இது அம்பானியோட வீடோ இல்ல கார் ஷோரூமோ கிடையாது.. ஒரு அபார்ட்மென்ட் பார்க்கிங்ல இத்தனை லக்சூரி கார்களா!!
அடுக்குமாடி குடியிருப்புகளில் கார்கள் இருப்பது பெரிய விஷயம் கிடையாது. அதேபோல், ஒன்றிரண்டு சொகுசு கார்கள் இருக்கக் கூடும். சில நேரங்களில் இதைவிட அதிக எண்ணிக்கையிலும் ஆடம்பர வகை கார்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் உள்ள ஓர் அடுக்கமாடி குடியிருப்பில் அனைத்து குடியிருப்பு வாசிகளும் மிக மிக விலை உயர்ந்த காரையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள செக்டார் 42-லேயே அந்த அடுக்குமாடு குடியிருப்பு அமைந்திருக்கின்றது. அங்குள்ள குடியிருப்பு வாசிகளே ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ, போர்ஷே மற்றும் ஃபெராரி போன்ற அரிய வகை ஆடம்பர கார்களை பயன்படுத்திக் கொண்டு உள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்த கார்கள் அனைத்தும் டிஎல்எஃப்-இன் தி கேமிலியாஸ் எனும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலேயே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் உள்ள மிகவும் அதிக ஆடம்பர வசதிகள் கொண்ட குடியிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பலர் இங்கேயே வசிக்கின்றனர். இந்த குடியிருப்பிலேயே ஒரு வழக்கமான கார்கூட இல்லாத நிலை உள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள அனைவரும் அல்ட்ரா ஆடம்பர கார் எனப்படும் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
போர்ஷே 992 911 டர்போ எஸ் சூப்பர் கார், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600, லம்போர்கினி உருஸ், போர்ஷே கேயன்னே எஸ்யூவி, பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர், ஆடி ஏ8எல் மற்றும் ஆடி ஆர்எஸ்7 உள்ளிட்ட கார் மாடல்களே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரே இடத்தில் இத்தனை அரிய வகை ஆடம்பர கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் முகேஷ் அம்பானியின் ஜியோ கராஜை பார்ப்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மிக அதிக அளவில் சொகுசு கார்களை குவித்து வைத்திருக்கும் நபராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். இவருடைய மும்பை அன்ட்லியா இல்லத்தில் கார்களை நிறுத்தி வைப்பதற்கு என்றே தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவரிடத்தில் நூற்றுக் கணக்கான விலை உயர்ந்த அரிய மற்றும் ஆடம்பர வகை சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமே ஐந்திற்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர், போர்ஷே கேயன்னே, பென்ட்லீ பென்டேகா, மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் ஏஎம்ஜி ஜி63 போன்ற கார்களும் அவரிடத்தில் உள்ளன. இத்தகைய ஓர் கார் கராஜிக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹரியானாவில் உள்ள இந்த டிஎல்எஃப் கேமிலியாஸ் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருக்கின்றது.
மேலும், இங்குள்ள கார்கள் ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் விலைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை எடுத்துக் கொண்டால், இதன் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே 6.95 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இதைப்போலவே பல கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட கார்களே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று அரிய வகை சொகுசு கார்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பார்க் செய்யப்பட்டு இருக்கின்றன காரணத்தினாலேயே அந்த அபார்ட்மென்டின் பார்க்கிங் வீடியோ தற்போது இணையத்தில் மிக அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. குறிப்பாக கார் காதலர்கள் பலர் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்துக் கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









