ஒரே டிக்கெட்டில் உள்ள பாதி பேருக்கு கன்ஃபார்ம் ஆகி மீது பேருக்கு வெயிட்டிங் லிஸ்ட் இருந்தா என்னவாகும்?
ஓரே பிஎன்ஆர் நம்பரில் புக் செய்யப்பட்ட 2 டிக்கெட்டில் 1 டிக்கெட் மட்டும் கன்ஃபார்ம் ஆகி மற்றொரு டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டிலேயே இருந்தால் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர் அந்த பயணத்தைச் செய்ய முடியுமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் சேவை ஒரு இன்றியமையாத சேவையாக இருக்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட்டை ஐஆர்சிடிசி தளம் மூலம் ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இப்படியாக முன்பதிவு செய்யும் டிக்கெட்களில் பல குழப்பங்கள் மக்களுக்கு இருக்கிறது.

பொதுவாக ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் போது முதலில் கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட்கள் வழங்கப்படும். கன்ஃபார்ம் டிக்கெட் காலியானதும், அதன்பிறகு காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் புக் செய்யப்படும். ஒரு வேளை கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட் எடுத்தவர்கள். தங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வரிசைப்படி அந்த டிக்கெட் வழங்கப்படும்.
இப்படியாகக் காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டால் நமது டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் தான் ரயிலில் ஏற வேண்டும். கடைசி வரை காத்திருப்பு பட்டியலிலேயே இருந்தால் அவர்களுக்குத் தானாக அந்த டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டு பணம் முழுவதும் திரும்ப வந்துவிடும். இது ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டுமே,
ஒரு வேளை நீங்கள் ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுத்திருந்தால் காத்திருப்பு பட்டியலிலிருந்தாலும் நீங்கள் ரயிலில் ஏறி டிடிஆரிடம் பேசி டிக்கெட்டை பெற்றுக்கொள்ள முடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு நடை முறைதான். குறிப்பாக ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கு இதில் ஒரு சந்தேகம் வரும்.
அதாவது ஒரு ரயில் டிக்கெட்டில் 6 நபர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் அப்படி 6 நபர்களில் 4 நபர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைத்து மற்ற நபர்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும். மீதம் உள்ள 2 நபர்களின் டிக்கெட் மட்டும் கேன்சலாகி பணம் வருமா? அல்லது 6 டிக்கெடும் மொத்தமாக கேன்சல் ஆகுமா? இந்த சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் என்னாகும் என பலருக்கும் தெரியாது.
முதலில் இப்படி ஒரு சூழ்நிலை வருவது அரிய விஷயம். சிலீப்பர் அல்லது ஏசி சிலீப்பரில் புக் செய்தல் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்தவர்கள் போக மற்றவர்களுக்கு ஆர்ஏசி தான் கிடைக்கும், காத்திருப்பு பட்டியலுக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. அதனால் அந்த கோச்சுகளில் பயணிப்பவர்கள் தாராளமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆர்ஏசி சீட்டில் பயணிக்கலாம். அது இல்லாமல் சீட்டிங் டிக்கெட்டில் புக்கிங் செய்தால் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.
இப்படி நடந்தால் அதற்கு ஐஆர்சிடிசி ஒரு விதிமுறையை வைத்திருக்கிறது. பொதுவாக ஆன்லைனில் புக்கிங் செய்யப்படும் டிக்கெட் தானாக கேன்சல் ஆகும் டிக்கெட்டாக இருந்தால் ஒரு ஒரு பிஎன்ஆரில் உள்ள முழு டிக்கெட்டும் கேன்சல் ஆக வேண்டும். ஒரு பிஎன்ஆர்சில சில டிக்கெட்கள் ஆர்ஏசி அல்லது கன்ஃபார்ம் டிக்கெட்களாக இருந்தால் கேன்சல் ஆகாது. அதனால் கடைசி நேரத்தில் இப்படியாகச் சூழ்நிலை ஏற்பட்டால் குறிப்பிட்ட டிக்கெட்டில் புக் செய்தவர்கள் தங்கள் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றாலும் ரயிலில் ஏறி டிக்கெட்டை டிடிஆரிடம் காட்டி தங்களுக்கான சீட்கள் இருந்தால் பெற்றுக்கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே பிஎன்ஆர் நம்பரில் சிலருக்கு கன்ஃபார்ம் டிக்கெட் மற்றவருக்குக் காத்திருப்பு டிக்கெட் இருந்தால் அந்த டிக்கெட் கேன்சல் ஆகாது. அவர்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்தாலும் ரயிலில் பயணிக்க எந்த தடையும் இருக்காது. அவர்கள் டிக்கெட்டிற்காக செலுத்திய பணம் தானாகத் திரும்ப வராது.


Click it and Unblock the Notifications








