தமிழ்நாட்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை உலகமே வியந்து பார்க்குது! காந்தி ஜெயந்திக்கு இந்தியர்களுக்கு அன்புபரிசு
புதிய பாம்பன் ரயில் பாலம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்காக தென்னக ரயில்வே தற்போது அதிகாரிகளை இந்த பணிக்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளது. இப்படியாக மக்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்புக்கிடையில் இருக்கும் இந்த பாம்பன் பாலம் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கிறது? இதற்கு முன்னர் இருந்த பாலத்திற்கும் தற்போது அமைக்கப்பட்டுள்ள காலத்திற்கும் என்ன வித்தியாசம் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ராமேஸ்வரம் என்ற பகுதி இந்திய பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவாக இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவை இணைக்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே ரயில் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து இருந்தது.

கடந்த 1988ம் ஆண்டு தான் இங்கு சாலை போக்குவரத்திற்கான பாலம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் வரை ராமேஸ்வரம் பகுதியையும் இந்தியாவின் மற்ற பகுதியுடன் இணைக்கும் ஒரே பாலமாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரயில் பாலம் தான் இருந்தது. இதுபோக மக்கள் படகு மூலமும் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்.
இந்த பகுதியில் பாலம் அமைப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் பகுதி என்பதால் மிக நீளமான பலமாக அமைக்க வேண்டும். அங்கு ரயில்கள் பயணம் செய்யும்போது அதிக காற்று இருந்தால் ரயில்கள் விபத்தில் சிக்ககூட வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் பாலம் அமைக்கப்பட்டது. இது மட்டுமல்ல இந்த பகுதி அடிக்கடி கப்பல், படகு போன்ற கடல் போக்குவரத்து இருக்கும் பகுதியாகும்.

இதனால் இப்பகுதியில் பாலம் அமைக்கும் போது கடல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த பாலத்திற்கு நடுவே தூக்கு பாலம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சரியாக கப்பல் படகு போன்ற கடல் போக்குவரத்து வரும்போது ரயில்வே அதிகாரிகள் ரயில் போக்குவரத்தை நிறுத்தி இந்த தூக்குப்பாலத்தை இரண்டு பக்கத்தில் இருந்தும் தூக்கும் வகையில் வடிவமைத்து தூக்குவார்கள். அதனால் எந்த தடையும் இல்லாமல் கடல் வழி போக்குவரத்தும் நடந்தது.
சாலை போக்குவரத்துக்காக பாலம் அமைக்கும் போது அதிக உயரத்தில் அமைத்து விட்டார்கள். இதனால் சாலை பாலம் கடல் போக்குவரத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்நிலையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்து வருவதால் அதற்கு மாற்றாக புதிய பலத்தை கட்ட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி புதிய பாலம் கட்டுவதற்கான அடிகளை ஆட்டி வைத்தார்.

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியது. ஆனால் கொரோனா காரணமாக இந்த பணி தாமதப்பட்ட நிலையில் , மீண்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. சாலை பாலம் போல அதிக உயரத்தில் ரயில் பாலத்தை அமைக்க முடியாது. இந்த பகுதியில் அமைக்கப்படும் பாலம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் பலத்தின் உயரத்திலேயே அமைக்கப்பட வேண்டும். ஆனால் இது தூக்குபாலம் போல இல்லாமல், வித்தியாசமான முறையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தூக்குபாலம் அமைப்பதில் அதற்கு தேவையான மிஷினரிகளை உருவாக்குவது மற்றும் அதை பராமரிப்பதற்கு அதிக செலவு இருப்பதால் அதற்கு மாற்றாக லிஃப்ட் போன்ற பாலத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். இதன்படி கடல் வழி போக்குவரத்து நடக்கும் இடத்தில் இரண்டு பக்கத்திலும் மிக உயரமான தூண்கள் அமைக்கப்பட்டன. இந்த தூண்களுக்கு இடையே ரயில் பாலம் லிஃப்ட் போன்ற தூக்குபாலமாக அமைக்கப்பட்டது
இதனால் இந்த தூண்களுக்கு இடையே கப்பல், படகு போக்குவரத்து நடக்கும் போது லிஃப்ட் போல நடுவில் உள்ள தண்டவாள பகுதி மட்டும் மேலே தூக்கும்படி உருவாக்கப்பட்டது. இதனால் கப்பல்,படகு போன்ற கடல் போக்குவரத்து எந்த வித பிரச்சினையும் இல்லாமல் அந்த பகுதியை கடந்து செல்ல முடியும். சுமார் 2.08கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாலத்தில் சுமார் 72.5மீட்டர் நீளமும், 16மீட்டர் அகலமும் கொண்ட தூக்கு பாலம் உருவாக்கப்பட்டது.
இந்த லிஃப்ட் போன்ற தூக்கு பாலத்தின் மொத்த எடை 550 டன் ஆகும் இந்த தூக்கு பாலம் கரை பகுதியில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு இது கடலுக்கு நடுவே கொண்டு சென்று பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதை கொண்டு சென்று பொருத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. ரயில் தண்டவாள பாதை சற்று வளைவாக இருந்ததால் இவ்வளவு நீளமான பாலத்தை அதிக எடையுடன் கொண்டு சென்று சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து பல்வேறு வல்லுநர்கள் பல்வேறு விதமான யோசனைகளை செய்து இதை சரியாக பாலத்தின் நடுவே கொண்டு சென்றுள்ளார்கள். தற்போது பாலத்தின் நடுவே இது பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பாலம் முழுமையாக ரயில் போக்குவரத்துக்காக தயார் செய்யப்படும். அதற்கு முன்னர் ஒத்திகை எல்லாம் பார்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த பாலம் வழியாக வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்காக தென்னக ரயில்வே அதிகாரிகளை தயார் படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்த பாலம் இந்தியாவின் முதல் லிஃப்ட் போன்ற தூக்குபாலம் என்பதால் இந்தியாவின் மிக முக்கியமான அடையாளமாக மாறி இருக்கிறது.
இந்த பாலத்தின் தொழிற்நுட்ப அம்சத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வியந்து பார்த்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து கூட இந்த பாலம் கட்டமைக்கப்பட்ட விதம் குறித்து வியந்து பாராட்டி பேசி வருகிறார்கள். இந்நிலையில் இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு இந்த பாலம் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள இன்ஜினியர்கள் எல்லாம் அதிக திறன் படைத்தவர்கள் என்பதை காட்டும் விதமாக இந்த பாலம் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக துல்லியமான கணக்குகளுடன் கட்டமைக்கப்பட வேண்டிய பாடத்தை மிகச் சிறப்பாக வல்லுநர்கள் கட்டமைத்துள்ளார்கள். இது இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறி உள்ளது . இந்த பாலத்தில் பயணிக்கும் அனுபவத்தை விரைவில் இந்தியர்கள் பெறப்போகிறார்கள்.


Click it and Unblock the Notifications









