கடல் அலையில் சாகசம்: பவர் போட் போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை

Written By: Azhagar

கடல் அலையில் சீறிப் பாயும் பவர் போட் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் மூன்று நாட்களாக நடைபெற்றன. தனிப்பட்ட நபர் போட்டியாக மட்டும் இல்லாமல்,

பவர் போட் விளையாட்டு போட்டிகளில் குழுவாகவும் பல வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற பவர் போட் விளையாட்டு போட்டி

இந்த விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றிபெற்ற வீரர்கள் மத்தியில் ஒரு நொடி மட்டுமே வித்தியாசப்பட்டது. குறிப்பாக பலேனோ ஆர்.எஸ். பூஸ்டர்

குழுவை சேர்ந்த சாம் மற்றும் டெய்சி இணை, 0.1 மைக்ரோ விநாடி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டது. அசத்தலாக விளையாடி 2வது இடம் பிடித்த இந்த இணைக்கு

பைலட்டாக யூகேவை சேர்ந்த ஹென்றியும் மற்றும் நேவிகேட்டராக கெவின் நொர்வெல்லும் உடனிருந்தனர்.

இந்தியாவில் நடைபெற்ற பவர் போட் விளையாட்டு போட்டி

பலருக்கும் சவால் விடுத்த இந்த அண்ணன் தங்கை கூட்டணியை பின்னுக்கு தள்ளி இந்தாண்டின் பவர் போட் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்றவர் இந்தியரான சி.எஸ். சந்தோஷ்.

இவருக்கு நேவிகெட்டராக மார்டின் ராபின்சன் உடனிருந்தார்.

இந்தியாவில் நடைபெற்ற பவர் போட் விளையாட்டு போட்டி

பரபரப்பாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் முதலிடத்தை பெற்றது பற்றி சி.எஸ் சந்தோஷ் "கடந்த 2 நாட்களாக போட்டை பயன்படுவத்தில் எனக்கு சிறு குழப்பமிருந்தது,

ஆனால் தற்போது கிடைத்திறக்கூடிய இந்த வெற்றியின் மூலம், போட்டை லாவகமாக பயன்படுத்த கற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.

இந்தியாவில் நடைபெற்ற பவர் போட் விளையாட்டு போட்டி

இந்தியாவில் நடைபெற்ற பவர் போட் விளையாட்டு போட்டியில் சி.எஸ் சந்தோஷூடன் கௌரவ் கில் என்ற மற்றுமொரு இந்தியர் கலந்துகொண்டார். இவர் 2016ம் ஆண்டு

நடைபெற்ற ஆசிய பசிபிக் ரேலியில் சாம்பியன் படத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடைபெற்ற பவர் போட் விளையாட்டு போட்டி

விளையாட்டின் முடிவிலிருந்து முன்னிலையில் இருந்து வந்த கௌரவ் கில் 10வது லேப்பில் இருந்தபோது தனது P1 Panther boatயில் இயந்திர கோளாறு ஏற்படவே, போட்டியில் சறுக்கலை சந்தித்தார். இதனால் இந்தாண்டிற்கான பவர் போட் போட்டியில் கௌவரவிற்கு 5வது இடமே கிடைத்தது.

2017 மாருதிசுசுகி டெசர்ட் ஸ்டார்ம் போட்டிகளின் புகைப்படத்தொகுப்பு:

English summary
British P1 Powerboat Superstock Champs, Sam and Daisy Coleman aced both the races on day 1 and 2.
Story first published: Tuesday, March 7, 2017, 11:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark