இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

வாகனங்களை வாங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்வது தொடர்பாக முறையான கொள்கைகள் எதுவும் இல்லாதது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அத்துடன் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாத நபர்களுக்கு நிறைய வாகனங்களை சொந்தமாக வாங்குவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க கூடாது எனவும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

''ஒரே ஒரு ஃப்ளாட் மட்டும் இருப்பவர்களிடம், வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை என்றால், 4-5 கார்களை வாங்குவதற்கு அவர்களுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்க கூடாது'' என மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி திப்னாகர் தத்தா மற்றும் நீதிபதி குல்கர்னி ஆகியோர் அடங்கிய பென்ச் இதனை தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

நவி மும்பையை சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான சந்தீப் தாகூர் என்பவர் தொடர்ந்து பொது நல வழக்கு விசாரணையின்போது மும்பை உயர் நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. கட்டுமான நிறுவனங்கள் புதிய குடியிருப்புகளில் போதுமான அளவிற்கு பார்க்கிங் இடவசதியை வழங்குவதில்லை என சந்தீப் தாக்கூர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

இதன் காரணமாக குடியிருப்பு வளாகங்களுக்கு வெளியே வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் பலருக்கும் ஏற்படுகிறது எனவும் சந்தீப் தாகூர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ''புதிய கார்களை வாங்குவதை குறைக்க வேண்டிய தேவை தற்போது உள்ளது. வாங்க முடியும் என்பதற்காக, ஒரே குடும்பம் 4-5 வாகனங்களை வாங்குவதை அனுமதிக்க கூடாது.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

அவர்களிடம் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி உள்ளதா? என்பதை சோதிக்க வேண்டும்'' என கூறியது. மேலும், ''அனைத்து சாலைகளும் தற்போது வாகன வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவது தற்போது சாதாரணமான விஷயமாகி விட்டது. சாலையின் 30 சதவீத இடம், இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதன் மூலம் ஆக்கிரமிக்கப்படுகிறது'' எனவும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக தெளிவான கொள்கை இருப்பது அவசியம் எனவும் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் கூறியிருப்பதை போல், உண்மையில் இந்திய சாலைகள் தற்போது வாகன வெள்ளத்தில் மிதந்து கொண்டுதான் உள்ளன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாதது இதற்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் முக்கியமான காரணங்களில் ஒன்றுதான். உண்மையில் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துப்படி, சாலையின் இருபுறமும் பலர் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர்.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

இதனால் இடம் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுகிறது. சில சமயங்களில் அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. எனவே சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைத்தாக வேண்டிய தேவை தற்போது இந்தியாவிற்கு உள்ளது.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க வேண்டுமென்றால், சாலைகளை விரிவாக்கம் செய்வதுடன், பார்க்கிங் செய்வதையும் ஒழுங்குபடுத்த வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தினாலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்கலாம்.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் இன்றைய காலகட்டத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு மக்கள் அதிக தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதிலாக தங்களது சொந்த டூவீலர் அல்லது கார் போன்ற வாகனங்களில் பயணிப்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதுவும் தற்போதைய போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஒரு காரணமாக உள்ளது.

இப்படி ஒரு அதிரடியை யாருமே எதிர்பாக்கல... இனி இஷ்டத்துக்கு வண்டி வாங்க முடியாது... செக் வைத்த ஐகோர்ட்!

எனினும் கொரோனா வைரஸ் பிரச்னை ஓய்ந்த பிறகு, பொது போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இதற்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாக அமையலாம். ஏனெனில் சொந்த வாகனங்களில் பயணிப்பதை காட்டிலும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவது சிக்கனமானது. பொதுமக்களும் இதை உணராமல் இல்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Parking issue families having only 1 flat shouldnt be allowed to own 4 5 vehicles bombay high court
Story first published: Monday, August 16, 2021, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X