்மாகாணத்தின் மக்களுக்கு பெறும் கோபத்தையும், அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

அரசின் இந்த உத்தரவு சூழலியலுக்கு எதிரானது என அம்மாநிலத்தில் இயங்கி வரும் சுற்றுப்புற சமூக ஆர்வலகர்களும் மற்றும் உலகளவில் உள்ள சூழலியல் செயல்பாட்டாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் சைக்கிள் பயணம் பெரிய ஆசுவாசத்தை தருகிறது.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

ஆனால், ஒரகான் மாகாணத்தில் இயற்றப்பட்டுள்ள இந்த சைக்கிளுக்கான வரி வதிப்பு மற்ற அமெரிக்காவின் மாகாணங்களிலும் பின்பற்றப்படும் என தெரிகிறது.

சைக்கிளுக்கு கலால் வரி விதித்த விசித்தர மாநிலம்..!!

அப்படி நடந்தால் அமெரிக்க அரசு சூழலுக்கு எதிராக மக்களை திசை திருப்புவது போன்ற செயலாக இருக்கும் என பல சமூக ஆர்வலர்கள் கண்டக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Oregon State Legislature approvals of the first statewide cycle tax in the nation has fallen flat with riders. Click for the Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark