இந்த பேருந்துக்குள் என்னென்ன இருக்குனு சொன்னால் நம்பவே மாட்டீங்க!! இதுக்கு கூடவா நடமாடும் சேவை வந்திடுச்சு?
ராஜஸ்தான் (Rajasthan)-இல் நடமாடும் பார்டி பேருந்து கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பார்டி-ஆன்-வீல்ஸ் கான்செப்ட் எதிர்காலத்தில் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ் கான்செப்ட்டை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடமாடும் மருத்துவ முகாம்கள், நடமாடும் நூலகத்தில் துவங்கி, சமீப காலத்தில் நடமாடும் சுடுகாடு வரையில் கூட வந்துவிட்டது. அந்த அளவிற்கு மக்களுக்கு நேரமின்மை இருப்பதோடு, எல்லா விஷயங்களிலும் சவுகரியத்தையே நாம் எதிர்பார்ப்பதால், இத்தகைய நடமாடும் சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இன்று நம் கையில் இருக்கும் மொபைல்போன் கூட இந்த பாணியில் வந்ததே ஆகும்.

இந்த வரிசையில், மெவாரா டிராவல்ஸ் (Mewara Travels) ராஜஸ்தான் மாநிலத்தில் பார்டி-ஆன்-வீல்ஸ் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு 'பப்' (Pub) பாணியில் வடிவமைக்கப்பட்ட பேருந்தை முன்பதிவு செய்து கொண்டுச் செல்லலாம். அல்லது, இருக்கும் இடத்திலேயே இந்த வகை பேருந்துகளின் மூலம் பப் செட்-அப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, செல்லும் இடத்தை அடையும் வரையில் இந்த பேருந்துகளின் மூலம் பார்டியை ஜாலியாக கொண்டாடியவாறு செல்லலாம் என்கிறது மெவாரா டிராவல்ஸ். இதற்காகவே இந்த வகை பேருந்துகளில், நன்கு சாய்ந்து அமரக்கூடிய வகையிலான இருக்கைகள், சோபா & கட்டில் என இரு விதமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய படுக்கை, நடனமாடுவதற்கு போதுமான அளவிற்கு இடவசதி உள்ளிட்ட சொகுசு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், பேருந்துக்குள் வெப்பநிலையை தேவைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள முடியும். அதேபோல், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ற நிறங்களில் பேருந்துக்குள் விளக்குகளை ஒளிர செய்யலாம். பார்டி-ஆன்-வீல்ஸ் பேருந்து என்பதால், மியுசிக் சிஸ்டம் மற்றும் எல்இடி தொலைக்காட்சி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
மெவாரா டிராவல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த வகை பேருந்துகளில் ஒரு உடை-மாற்றுவதற்கான அறை, இணைக்கப்பட்ட வாஷ்ரூம் உள்ளிட்டவை உள்ளன. இவ்வளவு ஏன், இந்த பேருந்தில் சிறிய சமையலறை கூட உள்ளது. இந்த பேருந்துகளில் பார்டியை கொண்டாடியவாறு, சவுகரியமாக 15இல் இருந்து 23 பேர் வரையில் பயணம் செய்யலாம்.

இந்த பார்டி பஸ்களில் பிறந்தநாள் பார்டிகள், திருமண பார்டிகள், பேச்சிலர் பார்டிகள், மகளிர் மட்டும் பங்கேற்கும் பார்டிகள் உள்ளிட்டவற்றை தாராளமாக மேற்கொள்ளலாம் என்கிறது மெவாரா டிராவல்ஸ். அத்துடன், ஓர் மினி திரையரங்கம் ஆகவும் இந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். விளையாட்டில் வெற்றி பெற்ற பிறகு நடத்தப்படும் சிறிய கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் இந்த வகை பேருந்துகளில் மேற்கொள்ள முடியும். பேருந்துடன் சேர்த்து, விருப்பப்பட்டால் உணவுகளையும் வழங்குவோம் என மெவாரா டிராவல்ஸ் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால பேருந்துகள் பயணத்தின்போது குலுக்கல் ஏற்படாத வகையில், என்ஜின் அதிர்வுகளை கூட கேபினுக்குள் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்படுகின்றன. அத்துடன், வெளிப்புற சத்தங்கள் முற்றிலுமாக உள்ளே கேட்காத வகையில் பஸ் கேபின் நன்கு மூடிய பகுதியாக வடிவமைக்கப்படுகிறது. இத்தகைய பேருந்துகளை உருவாக்கிய அனுபவத்தில், இவ்வாறான பார்டி பேருந்துகள் உருவாக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









