இவியே வேண்டாம் எங்களுக்கு பெட்ரோல் வண்டியவே குடுங்க! 51 சதவீத உரிமையாளர்கள் கதறல்!
இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய 51 சதவீதமான வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துவிட்டு கம்பஷன் இன்ஜின் வாகனங்களை வாங்க நினைப்பதாக சமீபத்தில் வெளியான சர்வே ரிப்போர்ட் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பார்க்கிங் பிரச்சினைகளுக்காக தீர்வுகளை வழங்கும் பார்க் பிளஸ் நிறுவனம் இந்த சர்வே எடுத்துள்ளது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. நாம் அனைவரும் நினைக்கும்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கியவர்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் வேறு விதமான பிரச்சினைகள் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பார்க்கிங் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் பார்க் பளஸ் என்ற செயலியை நடத்தி வரும் நிறுவனம் சமீபத்தில் இந்தியா முழுவதும் சர்வே ஒன்றை எடுத்தது. அதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இந்த சர்வேயை எடுத்தது மொத்தம் 500 வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

இந்த சர்வேயில் 88 சதவீதமான வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதில் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தலைவலியாக நினைப்பது சார்ஜிங் ஸ்டேஷனுக்கு கண்டுபிடிப்பது தான் எனவும், தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்பதை தலைவலியாக கருதுவார்கள் என்ற பேச்சு இருந்து வந்தது.
ஆனால் உண்மையாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதைவிட பெரிய தலைவலியாக சார்ஜிங் செய்யும் ஸ்டேஷனுக்கு கண்டுபிடிப்பது மற்றும் பாதுகாப்பான சார்ஜிங் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது தான் தங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபோக இந்த சர்வேயில் 73% வாடிக்கையாளர்கள் இந்த காரின் பராமரிப்பு செலவு குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை மற்றும் இதில் பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எலெக்ட்ரிக் வாகனங்களில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்தாலும் லோக்கல் மெக்கானிக்கால் அதை சரி செய்ய முடியவில்லை எனவும் அவர்கள் மிகப் பெரிய அளவில் சிரமப்பட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அதிகமாக ரிப்பேர் செலவாகிறது எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அந்த சர்வே ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சர்வே ரிப்போர்ட்டில் 33% வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மறு விற்பனை மதிப்பு கணிசமான அளவு குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதற்கு முக்கியமான காரணம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை சோதனை செய்வதில் ஒரே விதமான சோதனைகளை பின்பற்றுவது இல்லை எனவும் இதன் காரணமாகவே வாகனத்தின் 30 சதவீதமான மதிப்பு குறைவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதைவிட மிக முக்கியமாக 51 சதவீதமான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் ஏற்றுவதில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பதாக கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் தற்போது 20,000 அதிகமான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கிறது. ஆனால் அந்த ஸ்டேஷன்கள் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இதன் காரணமாகவே எலயக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களில் தங்கள் பயணம் செய்யும் தூரத்தை வெறும் 50 கிலோமீட்டர் என குறைத்து விட்டார்கள். சார்ஜிங் பிரச்சினை இருப்பதால் இதை அடிக்கடி சார்ஜ் போட வேண்டியது இருப்பதால் குறைந்த தூர பயணத்திற்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை அதிக நம்பக தன்மையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இது இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரச்சனை இல்லை சமீபத்தில் அமெரிக்காவில் மைக் டென்சி என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் 46 சதவீதமான அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் கம்பஷன் இன்ஜின் வாகனத்தை வாங்க முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் 9 சதவீதமான இவி உரிமையாளர்கள் மட்டுமே தற்போது இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அனைவருக்கும் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகி வந்தாலும், விற்பனை மெதுவாக தான் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ரேஞ்ச் என பலர் நினைத்து வந்த நிலையில், தற்போது சார்ஜிங் கட்டுமான வசதிகள் போதுமான அளவில் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பதாக இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications









