கார் வேகத்தை கண்காணித்து எச்சரிக்கும் மொபைல் அப்ளிகேஷன்!
கார் வேகத்தை கண்காணித்து எச்சரிக்கும் ஸ்மார்ட்வாட்ச்க்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்காவிலுள்ள மின்னேசோட்டா பல்கலைகழகத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.
இளைஞர்களின் டிரைவிங் முறையை கண்காணித்து எச்சரிக்கும் விதத்தில் இந்த மொபைல்போன் அப்ளிகேஷன் உதவும் என இதனை உருவாக்கிய பொறியாளர்கள் கூறியுள்ளனர்.
இளைஞர்கள் அதிவேகமாக செல்வதால் பெரும் விபத்துக்கள் நடக்கிறது. இதனை தவிர்க்கும் விதத்தில் இந்த புதிய அப்ளிகேஷன் பயன்தரும் என்று இந்த திட்டத்தில் பங்களிப்பை வழங்கிய ஜானித் க்ரீஸர் கூறியிருக்கிறார்.
சாலையின் வேகக்கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது இந்த அப்ளிகேஷன் ஓட்டுனரை எச்சரிக்கும். அதையும் மீறி அதிவேகத்தில் செலுத்தும்போது, அதுபற்றி தானியங்கி முறையில் பெற்றோருக்கு தகவல் அனுப்பிவிடும்.
இதுதவிர, சிக்னல் ஜம்ப் உள்ளிட்ட இதர போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த எச்சரிக்கையை வழங்கும் என்பதுடன், பெற்றோருக்கு உடனடியாக தகவல் பறந்துவிடும். இதன்மூலம், தங்களது பிள்ளைகளின் போக்குவரத்து விதிமீறல்களை பெற்றோர் உடனடியாக தெரிந்துகொண்டு செயல்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









