சொந்த கார் வாங்கினால் ரூ2 லட்சம் லாபமா? இப்படி ஒரு கணக்கு யாருமே போட்டிருக்க மாட்டாங்க!
புதிதாக கார் வாங்க நினைக்கும்போது நமக்கு பலர் அறிவுரைகூறுவார்கள். சிலர் கார் வாங்குவது வீண் செலவு அதற்கு பதிலாக கேப் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம் என சொல்வார்கள். சிலர் சொந்த கார் தான் பெஸ்ட் என சொல்வார்கள். இந்நிலையில் லிங்க்டு இன் தளத்தில் சிஏ படித்த பெண் ஒருவர் போட்ட பதிவு ஒன்று சொந்தமாக கார் வாங்குவது குறித்த பலரது எண்ணங்களை மாற்றியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
புதுடில்லியை சேர்ந்தவர் மீனல் கோயல், இவர் சிஏ பிடித்து தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இவர் தனது லிக்டுஇன் பக்கத்தில் ஒர பதிவு ஒன்றை வெளியிறட்டுள்ளார். இந்த பதிவு பலரை யோசித்துபார்கக வைத்துள்ளது. இதில் இவர் காரின் தேய்மானம் குறித்து வளிக்கியுள்ளார். இதில் சொந்தமாக கார் வாங்குவது எப்படி அவருக்கு ரூ2 லட்சம் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் காரின் தேய்மானம் குறித்து மதிப்பிட்டுள்ளார். தற்போது ரூ3 லட்சம் செலவு செய்து ஒரு காரை வாங்கினால் அந்த காருக்கு தற்போது உள்ள ரூ3 லட்சம் மதிப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் குறையும். முதல் ஆண்டு அது ரூ2.65 லட்சமாகவும், 2ம் ஆண்டு ரூ2.04 லட்சமாகவும் 3ம் ஆண்டு ரூ1.42 லட்சமாகவும், 4ம் ஆண்டு ரூ85 ஆயிரமாகவும் 5ம் ஆண்டு 42,840 ஆக குறையும் என மதிப்பிட்டுள்ளார்.
பலர் இதனால் கார் தேய்மானம் அடையும் பொருள் அதைனால் அதை வாங்கவேண்டாம் என பலர் கூறுவதாகவும் ஆனால் பெங்களூருவில் தினமும் அலுவலகத்திற்குசெல்லகடந்த 2019ம் ஆணஅடு இவர் தினமும் உபேர் போன்ற கேப்பில் பயணித்ததாகவும், அதற்காக 2 மணி நேரம் தினமும் பயணத்திற்காக செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இவர் தனது மொத்த வருமானத்தில் 36 சதவீதத்தை பயணத்திற்காக செலவு செய்துள்ளார்.

இதனால் இவர் சொந்தமாக ஒரு கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். இதற்காக ரூ2.6 லட்சம் முன்பணம் வழங்கியுள்ளார். அந்த காருக்காக இஎம்ஐயாக ரூ5.4 லட்சம் செலுத்தியுள்ளார். பராமரிப்பு செலவுக்காக ரூ37,000, இன்சூரன்ஸ் கட்டணமாக ரூ1.1 லட்சம் என செலவு செய்துள்ளார். தினமும் சுமார் 25 கி.மீ வார நாட்களில் பயணம் செய்துள்ளார். இதற்காக மட்டும் ரூ1.95 லட்சம் செலவு செய்துள்ளார். அதாவது ஒரு கி.மீக்கு ரூ6 செலவாகியுள்ளது. வாரயிறுதி நாட்களில் சராசரியாக 15 கி.மீ பயணம் செய்துள்ளார். இதற்கு ரூ23400 செலவாகியுள்ளது. அதாவது ஒரு கி.மீக்கு ரூ6 செலவாகியுள்ளது.
இது போக 4 முறை ரோடு டிரிப் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் சராசரியாக 1000 கி.மீ பயணம் செய்துள்ளார் இதற்கு ரூ1.2 லட்சம் செலவாகியுள்ளது. தற்போது அந்த காரை ரூ 1.2 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதுவரை அவர் செய்த செலவில் காரை விற்றது மூலம் கிடைத்தத ரூ1.2 லட்சத்தை கழித்தால் இதுவரை அவர் ரூ11.11 லட்சத்தை காரில்பயணிப்பதற்காக செலவு செய்துள்ளார்.

இதுவே அவர் இதை கேப் மூலம் செய்திருந்தார் வாரநாட்களில் இவர் அலுவலகத்திற்கு பயணிப்பதற்காக மட்டும் ரூ8.87 லட்சம் செலவு செய்திருப்பார். ஒரு நாளுக்கு 25கி.மீ என கணக்கிட்டு ஒரு கி.மீக்கு ரூ27 என கணக்கீடு செய்துள்ளார். வாரயிறுதி நாட்களில் பயணிப்பதற்கு ஒர வாரத்திற்கு 15 கி.மீ தான் என்தால் ஒரு கி.மீக்கு ரூ20 என கணக்கிட்டால் ரூ78,000 வருகிறது. இது போக ரோடு டிரிப் செல்ல ஒரு டிப்பிற்கு ரூ20,000 என கணக்கிட்டு ஆண்டிற்கு 4 டிரிப் என 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ரூ4 லட்சம் வரை செலவு செய்திருப்பார்.
இதை எல்லாம் மொத்தமாக கணக்கிட்டால் ரூ13.55 லட்சம் மொத்தம் இவருக்கு கார் இல்லை என்றால் செலவாகியிருக்கும். இதுவே இவர் சொந்தமாக கார் வைத்திருந்ததால் ரூ2,00,000 லட்சம் கூடுதலாக செலவாகியுள்ளது. அதாவது சொந்தமாக கார் வாங்கியதால் ரூ5 லட்சம் செலவை மிச்சப்படுத்தியுள்ளார்.
இந்த பதிவில் அவர் உங்கள் பொருளாதார முடிவுகளை பொதுவான அறிவுரையின் அடிப்படையில் டுக்காதீர்கள் எனவும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொருளாதார அறிவுரை தேவைப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல திட்டமிட்டு முடிவெடுங்கள் என இவர் பரிந்துரை செய்துள்ளார். இவர் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து சொந்த கார் வாங்குவதில் இவ்வளவு லாபம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் சொந்தமாக கார் வாங்கும் முடிவை எடுக்கும் முன்பு அதனால் உங்களுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை உங்களின் தேவையை பொருத்து நீங்களே முடிவு செய்யுங்கள். இது உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை தரும். மற்றவர்களின் பொதுவான அறிவுரையில் கார் வாங்கும் முடிவை எடுக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications









