ஓஎல்எக்ஸ்-இல் கார் வாங்க வந்தவர்கள் ஓனரைக் கடத்தியதால் அதிர்ச்சி!

Written By: Krishna

நியூஸ் சேனல்களையும், செய்தித் தாள்களையும் பார்க்கும்போது ஏதோ திகில் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வுதான் தற்போது எழுகிறது. அந்த அளவுக்கு கொலை, கொள்ளை, பாலியல் வனகொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன. திருட்டுச் சம்பவங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ருத்ரா படத்தில் நாயகன் வங்கியில் கொள்ளையடிப்பதைப் போல நூதனமாகத் திருடி ஏமாற்றும் கயவர் கூட்டம் பெருகிவிட்டது.

இப்படித்தான் ஒரு சம்பவம், மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது. ஓஎல்எக்ஸ்-இல் எதை வேண்டுமானாலும் வித்துடுங்க என்று தனுஷ் விளம்பரப்படுத்தினாரே... அந்த ஆன்-லைன் அப்ளிகேஷன் வழியாகவே ஒருவரை கடத்திய சம்பவம்தான் அந்த மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது, பர்தமான் பகுதியைச் சேர்ந்த டஸ்கின் என்பவர், தனது நீல நிற பழைய மாருதி எர்டிகாவை விற்பனை செய்ய ஓஎல்எக்ஸ் தளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

அதைப் பார்த்து மர்ம நபர்கள் இருவர் கடந்த 25-ஆம் தேதியன்று அவரை அணுகியுள்ளனர். டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என்று டஸ்கினிடம் அவர்கள் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. அதற்கு ஒப்புக் கொண்ட அவர், காரில் அவர்களுடனேயே பயணம் செய்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் டஸ்கினில் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் என்ன ஆனார்? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. இதுதொடர்பாக அவரது உறவினர்களும், நண்பர்களும் பர்தமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மர்ம நபர்கள் எதற்காக டஸ்கினைக் கடத்தினார்கள்? முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு நடுவே கடத்தப்பட்ட மாருதி எர்டிகா கார், ராஞ்சி - ஜாம்ஷெட்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள சல்காதி என்ற கிராமத்தில் ஆள் அரவமின்றி நின்று கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், லேசாக எரிந்த நிலையில் காணப்பட்ட அந்தக் காரினைக் கைப்பற்றினர். காரை விட்டு விட்டு டஸ்கினைக் கடத்திக் கொண்டு போனது ஏன்? என்பது குறித்த விசாரித்து வரும் போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக வலை தளங்களும் சரி... ஆன் - லைன் தளங்களும் சரி... எத்தனையோ முகம் தெரியாத நபர்களை நண்பர்களாக்கலாம்... அதேவேளையில், அதில் எத்தகைய அபாயங்களும் ஒளிந்திருக்கின்றன? என்பதற்கு இந்தச் சம்பவமே சாலச் சிறந்த உதாரணம்... ஓஎல்எக்ஸ், ஃபேஸ் புக், டுவிட்டர் உள்ளிட்ட வலை தளங்களைப் பயன்படுத்தும்போது வாசகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த செய்தி வாயிலாக அறிவுறுத்துவது டிரைவ் ஸ்பார்க்கின் கடமை...

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Owner Abducted During Test Drive!
Please Wait while comments are loading...

Latest Photos