மூனரை கோடி ரூபா கார்ல வந்தது அவரா! ஏறி உக்காருங்கன்னு சொன்னதும் போலீஸ்காரர் குழந்தையாவே மாறீட்டாரு!
இந்திய சாலைகளில் லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் சூப்பர் கார்களை (Super Cars) பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயமாக உள்ளது. சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்களில், லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார்களை ஒரு சிலர் வைத்துள்ளனர். ஆனால் அவை சாலைகளில் அரிதாகவே தென்படுகின்றன. இதனால் அனைவராலும், லம்போர்கினி சூப்பர் கார்களை நேரில் பார்க்க முடியாத சூழல் உள்ளது. இன்னும் ஒரு முறை கூட லம்போர்கினி சூப்பர் கார்களை சாலையில் பார்த்தது கிடையாது என சொல்பவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்.
இதன் காரணமாக லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார்களை சாலையில் பார்த்தால், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் கூட, தங்களையே அறியாமல் குழந்தையாக மாறி விடுகின்றனர். இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் ஹைதராபாத் (Hyderabad) சாலையில் நிகழ்ந்துள்ளது.

சாபூ நிஷாந்த் (Saboo Nishant) என்பவரை பற்றிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கடந்த காலங்களில் நீங்கள் வாசித்திருக்கலாம். இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மிகவும் பிரபலமாக உள்ள சாபூ நிஷாந்த், லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) காரை சொந்தமாக வைத்துள்ளார். இந்த காரில் பயணம் செய்யும் வாய்ப்பை, வெகு சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அவர் வழங்கியிருந்தார்.
இந்த வரிசையில் காவல் துறையை அதிகாரி ஒருவருக்கு தனது லம்போர்கினி ஹூராகேன் காரில் அமரும் வாய்ப்பை, சாபூ நிஷாந்த் கொடுத்துள்ளார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை சாலையில் பார்த்தால், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் குழந்தையாக மாறி விடுவார்கள்.

இதற்கு இந்த காவல் துறை அதிகாரியும் விதிவிலக்கு அல்ல. கூடுதலாக அவருக்கு காரின் உள்ளே அமரும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு, அந்த காவல் துறை அதிகாரி புகைப்படங்களையும் எடுத்து கொண்டார். இந்த வீடியோவை, சாபூ நிஷாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், காவல் துறை அதிகாரி, குழந்தை போல் நடந்து கொள்வதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. அத்துடன் சக காவல் துறை பெண் அதிகாரி ஒருவரை அழைத்து, அவர் புகைப்படம் எடுத்து கொள்வதையும் நம்மால் காண முடிகிறது.
சம்பவ இடத்தில் என்ன நடந்தது? என்பதை, சாபூ நிஷாந்த் தனது பதிவிலேயே கூறியுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு: காவல் துறை அதிகாரிகள் எனது லம்போர்கினி காரை நிறுத்தினர். ஆனால் அனைத்தும் சரியாக இருந்த காரணத்தால், அபராதம் எதுவும் விதிக்கவில்லை. ஆனால் எனது லம்போர்கினி காரில் புகைப்படங்களை எடுத்து கொள்ள அனுமதி கேட்டனர்.
காவல் துறை சீருடையில் உள்ளவர்கள் கூட, சூப்பர் கார்கள் மீது பேரார்வம் கொண்டவர்களாக இருப்பதை பார்க்கும்போது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் காவல் துறை அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்பு சூப்பர் பைக்குகள் பலவற்றை நிறுத்தி, அதன் விலை எவ்வளவு? எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்? என்பதை போன்ற விபரங்களை எல்லாம் காவல் துறை அதிகாரிகள் ஆர்வமாக கேட்டுள்ளனர். ஒரு சில காவல் துறை அதிகாரிகள், உரிமையாளரிடம் அனுமதி பெற்ற பிறகு, அந்த சூப்பர் பைக்குகளை ஓட்டி பார்க்கவும் செய்துள்ளனர்.
சாபூ நிஷாந்த் வைத்துள்ள லம்போர்கினி ஹூராகேன் காரில், 4.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 571 பிஹெச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு, சுமார் 3.50 கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாபூ நிஷாந்த் கூறியதை போல், சீருடையில் உள்ள காவலர்கள், சூப்பர் கார்களின் மீது பேரார்வம் கொண்டவர்களாக இருப்பது, உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், தங்களுக்கும் இந்த காரில் பயணிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என சாபூ நிஷாந்த்திற்கு கமெண்ட் பாக்ஸ் மூலமாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








