கார், பஸ் மாதிரி ரயிலை தள்ளிய பயணிகள்! உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ!
கார், பஸ் போன்ற வாகனங்கள் சாலையில் நின்று விட்டால் அதை மக்களை தள்ளி செல்லும் சம்பவங்களை எல்லாம் நாம் நேரில் பார்த்திருப்போம். இப்படியான அனுபவம் நம் வாழ்வில் நமக்கு ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும். ஆனால் சமீபத்தில் நின்ற ரயிலை பொதுமக்கள் தள்ளிச் சென்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. நின்ற ரயிலை பொதுமக்கள் தள்ளி செல்வதற்கான காரணம் என்ன? இந்த சம்பவம் எங்கு இதற்காக நடந்தது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சாலையில் வாகனங்கள் செல்லும்போது திடீரென நடு வழியில் நின்று விட்டால் உடனடியாக அந்த வாகனத்தை ஓரம் கட்டுவதற்காக வாகனங்களில் இருக்கும் பயணிகளை இறங்கி வாகனத்தை தள்ளி செல்லும் சம்பவம் எல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். காரை ஓரிரு நபர்கள் சேர்ந்தாலே தள்ளி சென்று விட முடியும். பெரிய பெரிய பஸ்களை கூட பத்து, இருபது பேர் சேர்ந்து தள்ளி செல்வதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பொதுமக்கள் நின்ற ரயிலை தள்ளி சென்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்தியாவில் மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பொதுமக்கள் ஏன் ரயிலை தள்ளி செல்கிறார்கள் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாம் விசாரித்த போது கடந்த 6ம் தேதி வியாழக்கிழமை மாலை 5:25 மணிக்கு பாட்னாவில் இருந்து ஜாஸ்திதி என்ற பகுதிக்கு மெமோ ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. வழக்கமாக இந்த ரயிலில் தினந்தோறும் செல்லும் பயணிகள் ஏறி பயணம் செய்து வந்துள்ளார்கள். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் இந்த ரயில் சரியாக க்யூல் ஸ்டேஷனில் நின்றுள்ளது.
அப்பொழுது ரயிலில் குறிப்பிட்ட ஒரு கோச்சில் இருந்து புகை கிளம்புவதை ரயிலில் உள்ள பயணிகள் உணர்ந்தனர். உடனடியாக அந்த கோச்சிலிருந்து பயணிகள் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். அடுத்த ஒரு சில வினாடிகளில் அந்த புகை நெருப்பாக மாறி உள்ளது. இதையடுத்து அங்குள்ள ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டேஷன் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டார்கள். முதலில் இந்த தீ பிடித்த கோச் உள்ளே பயணிகள் யாரும் இல்லாதபடி பயணிகளை வெளியேற்றினார்கள். முன்னெச்சரிக்கையாக ரயிலில் உள்ள அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டார்கள். உடனடியாக தீ பரவுவதை தவிர்ப்பதற்காக தீப்பிடித்த பெட்டிக்கு அருகே உள்ள பெட்டிகளை கழட்டி சற்று தொலைவில் நகர்த்த வேண்டும் என முடிவு செய்தார்கள். அருகில் இருந்தால் அந்த பெட்டிகளும் தீப்பற்றி எரிய வாய்ப்புள்ளது என்பதால் இந்த முடிவை எடுத்தார்கள்.
ஆனால் ரயில் பெட்டிகளை கழட்டி நகர்த்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதற்குள் தீ பரவுவதற்கான ஏராளமான அபாயங்கள் உள்ளன. அதன் காரணமாக உடனடியாக செயல்பட்டு ஸ்டேஷன் அதிகாரிகள் பொதுமக்கள் உதவியை நாடினார்கள். அதன் காரணமாக பொதுமக்கள் ரயிலை தள்ளியே தீப்பிடித்த பெட்டியில் இருந்து நகர்த்தியுள்ளார்கள்.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலாக பரவும் போது பலர் இதை டேக் செய்து இந்திய ரயில்வே நிர்வாகத்திலும் என்ன நடக்கிறது என கேள்வி கேட்டதற்கு, கிழக்கு ரயில்வே நிர்வாகம் இதற்கான பதிலை அளித்துள்ளது. இது பீகார் மாநிலத்தில் நடந்த செயல் எனவும் பொதுமக்கள் ரயிலை பாதுகாப்பதற்காக உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.
தீ பிடித்ததற்கான காரணம் குறித்து தற்போது ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இது ரயில் பெட்டியில் இருந்த எலெக்ட்ரிக் சர்க்யூட்டில் நடந்த பிரச்சனை காரணமா பரவிய தீயா? அல்லது இதற்கு பின்னால் ஏதாவது சதி இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறார்கள். தீ பிடித்த ரயில் பெட்டியை தற்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி தீ பிடித்ததற்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்து வருகிறார்கள்.
ரயில் பெட்டியை பொதுமக்கள் தள்ளி செல்லும் வீடியோவில் ரயில் தீ பிடித்து ஏரிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த தீ லேசாக இருக்கும் போதே அணைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தீபிடித்ததாக கூறப்படும் பெட்டியிலிருந்து அதிக தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதால் இது சரியாக தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயிலை பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் பலரும் இதை கிண்டலாக பதிவு செய்திருந்தார்கள் ஆனால் இது பெரும் விபத்தை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் எடுத்த முயற்சியாகவும் துரித நேரத்தில் செயல்பட்டு பொதுமக்களும் உதவி இந்த சம்பவம் நடந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








