மகள் விஷயத்துல இவர் இவ்ளோ தங்கமானவரா!.. டூ-வீலர் ஓட்ட கற்று கொடுக்கும் இவரை யாருனு தெரியுதா?
40க்கும் மேற்பட்ட திரைப்படம், 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் ஓர் நபரே பங்கஜ் திரிபாதி. 'லூடோ' இந்தி படம் பார்த்தவர்களுக்கு இவரை தெரியாமல் இருக்க முடியாது. அத்தகைய மிக முக்கியமான ரோலையே அந்த படத்தில் பங்கஜ் திரிபாதி ஆற்றியிருப்பார். ஆமாங்க, வில்லன் ரோலில் நடித்தாரே அவர்தான் இவர். லூடோவில் மட்டுமில்லைங்க புகழ்பெற்ற 'மிர்சாபூர்' சீரிஸிலும் இவர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றார். திரைப்படங்களில் தனித்துவமான முகங்களைக் காண்பித்து வரும் பங்கஜ் திரிபாதி, குடும்பம்னு வரும்போது மிக பாசமான நபராக மாறிவிடுவார் என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது.
இதற்கு சான்றாகவே ஓர் நிகழ்வு தற்போது அரங்கேறி இருக்கின்றது. பங்கஜ் திரிபாதி அவருடைய மகளுக்கு டூ-வீலர் ஓட்ட கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (TVS iQube Electric Sccoter)-ஐக் கொண்டே அவர் தன்னுடைய மகளுக்கு இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொடுத்திருக்கின்றார்.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாகவம் டிவிஎஸ் ஐக்யூப் காட்சியளிக்கின்றது. இந்த ஸ்கூட்டரையே அவர் தன்னுடைய மகளுக்கு டூ-வீலர் டிரைவிங்கை பழக பயன்படுத்தி இருக்கின்றார்.
பங்கஜ் செய்திருக்கும் இந்த செயல் பலரின் கவனத்தை கவர்ந்திருந்தாலும், அதேநேரத்தில், எலெக்ட்ரிக் டூ-வீலர்களை டிரைவிங் பழக பயன்படுத்துவது நல்ல சிந்தனையாக இருக்குமா என்கிற கேள்வியே பலருக்கு எழும்பியிருக்கின்றது. இது சரியா என கேட்டால், அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய ஒன்றே என நாங்கள் கூறுவோம்.
ஏனெனில், மின்சார வாகனங்கள் மிகவும் அமைதியாக இயங்கக் கூடியவை ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்சார வாகனங்கள் ஸ்டார்ட் ஆகுவதுகூட தெரியாது. அந்த அளவிற்கே மிகவும் அமைதியாக அவை ஆனாகும். மேலும், குறிப்பிட்ட சில எலெக்ட்ரிக் வாகனங்களின் பிக்-அப் திறனும் பெட்ரோல் டூ-வீலர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
இந்த மாதிரியான வாகனங்களைக் கொண்டு ஓட்ட பழகக் கற்றுக் கொடுப்பது ஆபத்தான சூழலை ஏற்படுத்தும். எனவேதான் மின்சார வாகனங்களை ஓட்ட பழக பயன்படுத்த வேண்டாம் என கூறுகின்றனர். அதேவேளையில், மின்சார வாகனங்களில் ஈகோ எனும் மோட் வழங்கப்பட்டு இருக்கும். இந்த மோட்கள் பொதுவாக வாகனத்தை மிகவும் ஸ்லோவாக இயங்க செய்யும்.
எனவே இந்த மோடைக் கொண்டு எலெக்ட்ரிக் டூ-வீலரை ஓட்ட கற்றுக் கொடுக்கலாம். தொடர்ந்து, எலெக்ட்ரிக் வாகனங்கள் ஸ்டார்ட் ஆகுவதும் தெரியாது, அவற்றில் எக்சாஸ்ட் சத்தம் வெளியாகாது என்பதால், செயற்கை ஒலி வருகின்ற வகையில் அந்த வாகனத்தில் செட்-அப் செய்து பின்னர் அதை பயன்படுத்தலாம்.
ஏனெனில், வாகனம் ஆன் அல்லது ஆஃப் ஆகியிருக்கின்றது என்பதை அப்போதுதான் நம்மால் அறிய முடியும். இந்தியாவில் டிவிஎஸ் ஐக்யூப் இந்தியாவில் ரூ. 89,999-க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 1.55 லட்சமாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐக்யூப் 2.2kWh, ஐக்யூப் 3.4kWh, ஐக்யூப் எஸ் 3.4kWh மற்றும் ஐக்யூப் எஸ்டி 3.4kWh ஆகியவையே அவை ஆகும். இதில், 2.2kWh ஓர் முழு சார்ஜில் 75கிமீ ரேஞ்சையும், 3.4kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 100கிமீ ரேஞ்சையும் வழங்கும். தொடர்ந்து, இவற்றை முழுமையாக சார்ஜ் செய்ய 6மணி நேரம் முதல் 7மணி நேரம் வரை தேவைப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நடிகர்களில் இருந்து மாறுபட்டவரே பங்கஜ் திரிபாதி ஆவார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆர்வம் காட்டாத ஓர் நபராக இவர் காட்சியளிக்கின்றார். இதற்கு சான்றாகவே அவரிடத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருப்பது இருக்கின்றது. விலை குறைவான அதேவேளையில் பிரீமியம் அம்சங்கள் அதிகம் தாங்கிய ஓர் டூ-வீலரே இதுவாகும்.


Click it and Unblock the Notifications








