ஒருபக்கம் ஒலிம்பிக், மறுபக்கம் மாடலிங்... 25 வயதில் கோடி கணக்கில் சொத்து - போர்ஷே கார் வீட்டில் நிற்குது!!
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பலர் நமது கவனத்தை ஈர்த்தனர். எந்தவொரு உதவி சாதனங்களும் இல்லாமல் அம்பு எய்த ஈராக் வீரர், தனது க்யூட்டான ரியாக்ஷன் மூலம் பார்வையாளர்களை கவர்ந்த சீன வீராங்கனை என நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லை. அதேபோல், தனது துடிப்பான ஓட்ட திறமையின் மூலமாக பார்வையாளர்களை கவர்ந்தவர் அலிகா ஷ்மிட் (Alica Schmidt). ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஓட்டபந்தய வீராங்கனையான இவர் டிராக் மற்றும் ஃபீல்டு என இரு விதமான ஓட்டபந்தயங்களிலும் கலந்துக் கொண்டார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஜெர்மனியின் பெண்களுக்கான 4X400 மீட்டர் குழு ஓட்டபந்தயத்தில் ஒருவராக அங்கம் வகித்தவர், அலிகா ஷ்மிட் ஆவார். ஆனால், இந்த போட்டியில் ஜெர்மனி அணியால் 7வது இடத்தையே பெற முடிந்தது. ஓட்டபந்தய வீராங்கனை என்பது மட்டுமல்லாமல், அலிகா ஷ்மிட் பிரபலமான ஒரு ஜெர்மன் மாடலிங் அழகியும் ஆவார்.

ஜெர்மனியில் சில முக்கியமான கார்ப்பிரேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் அலிகா ஷ்மிட் நடித்துள்ளார். இதற்கிடையில்தான், இவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துக் கொண்டுள்ளார். அலிகா ஷ்மிட்டின் நிகர சொத்து மதிப்பு 20 இலட்சம் டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.168 கோடி ஆகும். அலிகாவிடம் இரு விலையுயர்ந்த கார்கள் உள்ளன. அதில், மிகவும் விலைமிக்கது என்று பார்த்தால், அது போர்ஷே 911 கர்ரேரா 4எஸ் கார் ஆகும்.
உலகளவில் பிரபலமான போர்ஷே கார்களுள் ஒன்று 911 ஆகும். அலிகா ஷ்மிட்டிடம் உள்ள 911 கர்ரேரா 4எஸ் காரின் விலை ஏறக்குறைய ரூ.2.30 கோடி ஆக உள்ளது. இந்த போர்ஷே காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 443 எச்பி மற்றும் 530 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

போர்ஷே 911 கர்ரேரா 4எஸ் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடலாம். அதுவே, 0-இல் இருந்து 200kmph வேகத்தை எட்ட 12.4 வினாடிகள் தேவைப்படும். இந்த போர்ஷே காரை கருப்பு நிறத்தில் அலிகா ஷ்மிட் வைத்துள்ளார். மேலும், ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் உடன் அலிகா இந்த காரை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி, அலிகா ஷ்மிட்டிடம் வால்வோ எக்ஸ்சி60 என்கிற லக்சரி காரும் உள்ளது. ஆனால், இது மேலே குறிப்பிடப்பட்ட போர்ஷே கார் அளவுக்கு விலையுயர்ந்த கார் கிடையாது என்றாலும், வால்வோ எக்ஸ்சி60 காரின் விலை இந்தியாவில் தற்சமயம் ரூ.70 லட்சமாக உள்ளது. உலகளவில் வால்வோ கார்கள் பாதுகாப்புமிக்கவைகளாக விளங்குகின்றன. இதன் காரணமாக, உலகின் விஐபி-கள் பெரும்பாலானோரிடம் வால்வோ கார் உள்ளது.

அலிகா ஷ்மிட் வைத்துள்ள வால்வோ எக்ஸ்சி60 காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 250 எச்பி மற்றும் 350 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் மூலமாக என்ஜினின் இயக்க ஆற்றல் காரின் 4 சக்கரங்களுக்கும் செல்கிறது.
லக்சரி எஸ்யூவி ரக காராக விளங்கும் வால்வோ எக்ஸ்சி60 -இன் நீளம் 4.7 மீட்டர் ஆகும். காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2.62 மீட்டர் ஆகும். காரின் பின்பக்கத்தில் 483 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைக்க இடவசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் பி5 அல்டிமேட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே எக்ஸ்சி60 கார் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாடலிங், ஓட்டபந்தயம் என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் அலிகா ஷ்மிட்டிடம் 2 லக்சரி கார்கள் மட்டுமே இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், சில நடிகர், நடிகைகள் 2 திரைப்படங்களில் நடித்துவிட்டாலே புதியது, புதியதாக கார்களை வாங்கிக் குவிக்கின்றனர். ஜெர்மனிய ஓட்டபந்தய வீராங்கனை அலிகா ஷ்மிட்டிடம் உள்ள இரு கார்களில் உங்களுக்கு பிடித்தது எது? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









