என்ன இவ்ளோ அழகா இருக்காங்க! சாதாரண காரில் வந்துட்டு போனது அவங்க பொண்ணா! பசங்க தூக்கத்தை கெடுத்துட்டாங்க!
திரைப்பட நடிகர், நடிகைகள் என்றாலே, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் (Luxury Cars) வலம் வருவார்கள். அவர்களை பொறுத்தவரையில், ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனங்களின் கார்கள் எல்லாம் சர்வ சாதாரணம். உச்ச நட்சத்திரங்கள் என்றால், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார்கள் கூட சாதாரணமான ஒரு விஷயம்தான்.
ஆனால் திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் விதிவிலக்காக சாதாரண கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் பலக் திவாரி (Palak Tiwari). இவர் மிக வேகமாக வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை ஆவார். நடிகை என்பதுடன், ஃபேஷன் மாடல் என்ற முகமும் இவருக்கு உண்டு.

பிரபல தொலைக்காட்சி நடிகையான ஸ்வேதா திவாரியின் (Shweta Tiwari) மகள்தான், பலக் திவாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சாதாரண எம்ஜி ஹெக்டர் (MG Hector) காரில் வலம் வந்த வீடியோ (Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
சிகப்பு நிற எம்ஜி ஹெக்டர் காரில், பலக் திவாரி ஒரு கட்டிடத்தின் முன்பு வந்து இறங்குவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. அதன்பின் அங்கு இருந்த புகைப்பட கலைஞர்களுக்கு பலக் திவாரி 'போஸ்' குடுக்கிறார். இதை தொடர்ந்து கட்டிடத்தின் உள்ளே சென்ற அவர், வேலை முடிந்ததும் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்து, காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

இந்த வீடியோ மும்பையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பலக் திவாரி சென்ற கட்டிடம், ஒரு தயாரிப்பு அலுவலகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏதோ வேலை விஷயமாக பலக் திவாரி எம்ஜி ஹெக்டர் காரில், அந்த தயாரிப்பு அலுவலகத்திற்கு வந்து சென்ற போதுதான், இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
பலக் திவாரி காரில் ஏறி புறப்பட்டபோது, விதிமுறைகளின்படி சீட் பெல்ட் (Seat Belt) அணிந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. பலக் திவாரி மட்டுமல்லாது, அவரது கார் டிரைவரும் சீட் பெல்ட் அணிகிறார். இது உண்மையிலேயே அனைவருக்கும் ஒரு நல்ல முன் உதாரணம்.
இந்தியாவில் காரில் பயணிக்கும் பலர் சீட் பெல்ட் அணிவதே கிடையாது. விபத்துக்களில் ஏராளமான உயிரிழப்புகளுக்கு இது மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால், பலக் திவாரியை போல், காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
சரி, அவரது எம்ஜி ஹெக்டர் காருக்கு வருவோம். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் டாடா ஹாரியர் (Tata Harrier) உள்ளிட்ட கார்களுடன், எம்ஜி ஹெக்டர் போட்டியிட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை (Price) 15 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் எம்ஜி ஹெக்டர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 22.72 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாமானிய மக்களுக்கு வேண்டுமானால், எம்ஜி ஹெக்டர் சற்று விலை உயர்ந்த காரை போல் தோன்றலாம். ஆனால் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு இது சாதாரண கார்தான். எனினும் பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினி (Hema Malini) போன்ற நட்சத்திரங்களிடமும் எம்ஜி ஹெக்டர் கார் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








