தமிழக அரசு பஸ்களில் இந்த பட்டன் ஏன் இருக்குது தெரியுமா? பெண்களுக்கு இதுல இவ்வளவு யூஸ் இருக்குதா?
தமிழ்நாடு அரசு தற்போது தமிழக முழுவதும் இயங்கும் வகையில் பல்வேறு வகையான புதிய பஸ்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சள் நிறத்தில் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எஸ்இடிசி பஸ்களுக்காக பச்சை நிறத்தில் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் எல்லாம் சிவப்பு நிற பட்டன் ஒன்று பயணிகள் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
பஸ்கள் தான் ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் நகர அதிகம் பயன்படுத்தும் வாகனமாக இருக்கிறது. ஒரு காலத்தில் தனி நபர் வாகனங்கள் மிக குறைவாக இருந்த நேரத்தில் பஸ்களை தான் மக்கள் நம்பி இருந்தார்கள். இதனால் பஸ்கள் மிகவும் முக்கியமான பங்கை இந்த நாட்டின் வளர்ச்சியில் வைத்திருக்கிறது. காலத்திற்கு ஏற்றார் போல் பஸ்களை அவ்வப்போது அரசு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி வருகிறது.

தமிழக அரசும் தற்போது தமிழ்நாடு முழுவதும் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பஸ்களை அப்டேட் செய்து தற்போது உள்ள தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் நிறைந்த பஸ்களாக மாற்றி பயணிகள் பயன்பாட்டிற்கு கொடுத்து வருகிறார்கள். இப்படியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிப்பதற்காக மஞ்சள் நிற பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது எஸ்இடிசி பயன்பாட்டிற்காக புதிய பஸ்களை விலைக்கு வாங்கியுள்ளது இந்த பஸ்கள் எல்லாம் பச்சை நிறத்தில் உள்ளன. இதில் பல்வேறு புதிய அம்சங்களும், பயன்களுக்கு தேவையான வசதிகளும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 200 பஸ்கள் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளன பஸ்களின் டெலிவரி துவங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தி வரும் இந்த புதிய பஸ்களில் எல்லாம் பயணிகள் சீட்டுகளுக்கு நடுவே சிவப்பு நிறத்தில் ஒரு பட்டன் கண்ணாடி போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளதை நாம் காண முடியும். சமீப காலமாக பஸ்களில் பயணித்த பயணிகள் இந்த பட்டனை பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பட்டன் எதற்காக இருக்கிறது என்ற எந்தவிதமான தகவலும் இல்லாமல் இருக்கும்.
இந்த பட்டன் பெயர் பேனிக் பட்டன் என அழைக்கப்படுகிறது. பயணிகள் பயணத்தின் போது ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக இது குறித்து ஓட்டுனர்களுக்கு தகவல் தெரிவிக்க இந்த பட்டனை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்தினால் ஓட்டுநர் இருக்கும் பகுதியை எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும்.
இந்த பட்டன் குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுவாக பஸ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடக்கும். இந்த குற்றங்கள் நடக்கும் போது அருகில் உள்ள பயணிகளுக்கு கூட இது தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்களால் சத்தம் போட்டு கத்தவும் முடியாது. இந்த சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் இந்த பேனிக் பட்டனை பயன்படுத்தலாம்.
தமிழக அரசு அரசு பஸ்களில் கடந்த 2022ம் ஆண்டு இந்த பேனிக் பட்டன் முறையை அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இது பெரும் அளவில் பயன்பாட்டில் இல்லை. இந்த பட்டனை பார்க்கும் பல பயணிகள் இது எதற்கு இருக்கிறது என்றே தெரியாத அளவிற்கு தான் இருக்கிறார்கள். இந்த பட்டன் பகுதியில் எதற்காக இதை பயன்படுத்த வேண்டும் என்ற எந்த அறிவுறுத்தல்களும் இல்லை.
ரயில்களில் எப்படி அபாய சங்கிலி இருக்கிறதோ அது அதே போலவே பஸ்களில் இந்த பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வெளிநாடுகளில் இந்த பட்டன்கள் அதிகம் பயன்படுத்தப்படும். இது ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசும் இந்த வசதியை தமிழக பஸ்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இது சரிவர இயங்குவதற்கான வழிமுறைகளை செய்யவில்லை என்றே சொல்லலாம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு இந்த வசதியை கொண்டு வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இது போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் இதை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார்கள். பல பஸ்களில் இது வேலை செய்கிறதா செய்யவில்லையா என்ற விபரமே தெரியாமல் இருக்கிறது. இது குறித்த போதுமான விழிப்புணர்வை தமிழக அரசு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








