பார்க்கிங் செய்யும்போதுதான் கார்களில் அதிக சேதம்: ஆய்வு சொல்லுது
பார்க்கிங் செய்யும்போதுதான் கார்களில் அதிக சேதங்கள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
கார்களில் ஏற்படும் சேதங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து அலையன்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், பெரும்பாலும் பார்க்கிங் செய்யும்போதுதான் கார்களில் சேதம் அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

வேன் மற்றும் எஸ்யூவி போன்ற பெரிய வகை பயணிகள் வாகனங்கள்தான் பார்க்கிங் செய்யும்போது அதிக சேதங்கள் ஏற்படுகிறதாம். அதாவது, மொத்த இழப்பீடு கோருவதில் 70 சதவீதம் எஸ்யூவி மற்றும் வேன் போன்ற வாகனங்கள் இருப்பதாகவும் அந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
பார்க்கிங் செய்ய முயற்சிக்கும்போதைவிட, பார்க்கிங் பகுதியிலிருந்து புறப்படும்போதும்தான் அதிக சேதங்கள் ஏற்படுகிறதாம். இந்த ஆய்வை அலையன்ஸ் சென்டர் ஃபார் டெக்னாலஜீ மற்றும் கான்டினென்டல் ஏஜி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின. மொத்தம் 3,500 விபத்துக்கள் மற்றும் இழப்பீடு கோரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரங்கள் மூலம் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








