முழுக்க முழுக்க வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்ட கார்.. கப்பல் மாதிரியான இந்த சொகுசு காரோட உரிமையாளர் இவரா!!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600)-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக காரும்கூட என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சொகுசு கார் மாடலையே இந்தியர் ஒருவர் முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தால் அலங்கரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக வெள்ளை நிற வாகனத்தை பலருக்கு பிடிக்கும். ஆனால், அது சுலபமாக அழுக்காகிவிடும். மேலும், அதை பராமரிப்பது மிகவும் கடினம் என்பது போன்ற காரணங்கள் பலர் அதை வாங்குவதில்லை.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே வேறொரு நிறத்தில் இருந்து ஆடம்பர காரை அவர் முழுமையான வெள்ளை நிறத்திற்கு அப்கிரேட் செய்து உள்ளார். அவர் வேறு யாருமல்ல சமூக வலைதள பிரபலமான ஓரி-தான் அவர் ஆவார். ஓர்ஹன் அவத்ரமணி என்பதே அவரின் இயற்பெயர் ஆகும்.

ஆனால், சமூக வலைதளம் மற்றும் பாலிவுட் திரை உலகில் ஓர்ரி எனும் பெயரிலேயே அவர் அறியப்படுகின்றார். அவர் முழுக்க முழுக்க வெள்ளை நிறத்திற்கு மாற்றியிருக்கும் அந்த சொகுசு காரின் விலை 3.5 கோடி ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை ஓர்ரி சில வாரங்களுக்கு முன்னரே வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அதனை இவ்வாறு தனித்துவமான நிறத்திற்கு மாற்றி இருக்கின்றார். வாகனத்தில் வழங்கப்பட்ட எந்த பாகங்களும் மாற்றப்படவில்லை. அதேவேளையில், இந்த நிறத்தை மட்டும் அவர் மாற்றி இருக்கின்றார். வீல்கள், கிரில், பென்ஸ் லோகோ, பம்பர் என பெரும்பாலான பாகங்களுக்கு அவர் வெள்ளை நிறத்தை வழங்கி இருக்கின்றார்.
இதனால் முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தாலான சொகுசா காராக அது மாறியிருக்கின்றது. இந்த அளவு வெள்ளை நிறத்தில் வேறு எந்த காரையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் பயன்படுத்தி இருப்பது சேடின் ஒயிட் எனும் நிறம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அடாஸ் சென்சார் மற்றும் பக்கவாட்டு ஸ்கிட் பிளேட்டுகளைகூட அவர் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், ரூஃப்-பிற்கு மட்டும் கருப்பு நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 600 சொகுசு கார் மாடலில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் உடன் சேர்த்து 48 வோல்டு மைல்டு ஹைபிரிட் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து 557 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க்கை அது வெளியேற்றும்.
இதுபோன்று அதிக திறனை இந்த கார் வெளியேற்றும் என்பதாலும், இதில் சொகுசான டிராவலை வழங்கும் விதமான அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினாலும் இந்திய பணக்காரர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. அதேவேளையில், ஓரி பயன்படுத்தி வரும் இந்த கார் சுவாரஸ்யமாக அவரின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை.
அதற்கு பதிலாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மகேஷ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பெயரிலேயே அது பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த காரை அவர் குத்தகை அல்லது வேறு ஏதேனும் வழிகளில் வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், குத்தகைப் பெற்ற காரை இவ்வாறு மாற்றுவது என்பது இயலாத ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று வாகனங்களின் உண்மை மாறும் அளவிற்கு மாடிஃபைச் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயல் ஆகும். எனவே இந்த வாகனம் போலீஸாரின் கண்களில் படும் எனில் மிகப் பெரிய அபராதம் அல்லது பறிமுதலுக்கு ஆளாக நேரிடலாம்.


Click it and Unblock the Notifications








