பணத்தை ரெடி பண்ணுங்கோ... அடுத்து ஒரு பறக்கும் கார் ரெடியாகருகிறது புதிய பிஏஎல் வி-ஒன் பறக்கும் கார்!

By Saravana

ஆல்ட்டோவுல போனாலும் சரி, ஆடியில போனாலும் சரி, இப்போ இருக்குற டிராஃபிக் ஜாம்ல வீடு போய் சேர்றது தினசரி போராட்டாமா மாறிடுச்சு. காலைல எட்டேகாலுக்கு விட்டா, கரெக்ட் டைமுக்கு ஆபிசுக்கு ரீச்சாயிடலாம் அப்படிங்கிற நம்பிக்கையெல்லாம் குழி தோண்டி புதைச்சுடணும். காலைல ஏழரைக்கு விட்டாத்தான் ஆபிஸ்ல 9 மணிக்காச்சும் பஞ்ச் அடிக்கலாம். டிராம்ஃபிக் ஜாம் பத்தி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இப்படியே போனா, பேசாம ஆபிஸ்லயே தங்கிட்டு வாரம் ஒருவாட்டி வீட்டுக்கு போக வேண்டியதுதான். இல்லையின்னா, ஆபிஸ் பக்கத்துல ஒரு வீட்டை வாடகைக்குத்தான் பிடிக்கணும் போல....!

நரகமாகிப் போன நகர வாழ்க்கையில் பலரின் புலம்பல் இதுதான். இதுபோன்ற பலரின் புலம்பல்களுக்கு விடை காண முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் சாலை மார்க்க போக்குவரத்துக்கு தீர்வு காணும் வகையில் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில், பறக்கும் கார்களை தயாரிக்கும் முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் உலக அளவில் தீவிரமடைந்துள்ளன. ஏரோமொபில், டெர்ராஃப்யூஜியா போன்ற பறக்கும் கார்கள் இறுதிக் கட்ட சோதனையில் இருப்பது பற்றிய செய்திகளை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள். இந்த வரிசையில், பிஏஎல் வி- ஒன் என்ற பறக்கும் காரும் விரைவில் இணைய இருக்கிறது. இந்த புதிய பறக்கும் கார் பற்றியத் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹாலந்து தயாரிப்பு

ஹாலந்து தயாரிப்பு

ஹாலந்து நாட்டை சேர்ந்த PAL-V என்ற நிறுவனம்தான் இந்த புதிய பறக்கும் காரை உருவாக்கி வருகிறது. சாலையில் கார் போன்றும், ஆகாயத்தில் குட்டி ஹெலிகாப்டர் போன்றும் பறக்கும் திறன் கொண்டதாக இரட்டை பயன்பாட்டு அம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

 பெயர் காரணம்

பெயர் காரணம்

PAL-V என்பது Personal Air and Land Vehicle என்பதை குறிக்கிறது. தரையிலும், ஆகாயத்திலும் பயன்படுத்தக்கூடிய வாகனம். அதில் முதலாவதாக வெளியிடப்பட்டுள்ள மாடல் என்பதை குறிக்கும் விதத்தில் ஒன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

இந்த பறக்கும் கார் மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்போது போக்குவரத்துக்கு இடையூறு தராத வகையில், இதன் இறக்கைகள் உடலுடன் சுருங்கிக் கொள்ளும். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு தராது. அதாவது, மூடிய அமைப்புடைய மூன்று சக்கர வாகனமாக மாறிவிடும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த பறக்கும் காரில் இரண்டு பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதி உள்ளது. சில சமயம், பைலட் போட்டு ஓட்டலாம். அல்லது பேச்சு துணைக்கு ஒரு ஆள் கண்டிப்பா தேவை. அப்படியும் இல்லாதபோது, இருவர் செல்லும்போது பயணச் செலவீனமும் மிச்சமாகும்.

 உறுதியான கட்டமைப்பு

உறுதியான கட்டமைப்பு

இதன் உடற்கூடு கார்பன் ஃபைபர், அலுமினிம், டைட்டானியம் போன்ற உறுதியும், இலகுவான உதிரிபாகங்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெறும் 679 கிலோ மட்டுமே எடை கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பறக்கும் காரில் 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 10 நொடிகளில் எட்டிவிடும் என்பதையும் மனதில் வையுயங்கள். அதாவது, ஒரு சக்திவாய்ந்த காருக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தும்.

ரேஞ்ச்...

ரேஞ்ச்...

இந்த காரில் 102 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில், சாலை மார்க்கமாக பயணித்தால் அதிகபட்சமாக 1,210 கிமீ தூரம் செல்லும். சாலையில் மணிக்கு 170 கிமீ வேகம் வரை பயணிக்க முடியும்.

 ஆகாய மார்க்கத்தில் ரேஞ்ச்...

ஆகாய மார்க்கத்தில் ரேஞ்ச்...

முழுமையாக எரிபொருள் நிரப்பியிருக்கும்போது அதிகபட்சமாக 350 கிமீ தூரம் முதல் 400 கிமீ தூரம் வரை பறக்க முடியும். அத்துடன், மணிக்கு 170 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

டில்ட் சிஸ்டம்

டில்ட் சிஸ்டம்

இந்த பறக்கும் காரின் விசேஷ தொழில்நுட்பங்களில் ஒன்று இதன் சக்கரங்களுக்கான சஸ்பென்ஷன் அமைப்பு சமநிலைப்படுத்தி அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆம், வளைவுகளில் திரும்பும்போது அதிக சமநிலையை தரும் வகையில் டில்ட் சிஸ்டம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

பிஏஎல்- வி ஒன் பறக்கும் கார் 4,000 அடி உயரத்திற்குள் பறக்கும். எனவே, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடர்பு தேவையில்லை. வர்த்தக வான் வழி போக்குவரத்து விதிமுறை வரம்பும் இதற்கு பொருந்தாது. எனவே, எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

 குறைந்த தூர டேக் ஆஃப்

குறைந்த தூர டேக் ஆஃப்

இந்த பறக்கும் காரை டேக் ஆஃப் செய்வதற்கும், தரை இறக்குவதற்கும் குறைந்த தூர ஓடுபாதை போதுமானது. அதாவது, 540 அடி நீள ஓடுபாதை இருந்தாலே டேக் ஆஃப் செய்துவிடவும், தரை இறக்கவும் முடியும்.

இயக்குவது எளிது

இயக்குவது எளிது

இந்த பறக்கும் காரை இயக்குவது எளிதாக இருக்கும். ஒரு பொத்தானை அழுத்தினால், வெறும் சில நிமிடங்களில் கார் போன்று சாலையில் இயக்குவதற்கும், ஹெலிகாப்டர் போன்று வானில் பறப்பதற்கும் தயாராகிவிடும்.

பார்வை திறன்

பார்வை திறன்

பிற பறக்கும் கார் மாடல்களை காட்டிலும், சாலையில் செல்லும்போது அருகில் வரும் பிற வாகனங்களை எளிதாக பார்த்து ஓட்டுவதற்கும், தரை இறக்கும்போதும் பைலட்டுக்கான பார்வை திறன் சிறப்பாக கிடைக்கும் விதத்தில் இதன் காக்பிட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ்

லைசென்ஸ்

இந்த பறக்கும் காரை வாங்கும் உரிமையாளர் இதனை ஓட்டுவதற்கு ஸ்போர்ட்ஸ் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தால் போதுமானது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஒருவேளை எஞ்சின் பழுதடைந்துவிட்டாலும், இந்த பறக்கும் காரை எளிதாக தரை இறக்க முடியும். அதாவது, எஞ்சின் இயக்கம் செயலிழந்து புரொப்பல்லர் இயக்கம் தடைபட்டாலும், இதன் மேலே பொருத்தப்பட்டிருக்கும் ரோட்டர் தொடர்ந்து இயங்கி, இந்த காரை பாதுகாப்பாக தரை இறக்கிவிடும்.

விற்பனை

விற்பனை

அடுத்த ஆண்டு பிஏஎல் வி-ஒன் பறக்கும் காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக பிஏஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தமாக 45 யூனிட்டுகள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

விலை

விலை

இந்த பறக்கும் கார் 2.95 லட்சம் டாலர்கள் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இந்த பறக்கும் காரை முன்பதிவு செய்ய விரும்பும் கோடீஸ்வரர்கள், உங்களது பகுதியில் இந்த பறக்கும் காரை பதிவு செய்வதறகு சட்ட ரீதியில் அனுமதி கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொண்டு முன்பதிவு செய்யவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
al-V One is a motorcycle and gyrocopter and costs $295,000.
Story first published: Friday, March 4, 2016, 19:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X