தரத்தில் இவ்ளோ ஒசந்ததா இன்னோவா க்ரிஸ்டா! 2.50 லட்சம் கிமீ பயன்பாட்டிற்கு பின்னரும் புதுசு போல ஓடிட்டு இருக்கு!
இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவா-வும் ஒன்று. இது ஓர் எம்பிவி ரக காராகும். ஃபேமிலியுடன் ஜாலியாக ட்ரிப் போக இந்த காரும் உகந்ததாகக் காட்சியளிக்கின்றது. இந்த காரணத்திற்காகவே இந்தியர்கள் பலர் தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெரிய உருவத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்ற காராகவும் இது காட்சியளிக்கின்றது.
அதிக இட வசதி, நிறைய சொகுசு அம்சங்கள் மற்றும் நீடித்து உழைக்கும் திறன் என அனைத்திலும் இந்த கார் தலைசிறந்ததாக இருக்கின்றது. இதனால்தான் இந்த கார் மாடலுக்கு நாட்டு மக்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு மிக சிறப்பாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் உள்ள ஓர் இன்னோவா க்ரிஸ்டா 2.5 லட்சம் கிமீட்டர்கள் பயணத்திற்கு பின்னரும் புத்தம் புதிதுபோல் மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் ஓர் விளாக்கரின் சமீபத்திய வீடியோ வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அந்த விளாக்கர் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்புவதற்காக டொயோட்டா இன்னோவா காரை புக் செய்திருக்கின்றார். அந்த பயணத்தின்போது, தொடங்கிய சிறிய பேச்சுவார்த்தையின் வாயிலாகவே அந்த டொயோட்டா இன்னோவா கார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான கிமீ டிராவல் செய்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.
பொதுவாக, ஒரு சிலர் காரிலோ அல்லது பேருந்திலோ பயணிக்கும்போது தன்னுடன் பயணிக்கும் சக பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தையிலேயே இன்னோவா குறித்த பல்வேறு சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த டொயோட்டோ இன்னோவா ஓர் 2019 மாடல் ஆகும். ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆகின்ற நிலையில், அந்த கார் 2.5 லட்சம் கிமீ தூரம் வரை டிராவல் செய்திருக்கின்றது. இருப்பினும், இப்போதும் புதிதுபோல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மிக சிறப்பாக டிரைவர் அந்த காரை பராமரித்துக் கொண்டிருப்பதால் உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறமும் புதிதுபோல் காட்சியளிக்கின்றது.
சின்ன கிழிசல், துர்நாற்றம்கூட இல்லாத வண்ணம் அவர் அந்த காரை பராமரித்துக் கொண்டிருக்கின்றார். இத்தகைய கை தேர்ந்த பராமரிப்பையே அவர் அந்த காரின் எஞ்ஜின் விஷயத்திலும் மேற்கொண்டு வருகின்றார் என கூறப்படுகின்றது. இதனாலேயே 2.5 லட்சம் கிமீ தூரம் டிராவல் செய்த பின்னரும் அந்த கார் புதிதுபோல் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த தகவல் டொயோட்டா இன்னோவா மீது இருக்கும் மரியாதையை மேலும் கூட்ட செய்யும் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், அது அதிக தரம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டது என்பது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது. டொயோட்டாவின் பெரும்பாலான தயாரிப்புகள் நீடித்து உழைக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.
இதற்கு ஓர் சான்றாகவும் இந்த கார் உள்ளது. இதற்கு முன்னாதக இதே டிரைவர் மஹிந்திரா ஸைலோ, எக்ஸ்யூவி 500 மற்றும் பழைய டொயோட்டா இன்னோவா கார்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்த கார்களைக் காட்டிலும் அவர் தற்போது பயன்படுத்தி வரும் இன்னோவா க்ரிஸ்டாவே மிக சிறந்தது என தெரிவித்து உள்ளார்.
அதிக இட வசதி, மிகுந்த கம்ஃபோர்ட்டான டிராவல் அனுபவத்தை இந்த கார் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த காரால் தான் இதுவரை எந்த பிரச்னையையும் சந்தித்தது இல்லை. இப்போது வரை பெரும்பாலான பாகங்கள் ஸ்டாக் பாகங்கள் மட்டுமே, எந்த பாகத்தையும் தான் மாற்றவில்லை என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
இதைப் போலவே தான் பயன்படுத்தி வந்த பழைய இன்னோவாவும் மிக சிறந்த வாகனம் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார். அந்த வாகனத்தில் அவர் 8 லட்சம் கிமீ வரை டிராவல் செய்ததாக கூறி மேலும் ஆச்சரியத்தை கிளப்பிவிட்டார். இந்த அளவிற்கு அந்த கார்கள் நீடித்து உழைக்க அவரின் பராமரிப்பு யுக்தியே காரணமாக இருக்கின்றது.
அந்த ஓட்டுநர் தான் பயன்படுத்தும் கார்களை ஒவ்வொரு 10 ஆயிரம் கிமீட்டருக்கும் ஒரு முறை சர்வீஸ் விட்டுவிடுவாராம். தற்போது பயன்படுத்தி வரும் இன்னோவா க்ரிஸ்டாவையும் அவர் இவ்வாறே பராமரித்து வருகின்றார். ஒவ்வொரு சர்வீஸ்க்கும் அவர் ரூ. 12 ஆயிரம் வரை அவருக்கு செலவாகுவதாகவும் கூறுகின்றார்.
சிறந்த பராமரிப்பின் காரணமாக அவருக்கு நல்ல மைலேஜ் கிடைப்பதாக கூறியுள்ளார். நகர்புற பயன்பாட்டின்போது லிட்டர் ஒன்றிற்கு அவருடைய இன்னோவா க்ரிஸ்டா 12 கிமீ முதல் 13 கிமீ வரையிலும், நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தும்போது ஒரு லிட்டருக்கு 16 கிமீ முதல் 17 கிமீ வரையிலும் அந்த கார் மைலேஜ் தருவதாக கூறுகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைவர் ரைடு ரிவியூ தகவலாகவே தன்னுடைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா குறித்து ஒவ்வொரு தகவலையும் புட்டு புட்டு வைத்துவிட்டார். இந்த தகவல்கள் இன்னோவா க்ரிஸ்டா மீது இருந்த மரியாதையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. மரியாதையை மட்டுமல்ல மதிப்பையும் அதிகப்படுத்தும் வகையில் இந்த தகவல் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








