ஆல்டோ விலை ரூ 29 லட்சம், வேகன்ஆர் விலை ரூ 37 லட்சமா? என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் எங்க நடக்குது?
பாகிஸ்தானில் ஒரு ஆல்டோ காரின் விலை ரூபாய் 22 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. இந்த பணத்தை வைத்து ஒரு குட்டி பங்களாவே கட்டலாம் என தற்போது நெட்டிசன்கள் இந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு மிக வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. உலக அளவில் உள்ள பைனான்ஸ் அமைப்புகள் கூட பாகிஸ்தான் நாட்டிற்கு கடன் வழங்க மறுத்து விட்டது.

இதனால் அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உள்நாட்டில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கான மூலப்பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது வெளிநாட்டில் உள்ள விற்பனையாளர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பொருட்களை விற்பனை செய்ய தயங்கி வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார சிக்கலில் மிகப்பெரிய தாக்கம் ஆட்டோமொபைல் செக்டாரில் தான் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தயாரிக்கப்படும் கார்களுக்கு உதிரிபாகங்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு பாகிஸ்தானில் வைத்து தயாரிக்கப்படுகிறது. தற்போது உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஹோண்டா சுஸூகி போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை தற்காலிகமாக பாகிஸ்தானில் நிறுத்திவிட்டன. இதனால் தற்போது பாகிஸ்தான் நாட்டில் விற்பனையாகி வரும் கார்களின் விலை சரமாரியாக ஏறி வருகிறது.

இந்தியாவில் மாருதி சுஸூகி ஆல்டோ கார் ரூபாய் 5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. தற்போது அதே கார் பாகிஸ்தானின் ரூபாய் 29.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் ஆல்டோ கார் விற்பனையாகிறது
இதில் விஎக்ஸ் என்ற வேரியண்ட் ரூபாய் 22.51 லட்சம் என்ற விலையிலும் விஎக்ஸ்ஆர் என்ற வேரியன்ட் ரூபாய் 26.12 லட்சம் என்ற விலையிலும், விஎக்ஸ்ஆர் ஏஜிஎஸ் என்ற வேரியண்ட் ரூபாய் 27.9 லட்சம் என்ற விலையிலும், விஎக்ஸ்எல் ஏஜிஎஸ் என்ற வேரியன்ட் 29.35 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை எல்லாம் காருக்கு அக்ஸசரீஸ் எதுவும் சேர்க்காத விலையாகும்.

இந்த விலைக்கு இந்தியாவில் ஒரு நல்ல இடத்தில் ஒரு குட்டியான சொகுசு பங்களாவே கட்டிவிடலாம். அவ்வளவு அதிகமான விலைக்கே பாகிஸ்தான் கார்கள் விலை அதிகமாகியுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் டிமாண்ட் மற்றும் சப்ளை ஆகியவைதான். பாகிஸ்தானில் கார்களின் சப்ளை குறைந்துவிட்டது ஆனால் கார்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆல்டோ கார் மட்டுமல்ல சுஸூகி நிறுவனத்தின் வேகன்ஆர் காரும் பாகிஸ்தானில் அதிக விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. அந்த கார் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களகங் விற்பனையாகிறது இதில் விஎக்ஸ்ஆர் வேரியன்ட் ரூபாய் 32.14 லட்சம் என்ற விலையிலும், விஎக்ஸ்எல் என்ற வேரியன்ட் ரூபாய் 34.12 லட்சம் என்ற விலையிலும் விஎக்ஸ்எல் ஏஜிஎஸ் என்ற வேரியண்ட் ரூபாய் 37.41 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

பாகிஸ்தான் பண மதிப்பு தற்போது இந்திய பண மதிப்பை விட பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் ஒரு ரூபாய் இந்திய மதிப்பில் வெறும் 29 காசுக்கு மதிப்பிடப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் ரூபாய் 21 லட்சம் என்றால் இந்திய மதிப்பில் ரூபாய் 8.5 லட்சத்திற்கு சமம். அப்படி பார்த்தாலும் இந்தியாவில் விற்பனையாகும் ஆல்டோ காரின் விலையை விட பாகிஸ்தானில் விற்பனை ஆகும் காரின் விலை அதிகமாக இருக்கிறது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கும்போது அந்த நாட்டில் உள்ள பொருட்களின் விலை டிமாண்ட் மற்றும் சப்ளையை மையமாக வைத்தே இருக்கும். அதன்படி பாகிஸ்தானில் தற்போது இருக்கும் பொருளாதார சிக்கலை பயன்படுத்தி இப்படியான விலை அதிகரிப்பை செய்கின்றனர். இதனால் அந்நாட்டில் கார்களின் விலை உச்சத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









