சொந்த நாட்டிலேயே மண்ணை கவ்விய பாகிஸ்தான் வீரர்களிடம் இவ்வளவு காஸ்லியான காரெல்லாம் இருக்குதா?
நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை டிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி பரிதாபமான நிலையில் வெளியேறி உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது போட்டி நடக்காமலேயே அந்த அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தானில் வைத்து இந்த போட்டிகள் நடந்தாலும் சொந்த மண்ணிலேயே இந்த அணி வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அந்நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு காஸ்ட்லியான கார்களை வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பலரை கவர்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமானது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி .ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய அணிகள் எல்லாம் சேர்ந்து இந்த கோப்பைக்காக போட்டியிடும். இப்படியாக இந்த போட்டி தற்போது பாகிஸ்தானில் வைத்து நடந்து வருகிறது. இந்தியா போட்டிகள் மட்டும் துபாயில் வைத்து நடக்கிறது.

சொந்த நாட்டிலேயே போட்டி நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான அணி இதில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. பலர் பாகிஸ்தான் அணியின் விளையாட்டை ரசிக்க ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் முதல் இரண்டு போட்டியில் அந்த அணி பரிதாபமான தோல்வியை சந்தித்தது. பின்னணியில் மூன்றாவது போட்டியில் நடக்காமல் போன காரணத்தால் அந்த அணி அந்த தொடரில் இருந்து பரிதாபமான வெளியேற்றத்தை சந்தித்துள்ளது.
என்னதான் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறினாலும் பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் பயன்படுத்தும் காஸ்ட்லியான கார்கள் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகிறார்கள். இப்படியாக பாகிஸ்தான் வீரர்களிடம் எவ்வளவு காசு இருக்கிறது என காணலாம் வாருங்கள்

பாகிஸ்தானின் பிரபலமான பேட்ஸ்மேனான பாபர் ஆசாம் அந்த அணிக்காக ஏகப்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான வீரராக இருக்கிறார். இவரிடம் ஏகப்பட்ட கார்கள் இருக்கின்றன. முக்கியமாக ஆடி ஏ5, லம்போர்கினி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய கார்கள் இருக்கிறது. இவரிடம் காஸ்ட்லியாக உள்ளது லம்போர்கினி நிறுவனத்தின் சார்பாக 26 கோடி என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது இது போக பல காஸ்ட்லியான பைபிளையும் இவர் சொந்தமாக வைத்திருக்கிறார்.
அடுத்ததாக ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் நாட்டின் பிரபலமான பந்துவீச்சாளராக இருக்கிறார். இவரிடமும் ஏகப்பட்ட காஸ்ட்லியான கார்கள் இருக்கிறது. முக்கியமாக டொயோட்டா நிறுவனத்தின் பார்த்துடர் மற்றும் ஆடி நிறுவனத்தின் சொந்தமாக வைத்திருக்கிறார். இவரது பந்துவீச்சு சர்வதேச அளவில் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு இவருக்கு கார்களும் தற்போது பிரபலமாக இருக்கின்றன.

பாகிஸ்தானில் உள்ள பிரபலமான மற்றொரு வீரர் ரிஸ்வான். இவரும் பாகிஸ்தான் அணியில் மிக முக்கியமான வீரராக இருக்கிறார். இவரிடம் பெரிய அளவுக்கு காஸ்ட்லியான கார்கள் எல்லாம் இல்லை. இவர் ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் காரை பயன்படுத்தி வருகிறார். பாகிஸ்தானில் பிரபலமான வீரராக இருந்தாலும் இவரிடம் காஸ்ட்லியான கார்கள் இல்லாதது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறினாலும் அந்த அணி சிறப்பாக விளையாடியது என்று சொல்லலாம். ஒரு சில இடங்களில் அவர்கள் செய்து தவறுதான் அவர்கள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் உள்ள காஸ்ட்லியான கார்கள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இது போக பல வீரர்களிடம் காசு என கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









