கிறிஸ்து பிறந்த நாளில் மறைந்த மாமனிதர்! இந்தியாவின் ரத்தன் டாடா மாதிரி ஜப்பானுக்கு இவர் தான்!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுஸூகி நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒசாமு சுஸூகி என்பவர் தனது 94வது வயதில் காலமாகியுள்ளார். இந்த செய்தி தற்போது உலகில் உள்ள ஆட்டோமொபைல் துறையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் வளர்ச்சிக்கு உங்கள் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாக இவர் முக்கியமான காரணமாக இருந்துள்ளார். இவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனம் சுஸூகி இந்நிறுவனம் தற்போது இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உலகில் உள்ள மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் சுசுகி நிறுவனமும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு தலைவராக இருந்தவர்தான் ஒசாமு சுஸூகி.

இவர் ஆரம்ப காலத்தில் வங்கியில் பணியாற்றி வந்தார். பின்னர் சுஸூகி நிறுவனத்தை துவங்கிய மிட்சோ சுஸூகியின் பேத்தியான ஷோக்கோ சுஸூகி என்பவரை இவர் திருமணம் செய்த பிறகு சுஸூகி நிறுவனத்தில் பணியாற்ற துவங்கினார். அப்பொழுது முதல் இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாம் ஏற்பட துவங்கியது. ஜப்பான் வழக்கப்படி மனைவி குடும்பத்தாரின் பெயரையே கணவர்களும் வைத்துக் கொள்ளும் விதமாக இவரும் தனது பெயரை ஒசாமு சுஸூகி என மாற்றிக் கொண்டார்.
இவர் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சிகளை எல்லாம் செய்தார். இவர் சுஸூகி நிறுவனத்தில் பணியாற்றிய போது எடுத்த முடிவுகள் எல்லாம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தன. முக்கியமாக இவரது இந்திய வருகை இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

1960களில் இந்தியாவில் அம்பாஸிடர் மற்றும் ஃபியட் ஆகிய கார்கள்தான் அதிக அளவில் விற்பனையாகி வந்தன. இந்தியாவிற்கு வரும்போது அவர் இந்திய மக்களுக்கு சிறிய ரக கார்களுக்கு தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்தார். இதை யடுத்து அவர் இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்தார்.
அதன்படி இந்திய அரசுடன் அவர் ஒப்பந்தம் மேற்கொண்டு டெல்லியில் புறநகர் பகுதியில் வாகன தயாரிப்பு ஆலைய ஒன்றை அமைத்தார். இந்தியாவில் உள்ள மாருதி நிறுவனமும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுஸூகி நிறுவனமும் ஒன்றாக சேர்ந்து மாருதி சுஸூகி நிறுவனமாக உருவெடுத்து இந்தியாவில் வாகனங்களை தயாரிக்க தொடங்கியது.
அப்பொழுது இந்திய மக்கள் மத்தியில் சிறிய ரக கார்களுக்கான தேவை இருப்பதை அறிந்த இவர் மாருதி 800 காரை முதன்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் அறிமுகமானது முதல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியாவில் இன்றளவும் இந்த காருக்கு மிகப்பெரிய மவுசு இருக்கிறது.
தற்போது இந்த கார் நேரடியாக இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை என்றாலும், மக்கள் பலர் பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இவர் ஏற்படுத்திய இந்த பெயர் இன்றளவும் பாரதி நிறுவனத்தை மிகப்பெரிய நிறுவனமாக மாற்றி உள்ளது. இன்று இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாக 100 கார்களில் 40 கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாகவே உள்ளன.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சுஸூகி நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் பைக்குகளை கூட தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. ஒரு ஆண்டில் சுமார் 19 லட்சம் பைக்கில் நிறுவனம் தயாரித்த விற்பனை செய்து வருகிறது. பைக்குகளே இவ்வளவு விற்பனை என்றால் கார்களின் விற்பனையை கேட்கவா வேண்டும்.
ஒசாமு சுஸூகி கடந்த 28 ஆண்டுகளாக சுஸூகி நிறுவனத்தின் தலைவராக இருந்தார். உலகில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களில் நீண்ட ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருந்தது இவர் தான். கடந்த 2000வது ஆண்டில் தான் இவர் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
அதன் பிறகு இவர் சேர்மனாகவும் சிஇஓவாகவும் இருந்தார். கடந்த 2008ம் ஆண்டு இவர் மீண்டும் தலைவர் பதவிக்கு வந்தார். அப்பொழுது சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து. நஷ்டம் ஏற்படுவதை சரி செய்ய இவர் தலைவர் பதவிக்கு வந்தார்.
அதன் பிறகு கடந்த 2015ம் ஆண்டு இவரது மகனுக்கு தலைவர் பதவியை வழங்கிவிட்டு இவர் மீண்டும் சேர்மன் மற்றும் சிஇஓ பதவியை வகித்தார். பின்னர் சிஇஓ பதவியில் இருந்தும் விலகி சேர்மன் பதவியில் இருந்தார். இவர் வாழும் போது மிக எளிமையாக வாழும் மனிதராக இருந்தார். வயதான காலத்தில் கூட இவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் எக்கனாமி கிளாஸில் தான் புக் செய்வார். அதிக பணம் செலவு செய்ய விரும்ப மாட்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு சுஸூகி நிறுவனமும் மிக முக்கியமான காரணம். தலைவராக பதவி வகித்த ஒசாமு சுஸூகி இதற்காக மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளார். அவரது மறைவு மிகப்பெரிய இழப்பாக ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ளது. அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் புகழ் என்றும் இந்த உலகை விட்டு மறையாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications








