விமானத்தில் பாகிஸ்தான்காரர் செய்த காரியம்! ரயில், பஸ்களில்தான் இது நடந்துட்டு இருந்துச்சு! இப்ப இங்கயுமா?

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் விமானத்திற்கு உள்ளே ஒருவர் சக பயணிகளிடம் நன்கொடை கேட்கும் காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது. சக பயணிகளிடம் நன்கொடை கேட்கும் நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆவார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மதரசா ஒன்றை கட்டுவதற்காக விமான பயணிகளிடம் நன்கொடை கேட்டதாக சம்பந்தப்பட்ட நபர் கூறியுள்ளார். விமானத்தில் அவர் பேசியது பின்வருமாறு: மதரசா ஒன்றை கட்டுவதற்காக பணம் வசூல் செய்து வருகிறோம். நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், எழுந்து என்னிடம் வர வேண்டாம்.

Passenger Begs On Airplane

நான் உங்கள் இருக்கைக்கு வருகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ உண்மையில் எப்போது எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. ஆனால் சமூக வலை தளங்கள் முழுக்க தற்போது இந்த வீடியோதான் வலம் வந்து கொண்டிருக்கிறது. எனவே சமீபத்தில் எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே மிகவும் அதிகம்.

பாகிஸ்தான் தற்போது மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இந்த சமயத்தில் சமூக வலை தளங்களில் வலம் வரும் இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஒரு சிலர் இந்த முயற்சியை வரவேற்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Passenger Begs On Plane

அதே நேரத்தில் ஒரு சிலர் இந்த முயற்சிக்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை இப்படி கலவையான விமர்சனங்களை செய்து வரும் நிலையில், விமானத்தில் நாம் செய்வதை தவிர்க்க வேண்டிய ஒரு விஷயங்கள் குறித்த மிக முக்கியமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இதன்படி விமானத்தில் மிக நீண்ட நேரம் இருக்கையிலேயே அமர்ந்திருக்க கூடாது. அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும் (ஆனால் விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும் எக்காரணத்தை கொண்டும் நடக்க கூடாது. இந்த 2 சமயங்களிலும் கண்டிப்பாக விமானத்தில் அமர்ந்துதான் இருக்க வேண்டும்).

இதை மீறி விமானத்தில் மிக நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தால், அது உடல்நலனில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் விமானத்தின் பாதுகாப்பு தொடர்பாக முட்டாள்தனமான ஜோக்குகளையும் அடிக்க வேண்டாம். இது மற்றவர்களுக்கு அனாவசியமாக பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மேலும் விமானத்தில் எக்காரணத்தை கொண்டும் அளவு கடந்து மது அருந்த வேண்டாம். அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு, விமானத்தில் சேட்டை செய்த பலர் கீழே இறங்கியதும் மிக கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எக்காரணத்தை கொண்டும் மறந்து விட வேண்டாம்.

அதேபோல் விமானத்தில் பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தவற விட வேண்டாம். பொதுவாக விமானம் கிளம்புவதற்கு முன்பு பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை விமான பணிப்பெண்கள் வழங்குவார்கள். இது பயணிகளுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் பலர் இதனை பொருட்படுத்துவதே கிடையாது என்பது வேதனையான விஷயம்.

விமான பணிப்பெண்கள் அறிவுறுத்தல்களை வழங்கும் சமயத்தில் செல்போனை நோண்டுவது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். இது தவறான விஷயம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தவற விடுவது, ஆபத்து மற்றும் அவசர சூழல்களில் பாதிப்புகளை தீவிரமாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாங்கள் இங்கே கூறியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றினால், உங்கள் விமான பயணம் பாதுகாப்பாக இருக்கும். அத்துடன் சௌகரியமானதாகவும், பிரச்னைகள் இல்லாமலும் இருக்கும். அதேபோல் விமான பயணத்தின்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது போன்ற விஷயங்களை செய்வதன் மூலம் உடல் நலத்தையும் பாதுகாத்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 16:55 [IST]
English summary
Passenger begs on airplane viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+