ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிட்டு ஜாலியா காரில் சுற்றுகிறார்! கால்களாலேயே கார் ஓட்டி அசத்தல்!
ஷீத்தல் தேவி (Sheetal Devi), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று உங்களுக்கு தோன்றலாம். கடந்த 2024இல் பிரான்ஸ் (France) நாட்டில் பாரா ஒலிம்பிக்ஸ் (Paralympics) நடைபெற்ற போது கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனெனில், கைகளை இழந்த போதிலும் ஷீத்தல் தேவி ஓர் வில் வித்தையாளராக அந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்துக் கொண்டார். பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்றவர், அங்கு வெண்கல பதக்கத்தை வென்று ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இதனை தொடர்ந்து, ஷீத்தல் தேவியின் திறமையை பாராட்டி மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை பரிசாக வழங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இந்தியாவில் வாகனங்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே விளையாட்டு துறைகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது பிராண்ட்-நியூ காரை பரிசாக வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த 2021இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் டெஸ்ட் (Cricket Test) தொடரை இந்தியா வென்றதற்காக அணியில் இடம்வகித்த 6 இளம் வீரர்களுக்கு புத்தம் புதிய தார் (Thar) வாகனத்தை பரிசாக வழங்கியதில் இருந்து மஹிந்திராவின் இந்த செயல் துவங்கியது.

அதன்பின், பல விளையாட்டு துறைகளில் கவனத்தை ஈர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு காரை பரிசாக வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, குறிப்பாக ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் (Commonwealth) போன்ற பெரிய விலையாட்டு போட்டிகளில் இந்தியாவை பெருமைப்படுத்துவோரை கௌரவிக்க மறப்பதே இல்லை.
அந்த வகையில்தான், பாரா ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி ஷீத்தல் தேவிக்கு கடந்த ஜனவரி மாதத்தில் ஆனந்த் மஹிந்திரா முன்னிலையில் பளபளப்பான கருப்பு நிறத்திலான புத்தம் புதிய ஸ்கார்பியோ-என் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கு கை மாறாக ஒலிம்பிக்ஸின் போது தான் பயன்படுத்திய வில் அம்பை ஆனந்த் மஹிந்திராவுக்கு ஷீத்தல் தேவி பரிசாக வழங்கியதை பார்த்து இருந்தோம்.

இந்த நிலையில், தனது ஸ்கார்பியோ-என் காரை ஷீத்தல் தேவி தனது கால்களால் ஓட்டி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர் வேறு யாருமில்லை, ஷீத்தல் தேவியே ஆவார். இதுகுறித்த இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில், "சிறிது நேரம் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தேன், அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன்.
ஒருபோதும் இதனை வேண்டாம் என்று சொல்லாதே" என ஷீத்தல் தேவி பதிவிட்டுள்ளார். இந்த ஸ்கார்பியோ-என் கார் ஷீத்தல் தேவிக்கு என்றே ஸ்பெஷலாக சில மாற்றங்களை பெற்றது ஆகும். கைகள் இல்லாத இவரால் கால்கள் மூலமாக கண்ட்ரோல் செய்யும் வகையில் காரின் ஸ்டேரிங் சக்கரம், ஆக்ஸலரேட்டர் & பிரேக் பெடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வில் வித்தையாளர் ஷீத்தல் தேவி வைத்திருப்பது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் விலைமிக்க இசட்8எல் (Z8L) வேரியண்ட் ஆகும். இதனை நபோலி கருப்பு (Napoli Black) நிறத்தில் ஷீத்தல் தேவி கொண்டுள்ளார். ஆனால், இந்த கலர் ஆப்ஷனில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் எஸ்யூவி கார் இப்போது விற்பனைக்கு கிடைப்பதில்லை. ஸ்டீல்த் கருப்பு, எவரெஸ்ட் வெள்ளை, வல்ரியன் சில்வர், டீப் ஃபாரஸ்ட், மிட்நைட் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் தான் தற்சமயம் ஸ்கார்பியோ-என் கார் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை கடந்த ஜனவரி மாதத்திலேயே ஷீத்தல் தேவி பெற்றுவிட்டாலும், அவர் கார் ஓட்டும் காட்சிகள் இப்போதுதான் அவரே வெளியிட்டுள்ள வீடியோவின் மூலமாக வெளிவந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோ-என் போன்றதான கார் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுவதற்கும் ஏற்ற கார் ஆகும்.


Click it and Unblock the Notifications








