13 பேரின் உயிரை காவு வாங்கிய ஆந்திர ரயில் விபத்து நடந்தது இப்படி தான்! இதற்கு காரணமாவர்கள் இவர்கள் தான்!
ஆந்திர மாநிலத்தில் நேற்று இரவு 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 13 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது? இந்த விபத்துக்கான காரணம் யார்? உள்ளிட்ட முக்கிய விபரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகபள்ளி பகுதி அருகே நேற்று இரவு இரண்டு ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுவரை சுமார் 13 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த ரயில் விபத்து எப்படி நடந்தது? என நாம் பார்க்கும் போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா செல்லும் பயணிகள் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை தாண்டி சிக்னல் கோளாறு காரணமாக அலமண்டா ரயில் நிலையத்திற்கு முன்பாக சிக்னல் கோளாறு பிரச்சனையை சரி செய்வதற்காக நின்று கொண்டிருந்தது. அப்பொழுது விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயில் நிற்கும் அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம் ராயகடா பயணிகள் ரயில் பயணிப்பதற்காக கண்டகப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் விசாகப்பட்டினம் ராயகடா பயணிகள் ரயிலை ஓட்டி வந்த பைலட் தனக்கு குறிப்பிட்ட தண்டவாளத்தில் செல்ல சிக்னல் கிடைத்து விட்டதால் முன்பு சென்ற ரயில் அடுத்த ரயில் நிலையத்தை கடந்திருக்கும் என கருதி தொடர்ந்து அதே தண்டவாளத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். ஆனால் சிக்னல் கோளாறு காரணமாக அதே தண்டவாளத்தில் முன்பு நின்று கொண்டிருந்தது.

இதனால் விசாகப்பட்டினம் பாலசா பயணிகள் ரயிலில் பின்பக்கத்தில் இந்த ராயகடா பயணிகள் ரயில் மோதியது. இதில் பாலசா ரயிலின் பின்பகுதியிலும் ராயகடா ரயிலின் முன்பகுதியில் உள்ள பெட்டிகள் தடம் புரண்டன. இதில் உள்ள பயணிகள் எல்லாம் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் தான் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாலசா ரயிலில் முன்பக்கம் இருந்த 11 பெட்டிகள் பத்திரமாகவும், அதே நேரம் விசாகப்பட்டினம் ராயகரா ரயிலில் இருந்த பின்பக்கத்தில் உள்ள ஒன்பது பெட்டிகளும் பாதுகாப்பதாக இருந்ததால் அந்த பெட்டிகள் எல்லாம் பத்திரமாக அடுத்த ஸ்டேஷன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. மத்திய மாநில அரசுகள் இந்த ரயில் விபத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளை செய்யவும் நேற்று இரவு போராடினர்.

இந்நிலையில் இந்த ரயில் விபத்து எப்படி நடந்தது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மனித தவறால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என கூறப்படுகிறது. சிக்னலை ஓவர் ஷூட் செய்து ஏற்கனவே ரயில் நிற்கும் தண்டவாளத்திலேயே மற்றொரு ரயிலை அனுமதித்தது தான் இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இது எப்படி நடந்தது என தற்போது விசாரணை நடந்து வருகிறது.
கண்டிப்பாக இதற்கு பின்னால் சிக்னல் வழங்கிய ஊழியர்களின் பிழை அல்லது திட்டமிட்ட சதி தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக தெளிவாக ஒரு ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும் போது அந்த தண்டவாளம் லாக் செய்யப்பட்டிருக்கும் அந்த தண்டவாளத்தில் வேறு ரயிலை அனுமதிக்க முடியாத நிலை இருக்கும். யாராவது மனிதர்கள் வேண்டுமென்றே இந்த லாக்கை எடுத்து விட்டால் மட்டுமே அங்கு மற்ற ரயில்கள் பயணிக்க சிக்னல் கிடைக்கும்.

அப்படி இருக்கும் போது எப்படி ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்து ஒன்றோடு ஒன்று மோதியது என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. ஒரு வேலை சிக்னல் கோளாறு காரணமாக ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனை இருந்ததா எனவும் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் யார்? இதற்குப் பின்னால் ஏதாவது சதி திட்டம் இருக்கிறதா? என விசாரணை நடத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒடிசாவிலும் இது போன்ற பிரச்சினை தான் ஏற்பட்டது. அந்த விபத்தில் ஏகப்பட்ட உயிர்கள் பலியாகின. தற்போது ஆந்திர மாநிலத்திலும் சிக்னல் கோளாறு பிரச்சனைக்காக நின்ற ரயில் மீது மற்றொருவரின் மோதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தில் சிக்னல்களை சரியாக வழங்குவதில் அப்படி என்ன குளறுபடி இருக்கிறது? ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் உள்ள அடிப்படை விஷயங்கள் ஏன் தவறாக நடக்கிறது? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரயில்வே நிர்வாகம் இந்த பிரச்சினைகளை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் என்பது பாதுகாப்பாக இருக்கும் பயணமாக கருதப்படுகிறது. மக்கள் பலர் ரயிலில் சென்றால் பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என நம்புகின்றனர். ஆனால் தொடர்ந்து ரயில் விபத்துகள் நடப்பது அப்படியான நம்பிக்கையை கெடுக்கும் விதமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்தி இனி ரயில் விபத்துக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









