இன்ஜினியரிங் படிச்சவங்க எல்லாம் இங்க வாங்கப்பா! பாம்பன் பாலத்தை கட்டுவதில் இப்படி ஒரு சிக்கலா?

புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலத்தில் கட்டுமான பணிகளை தொடர புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை சமாளிக்க மிகப்பெரிய சவாலை கட்டுமான ஊழியர்கள் எதிர்கொள்ள உள்ளனர். இப்படியாக புதிய பாம்பன் பாலம் கட்டுவதில் என்ன சிக்கல் இருக்கிறது. இதை ஏன் அவர்கள் முன்னிலையில் திட்டமிடவில்லை உள்ளிட்ட விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் ராமேஸ்வரம் தனி தீவாக இருக்கிறது. ராமேஸ்வரத்தையும் இந்தியாவில் உள்ள மற்ற நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1913-ம் ஆண்டு தான் முதன்முதலாக ராமேஸ்வரத்தையும் ராமநாதபுரம் பகுதியையும் இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் கட்டப்பட்டது. முதலில் ரயில் பாலம் மட்டும் இருந்த நிலையில் தற்போது சாலை பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டுகளை தொடர்ந்தும் பாம்பன் பாலம் செயல்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முதல் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பாம்பன் பாலத்தை முழுமையாக நீக்கி அதற்கு பதிலாக அதற்கு அருகிலேயே புதிய பாடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

pamban bridge

இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கியது ஓராண்டிலேயே இந்த பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு 2021-ம் ஆண்டு இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்ட நிலையில் பல வேலை துவங்குவதற்கு முன்பாகவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பாலக்கட்டுமான பணிகள் தாமதப்பட்டன.

அதன் பிறகு இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழு வீட்டில் நடந்தது. தற்போது பாம்பன் பாலத்தை முழுமையாக கட்டமைக்கும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. பழைய பாலத்தில் பாலத்திற்கு நடுவே கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் பாலம் இரண்டு பகுதியாக தூக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய கட்டுமான படி நடுவே உள்ள பகுதி கப்பல் போகும் உயரத்திற்கு வழிவிட்டு மேலே லிப்ட் போல செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

pamban bridge

இப்படியாக கப்பல் வரும் நேரங்களில் புதிய பாலம் லிப்ட் போல குறிப்பிட்ட பகுதி மட்டும் குறிப்பிட்ட உயரத்திற்கு சென்ற பிறகு அந்த வழியாக கப்பல்கள் கடந்து செல்ல முடியும். இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் 2.08 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 238 அடி மட்டும் லிப்ட் போன்ற தூக்குபாலமாக அமைக்கப்படுகிறது. இது சுமார் 550 டன் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது புதிய சவால் ஒன்றை கட்டுமான ஊழியர்கள் சந்திக்க உள்ளனர். இந்த பாலத்திற்கு நடுவே மேல் எலும்பும் பகுதியை ஒரே கட்டமைப்பாக கொண்டு வந்து பாலத்தின் நடுவே பொருத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்காக தான் தொழில்நுட்பம் தற்போது நம்மிடம் இருக்கிறது.

pamban bridge

இப்படியாக சுமார் 1476 அடி தூரத்திற்கு மேலே எழும் பாலத்தை நாம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தில் கொண்டு வர வேண்டியது இருக்கிறது. இது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஏற்கனவே இந்த பணி கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதியே துவங்கி விட்டது. தற்போது வரை ஒரு மாதமாகியும் வெறும் 262 அடி மட்டுமே நகர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட இந்த லிப்ட் போன்ற தூக்கு பாலம் கொண்டு போகும் பாதையில் 2.65டிகிரி வளைந்து பாதை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 238அடி நீளமும் 52அடி அகலமும் கொண்ட இந்த லிப்ட் போன்ற அமைப்பு 550டன் எடை கொண்டதாக இருப்பதால் இதை நகர்த்திக் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கிடையில் பாதை வேறு 2.65டிகிரிக்கு திருப்பமாக இருப்பதால் இதில் பாலத்தை கொண்டு செல்ல மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 1476 அடியும் நேராக இருந்தால் சுலபமாக பாலத்தை மெல்ல மெல்ல நகர்த்தி அதில் வர வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்து விட முடியும். ஆனால் சற்று பாதை வளைவாக இருப்பதால் இதை கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இதற்காக பொறியாளர்கள் என்ன விதமான டெக்னிக்கைகளை பயன்படுத்த போகிறார்கள் என ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதற்கிடையில் மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் இந்த பால வேலைகளை முழுமையாக முடித்து அந்த பகுதி வழியாக ரயில் பயணத்தை துவக்க திட்டமிட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் புதிதாக பதவி ஏற்கும் அரசு முதல் 100 நாளில் செய்யப் போகும் சாதனை திட்டங்களில் இந்த பாலத்தை திறப்பதும் ஒரு முக்கியமான சாதனையாக இருக்கப் போகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2024, 7:00 [IST]
English summary
Pamban bridge india vertical lift rameswaram curve test
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X