மென்மை மனம் படைத்த ஏர் ஆர் ரஹ்மானின் அரக்க குணம் படைத்த கார்!

By Saravana

ஆயிரம் வெற்றிகளை குவித்தாலும், அச்சுப் பிசகாத பண்பாளரும், தமிழனின் பெருமையை உலகறிய செய்தவருமான முன்னணி இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரஹ்மான் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சின்ன சின்ன ஆசைகள் சிறகடிக்க திரையுலகிற்குள் நுழைந்து இன்று எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் ஆஸ்கர் நாயகனாக உயர்ந்து நிற்கும் ரஹ்மானின் எளிமை, அவரது காரிலும் பளிச்சிடுகிறது. அந்த காரை பற்றியத் தகவல்கள், அவரது இசையில் வெளிவந்து எனது கார் பயணங்களை சுகமாக்கும் டாப் 10 பாடல்களுடன் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

ஏஆர் ரஹ்மான் கார்

ஏஆர் ரஹ்மான் கார்

ஒரு சொகுசு கார் பிராண்டுக்கு விளம்பர தூதராக பணியாற்றியிருந்தாலும், ஏர் ஆர் ரஹ்மானுக்கு பிடித்த கார் பிராண்டுகளில் ஒன்று டொயோட்டா. அதன்படியே, அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை வாங்கி பயன்படுத்தி வருகிறார். மென்மை மனம் கொண்ட ரஹ்மானை இந்த அரக்க குணம் கொண்ட ஃபார்ச்சூனர் காதல் கொள்ள செய்துவிட்டது.

சொகுசு

சொகுசு

பிரிமியம் எஸ்யூவி ரகத்தில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாடல். மிக சிறப்பான இடவசதி, ஓட்டுதல் தரம் ஆகியவை ரஹ்மானை கவர்ந்துவிட்டது. மேலும், வீட்டில் இருப்பவர்கள் அனைவருடன் சேர்ந்து பயணிப்பதற்கான இருக்கை வசதியையும் வழங்குகிறது.

வசதிகள்

வசதிகள்

சாவி இல்லாமல் உள்ளே நுழைவதற்கான கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, எல்சிடி டச் ஸ்கிரீன், புளூடூத், 6 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம், டிவிடி பிளேயர், லெதர் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களிலும் முதன்மையாக விளங்குகிறது. இந்த எஸ்யூவியில் பின்புறத்தை தெளிவாக பார்த்து ரிவர்ஸ் எடுக்க உதவும் ரியர் பார்க்கிங் கேமரா, எஞ்சின் இம்மொபைலசர், பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன், 2 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

பொருட்களுக்கான இடவசதி

பொருட்களுக்கான இடவசதி

இந்த எஸ்யூவியில் 296 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் வசதி உள்ளது. மேலும், 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் கொடுக்கப்பட்டிருப்பதும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக அமையும்.

தரை இடைவெளி

தரை இடைவெளி

நம்ம ஊர் சாலைகளை எளிதாக எதிர்கொள்வதற்கு ஏதுவாக 210மிமீ தரை இடைவெளி கொண்ட எஸ்யூவி மாடல். எனவே, மோசமான சாலைகளில் செல்லும்போது கூட ஆட்சியாளர்களை நொந்து கொள்ள வேண்டிய அவசியம் மென்மையான மனம் படைத்த ரஹ்மானுக்கு இருக்காது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 171 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஸ்யூவி லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரஹ்மானின் மெலடி பாடல்கள்

ரஹ்மானின் மெலடி பாடல்கள்

கார் பயணங்களை இனிமையாக்கும் ஏ ஆர் ரஹ்மானின் 10 சிறந்த மெலடி பாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

என்னவளே...

என்னவளே...

என்னவளே, அடி என்னவளே என்ற காதலன் படத்தின் பாடம், எனது முணுமுணுக்கும் பாடலாக இருந்தது.

நிலா காய்கிறதே...

நிலா காய்கிறதே...

இந்திரா படத்தில் வரும் நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது என்ற பாடல் மிகவும் பிடித்தது.

என் வீட்டுத் தோட்டத்தில்...

என் வீட்டுத் தோட்டத்தில்...

ஜென்டில்மேன் படத்தில் வரும் என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற பாடலும் கார் பயணங்களை இனிமையாக்கி வருகிறது.

உயிரே, உயிரே...

உயிரே, உயிரே...

உயிரே, உயிரே வந்து என்னோடு கலந்துவிடு என்ற பம்பாய் பட பாடல்.

வெண்ணிலவே...

வெண்ணிலவே...

வெண்ணிலவே, வெண்ணிலவே என்ற மின்சார கனவு பாடலும் மிகச்சிறந்த கம்போசிஷன்.

நறுமுகையே...

நறுமுகையே...

நறுமுகையே, நறுமுகையே என்ற இருவர் பட பாடல்.

முன்பே வா...

முன்பே வா...

முன்பே வா என்ற சில்லுனு ஒரு காதல் பட பாடல்.

காதலெனும்...

காதலெனும்...

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் என்ற காதலர் தினம் பட பாடல்.

பச்சை நிறமே...

பச்சை நிறமே...

பச்சை நிறமே, பச்சை நிறமே என்ற அலைபாயுதே படப் பாடல்.

கார் பயணங்களுக்கு ஏற்ற ரஹ்மான் மெலடிகள்!

சஹானா சாரல் வீசுதோ என்ற சிவாஜி படப் பாடம் ஆகியவை கார் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஆஸ்கர் விருது பாடல்...

ஆஸ்கர் விருது பாடல்...

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் வரும் ஆஸ்கர் விருதை பெற வைத்த ஜெய்ஹோ பாடலும் மிகவும் அருமை. இரண்டு ஆஸ்கர் விருதுகளில் ஒன்று சிறந்த மெட்டமைத்தற்காகவும் மற்றொன்று சிறந்த பின்னணி இசைக்காகவும் வழங்கப்பட்டது.

உங்களுக்கு பிடித்த பாடல்

உங்களுக்கு பிடித்த பாடல்

ஏ.ஆர்.ரஹ்மானின் நூற்றுக்கணக்கான மெலடி பாடல்களில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். இந்த பட்டியலில் இடம்பெறாத உங்களுக்கு பிடித்த பாடல்களை கமெனட் பாக்ஸில் பதிவிடுங்கள். பிறருக்கு பயனுள்ளதாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 6, 2016, 17:41 [IST]
English summary
The double Oscar winner was previously a brand ambassador for a luxury sedan but his choice is reportedly a Toyota Fortuner which is a quintessential SUV that is backed up by a reliable engine.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+