Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாயில் வந்த கார்கள் விபத்தில் சிக்கின... காரணம் என்னனு தெரியுமா?
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாயில் வந்த கார்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. குறிப்பாக அதிவேகத்தில் பயணிப்பதன் காரணமாகவே ஏராளமான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வேக வரம்பை மீறி பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த விதிமீறலை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய சாலைகளை பொறுத்தவரை எப்போது எது நடக்கும்? என கணிக்கவே முடியாது. உங்கள் வாகனத்தின் குறுக்கே திடீரென கால்நடைகளோ, மனிதர்களோ வரலாம்.

அப்போது அதிவேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தால், வாகனத்தை உடனடியாக கட்டுப்படுத்தி நிறுத்துவது சிரமமாகி விடும். அப்போது விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. அதிவேகத்தில் பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், முதல்வரின் கான்வாயில் பயணித்த 2 கார்கள் இதே காரணத்தால் விபத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. எனவே தற்போதில் இருந்தே அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் நேற்று (ஜனவரி 4ம் தேதி) பிரச்சாரம் செய்தார்.

இதன்பின் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழக்கம் போல முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பிற்காக அவரது காருக்கு முன்பும், பின்பும் காவல் துறையினரின் வாகனங்கள் சென்றன. அத்துடன் முதல்வரின் கான்வாயில் அதிமுகவினரின் வாகனங்களும் அதிகளவில் பயணித்தன.

திரைப்பட காட்சிகளை போல், முதல்வரின் கான்வாய் கம்பீரமாக சென்று கொண்டிருந்தது. வாகனங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற காருக்கு நெருக்கமாக பயணிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

அதிவேகத்தில் முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கிய ஒரு காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதே சமயம் மற்றொரு கார் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் ஏறி நின்றது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இந்த விபத்து நடைபெற்றது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அத்துடன் விபத்தில் சிக்கிய இரண்டு கார்களில் பயணம் செய்தவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது இந்த விபத்தின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக நிறைய வாகனங்கள் அணிவகுத்து செல்லும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனம் மீது மோதினால், மற்ற வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொள்ளும் சூழல் உருவாகும். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அப்படி நடக்கவில்லை.

வாகனங்கள் அதிவேகத்திலும், ஒன்றையொன்று முந்தி கொண்டு செல்ல முயற்சி செய்ததுமே இந்த விபத்திற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. எனவே நீங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது அதிவேகத்தை தவிர்ப்பது நல்லது. நேரமின்மை காரணமாகவே பலர் அதிவேகத்தில் பயணம் செய்கின்றனர்.

எனவே எங்கு செல்வதாக இருந்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே கிளம்புங்கள். இதன் மூலம் நீங்கள் வேக வரம்பை பின்பற்றி பயணம் செய்தாலும், செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் சென்று விட முடியும். நீங்கள் பயணிக்கும் பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் நேர விரயம் போன்றவற்றை முன்கூட்டியே கணித்து கொண்டு அதற்கேற்ப கிளம்பினால் அவசரத்தை தவிர்க்க முடியும்.

அதேபோல் நீங்கள் என்ன வேகத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்பதை ஸ்பீடோமீட்டரில் அவ்வப்போது பார்த்து கொள்வது நல்லது. நீங்கள் வேக வரம்பை பின்பற்றி பயணிக்க இது உதவும். ஆனால் ஸ்பீடோமீட்டரை பார்க்கும்போது, சாலையில் கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம். சில சமயங்களில் குடிபோதையில் வாகனங்களை இயக்கும் ஒரு சிலர் அதிவேகத்தில் பயணிக்கின்றனர்.
குடிபோதையில் இருப்பதால் தங்களை அறியாமலேயே அதிவேகத்தில் அவர்கள் செல்கின்றனர். இதுவும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது. எனவே குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது. இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் விபத்தில் இருந்து தப்பலாம்.