இன்னும் ஒரு நாள்தான்! ரோட்ல ஒரு பெட்ரோல், டீசல் வண்டி கூட ஓட கூடாது! மக்கள் தலையில் இடியை இறக்க போகும் அரசு!

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டுள்ளது. தொழிற்சாலைகள் கக்கும் புகை, கட்டுமான பணிகளால் ஏற்படும் மாசு என்று இதற்கு பல்வேறு காரணங்களை அடுக்க முடியும். இந்த வரிசையில் இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்களும், மிக முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் எடுத்து வருகின்றன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும். இந்த வரிசையில் அதிரடியான புதிய திட்டம் ஒன்று கூடிய விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Car Pollution

இந்த புதிய திட்டத்தின்படி, பெட்ரோல், டீசல் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான கட்டணத்தை (Parking Fees) உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறதோ, அதை அப்படியே 2 மடங்கு உயர்த்தலாம் என பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தினால், காற்று மாசுபாடு பிரச்னை எப்படி குறையும்? என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. இதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தினால், பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்துவது குறையும் என அரசு கருதுகிறது.

Car Parking

எனவே பஸ் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த அவர்கள் முன்வருவார்கள். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். இது இறுதியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க உதவி செய்யும் என அரசு கருதுகிறது. இதன் காரணமாகவே பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தற்போது தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்காக நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தற்போதைய நிலையில் தலைநகர் டெல்லியில் (Delhi) மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில், உலக அளவில் என எப்படிப்பட்ட பட்டியலை எடுத்தாலும், காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கும்.

உண்மையில் அங்கு காற்றின் தரம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடுமையான காற்று மாசுபாடு காரணமாக மக்கள் பல்வேறு சுவாச நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியில் எப்படியாவது காற்றின் தரத்தை மேம்படுத்தியாக வேண்டும் என்பதில் அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது.

எனவேதான் தலைநகர் டெல்லியில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தற்போது தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. டெல்லி முழுவதும் மொத்தம் 400 இடங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். டெல்லி முனிஷிபல் கார்ப்பரேஷன்தான், இந்த திட்டத்தை ஆலோசனை செய்து கொண்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை வரும் நவம்பர் 14ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒருவேளை இந்த வரைவு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், கூடிய விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே டெல்லி மக்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக கூடுதல் தொகையை செலவு செய்ய தயாராக இருந்து கொள்வது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டால், மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே சாலைகளில் வாகனங்களின் இயக்கம் குறைந்து, காற்று மாசுபாடு பிரச்னை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் எத்தனை பேர் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு மாறுவார்கள்? என்பது உறுதியாக தெரியவில்லை. அதிகப்படியான மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு மாறினால் மட்டுமே இந்த திட்டத்தின் நோக்கத்திற்கான பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு இது கட்டண உயர்வு என்ற கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக மட்டுமே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 17:01 [IST]
English summary
Parking fees for petrol diesel vehicles to double in delhi all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+