இன்னும் ஒரு படம் கூட நடிக்கல! அதுக்குள்ள மொத்த தமிழ்நாட்டையும் மயக்கீட்டாங்க! கார்ல தேவதை மாரி வந்தது அவங்களா!

இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருக்கிறது. குறிப்பாக ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரக கார்களுக்கு, மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் உள்ளது. அப்படி இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் சொகுசு எஸ்யூவி ரக கார்களில் ஒன்றுதான் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3). இந்தியாவில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு எஸ்யூவி காரை வைத்துள்ளனர்.

இதில், பாகுபாலி (Baahubali) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகரான பிரபாஸ் (Prabhas) மிகவும் முக்கியமானவர். இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரை பயன்படுத்திய வைரல் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Sreeleela Spotted In BMW X3

யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது ஸ்ரீ லீலா (Sreeleela) ஆவார். இவர் தற்போது தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா 2, குண்டூர் காரம் மற்றும் பகவந்த் கேசரி போன்றவை எல்லாம் ஸ்ரீ லீலாவின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.

நடிகரும், தவெக என சுருக்கமாக குறிப்பிடப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK - Tamilaga Vettri Kazhagam) தலைவருமான விஜய் (Vijay) நடிப்பில் கடைசியாக வெளியான கோட் (GOAT) திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட, ஸ்ரீ லீலாவிற்கு வாய்ப்பு சென்றதாக கூறப்படுகிறது.

BMW X3

ஆனால் அந்த வாய்ப்பை ஸ்ரீ லீலா மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ லீலா தமிழில் இன்னும் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை. எனவே தமிழில் அவரது அறிமுகம் ஒரு பாடல் உடன் என்று இருக்க கூடாது என ஸ்ரீ லீலா கருதியதாக கூறப்படுகிறது. மாறாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்துடன் தமிழ் திரையுலக பயணத்தை அவர் தொடங்க விரும்புவதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாகவே கோட் திரைப்படத்தில் விஜய் உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழில் அவரது முதல் திரைப்படமாக பராசக்தி (Parasakthi) வெளியாகவுள்ளது. சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கும் இந்த திரைப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), ரவி மோகன் (Ravi Mohan) மற்றும் அதர்வா (Atharvaa) ஆகியோருடன் இணைந்து, ஸ்ரீ லீலாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். ஸ்ரீ லீலாவிற்கு தற்போதே தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவே அவர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ லீலா தற்போது பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் ஆரம்ப விலை 75.80 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 77.80 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இவற்றின் ஆன்-ரோடு விலை (On-Road Price) முறையே 88 லட்ச ரூபாய் மற்றும் 92 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.

ஆனால் ஸ்ரீ லீலா பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் மதிப்பு இவ்வளவு இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இது 2017 மாடல் என தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

அவை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் ஆகியவை ஆகும். இந்த 2 இன்ஜின்கள் உடனும் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த விலை உயர்ந்த சொகுசு காரில் அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சம் கிடையாது.

இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 15 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்ரீ லீலா பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு எஸ்யூவி கார், இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC) மற்றும் ஆடி க்யூ5 (Audi Q5) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, March 8, 2025, 22:09 [IST]
English summary
Parasakthi actress sreeleela spotted in bmw x3 luxury suv viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+