லாம்போர்கினி, ஃபெராரி கார்ல கூட இந்த கம்பெனி இன்ஜின் ஆயில்தான் யூஸ் பண்ணுறாங்க அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இத்தாலி நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தான் பக்கீலோ. இந்நிறுவனம் 94 ஆண்டுகளாக இன்ஜின் ஆயில் உற்பத்தி துறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருக்கும். அதிக தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட தயாரிப்புகளாக இருக்கும் என்ற பெயரும் பெற்றுள்ளது. உலகின் வேகமாக பயணிக்கும் கார்களான லம்போர்கினி, ஃபெராரி போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களுக்கு இந்நிறுவனத்தின் இன்ஜின் ஆயில் தான் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இந்த பக்கீலோ லூப்ரிகென்ட்ஸ் நிறுவனம் வாகனங்களுக்கான இன்ஜின் ஆயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜின் ஆயில் இந்தியா வாகனங்களுக்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டதாக இருக்கிறது. இதில் புதிய தொழில்நுட்பங்களை உட்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக ஆல்ஃபா தொழில்நுட்பம் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இன்ஜின் ஆயிலை தயாரித்து உள்ளார்கள். இது குறித்த விளக்கமான வீடியோவை கீழே வழங்கி உள்ளோம்.
பக்கீலோ லூப்ரிகெட்ன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் கிரிம்டான் எம்பிகே ரேஸிங் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. இந்த இன்ஜின் ஆயில் முன்னரே சொன்னது படி ஆல்ஃபா தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இன்ஜின் ஆயில் ஆகும். இந்த தொழில்நுட்பமானது அதிக உராய்வு ஏற்படும் போது வெளியேற்றப்படும் வெப்பத்திலிருந்து வாகனத்தின் உதிரி பாகங்களை காக்க உதவுகிறது.

மேலும் இந்நிறுவனம் இன்ஜின் ஆயிலை தயாரிக்க வெர்ஜின் அடிப்படையிலான இன்ஜின் ஆயிலை தயாரிக்கிறார்கள். இதை பயன்படுத்துவதால் வாகன இன்ஜின் ஆயுள் அதிகரிப்பும் பெர்ஃபார்மென்ஸ் அதிகரிப்பும் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த ஆயில் குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை எங்களிடம் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








