விஜய் கூட 1 படம் நடிச்சிட்டு தமிழ் சினிமாவுக்கே கும்பிடு போட்ட நடிகை! ஒன்னே முக்கா கோடி கார்ல சொந்தக்காரங்க...
இந்தியாவை கடந்து உலகம் முழுக்க பிரபலமாக உள்ள நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra). கடந்த 2002ம் ஆண்டு விஜய் (Vijay) நடிப்பில் வெளியான தமிழன் (Thamizhan) திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இதுதான் பிரியங்கா சோப்ராவின் முதல் திரைப்படம். அதற்கு பிறகு அவர் தமிழ் திரைப்படங்களில் தலைகாட்டவே இல்லை. ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் பிஸியாகி விட்டார். தற்போது 42 வயதாகும் பிரியங்கா சோப்ரா, உலகம் முழுக்க கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக மாறி விட்டார்.
இந்தியாவில் பிறந்த ஒருவர், அதுவும் தமிழ் திரையுலகம் மூலம் சினிமா துறையில் அறிமுகமான ஒருவர், மிகப்பெரிய உயரங்களை தொட்டு கொண்டிருப்பது சிறப்பான ஒரு விஷயம்தான். பிரியங்கா சோப்ராவை போலவே, அவரது உறவினரான ப்ரணிதி சோப்ராவும் (Parineeti Chopra) பிரபலமான ஒரு நடிகையாகதான் உள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை என்பதை கடந்து, பாடகி என்ற முகமும் இவருக்கு உண்டு. இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், மிகவும் விலை உயர்ந்த வெள்ளை நிற கார் ஒன்றில், ப்ரணிதி சோப்ரா கருப்பு நிற உடையில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த வீடியோவில் நாம் பார்ப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) கார் ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த காரை வைத்துள்ளனர்.

இதில், பாலிவுட் நடிகை ஜாரா கான் (Zara Khan) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தம் 2 வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 1.34 கோடி ரூபாயாக உள்ளது.
மறுபக்கம் டீசல் வேரியண்ட்டின் விலை 1.39 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதில், ப்ரணிதி சோப்ரா பயன்படுத்தியது டீசல் வேரியண்ட் என கூறப்படுகிறது. இந்த காரின் டீசல் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.75 கோடி ரூபாய் வரும்.
இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்டில், அதிகபட்சமாக 381 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டீசல் வேரியண்ட்டில், அதிகபட்சமாக 367 பிஎஸ் பவர் மற்றும் 750 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடிய 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற பல்வேறு அதிநவீன வசதிகளை எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் கொண்டுள்ளது. எனவே சொகுசான பயணத்தை விரும்ப கூடிய கோடீஸ்வரர்கள் மத்தியில் இந்த கார் பிரபலமாக திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் திரையுலகின் மற்ற பெரும்பாலான நடிகைகளை போலவே, ப்ரணிதி சோப்ராவும் சொகுசு கார்களை அதிகமாக விரும்ப கூடியவர். அவரிடம் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் (Jaguar XJL), ஆடி க்யூ7 (Audi Q7), ஆடி க்யூ4 இ-ட்ரான் (Audi Q4 E-Tron), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) போன்ற கார்கள் எல்லாம் உள்ளன.


Click it and Unblock the Notifications








