இந்தியால ஒரு ஊர்ல சேல்ஸ் ஆகுற கார் தான் பாகிஸ்தான் நாட்டுலேயே மொத்தமா சேல்ஸ் ஆகிருக்குது!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த நவம்பர் மாத கார் விற்பனை சுமார் 68% குறைந்துள்ளதாக தற்போது அறிக்கைகள் வெளியாகி உள்ளன. அந்நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டிலுள்ள மக்கள் மிகப்பெரிய பணம் நெருக்கடிக்கு சிக்கி உள்ளனர். வாகனங்களின் விலையும் மிக அதிகமாகி உள்ளது. இதனால் அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை என்பது மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் மிகப்பெரிய பண நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் அந்நாட்டில் உள்ள மூலப் பொருட்களின் விலை அதிகமாகி அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகமாகி விட்டது. இதனால் அந்நாட்டில் கார்களின் விலை அதிகமாகி விட்டது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்கள் தயாரிக்கும் பணியை நிறுத்திவிட்டனர்.

pakistan car sales

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் வாகன விற்பனை என்பது மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் மொத்தமே 4875 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானில் மொத்தம் 15,432 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 68% குறைவான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

சில மாதங்களாகவே பாகிஸ்தானில் வாகன விற்பனை என்பது மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதமும் இந்த நிலையே தொடர்கிறது. எதிலிருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு மிகப் பெரிய போராட்டத்தை மேற்கொண்டாலும் அதற்கான எந்த பலனும் கிடைத்தவாறு தெரியவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்குள்ளேயே சிக்கி தவித்து வருகிறது.

pakistan car sales

இதே நேரத்தில் இந்தியாவில் வாகன விற்பனை என்பது மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 2.88 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதில் மாருதி சுஸூகி நிறுவனம் மட்டும் இந்தியாவில் 1.34 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மட்டும் மொத்தம் 80 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன அதில் 18,000 கார்களாக உள்ளன.

அதாவது டில்லியில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை விட பாகிஸ்தான் நாட்டில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மிகக் குறைவான கார் விற்பனைக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. மிக முக்கியமான காரணமாக புதிய காரின் விலை தான் பெரிய அளவில் கூறப்படுகிறது. தற்போது அந்நாட்டில் கார் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு அதிகமாகி விட்டதால் கார்களின் தயாரிப்பு செலவு அதிகமாகி கார்களின் விலை பல மடங்கு அதிகமாகி விட்டது.

pakistan car sales

இதுபோக அந்நாட்டில் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன்களும் மிக மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது. தற்போது வாகன கடன்களுக்கு மிக அதிகமான வட்டி வசூலிக்கப்படுவதால் அந்நாட்டில் வாகனங்களை கடன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து விட்டார்கள். இதனால் வாகன விற்பனை என்பது மிக மோசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலேயே வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. பாகிஸ்தானின் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமான பாக் சுஸூகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 72 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அடுத்ததாக இண்டஸ் மோட்டார் கம்பெனி 71% சதவீத வீழ்ச்சியையும் ஹோண்டா அட்லஸ் கார் என்ற நிறுவனம் 49 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் ஒரு செய்தி என்றால் பாகிஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் டிராக்டர்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தை விட கடந்த நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன என்ற செய்தி சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கடந்த அக்டோபர் மாதம் விற்பனையான டிராக்டர் எண்ணிக்கையை விட கடந்த நவம்பர் மாதம் விற்பனையாளர் எண்ணிக்கை குறைவு தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகிஸ்தான் நாட்டின் நிலவிவரும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி அந்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் பல மாதங்களாக வாகனங்களை தயாரிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். சில நிறுவனங்கள் பாகிஸ்தானில் தங்கள் ஆலையை மூடிவிட்டு வெளியேறிவிட முடிவு செய்து வருகின்றனர். இது அந்நாட்டிற்கு மிக நெருக்கடியான காலகட்டம் தான்

More from DriveSpark

Article Published On: Monday, December 18, 2023, 16:15 [IST]
English summary
Pakistan car sales november plummet below 5000 units
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X