விமானத்தில் புனே செல்ல காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! இப்படி நடக்கும்ன்னு நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க!

ஏர் இந்தியா விமானத்தில் விமானி சரியான நேரத்திற்கு வராததால் பயணிகள் 2 மணி நேரம் விமானத்திற்கு உள்ளேயே காக்க வைக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் டெல்லியில் நடந்துள்ளது. இந்த விமானத்தில் இருந்த பயணிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆகிய பயணங்களை செய்து வருகின்றன. இதில் முக்கியமான விமான நிறுவனமாக இருப்பது ஏர் இந்தியா நிறுவனம் தான். ஒரு விமான சேவை நடத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இதை நடத்துவதற்கு அதிக மனித உழைப்புகளும் தொழில்நுட்ப தேவைகளும் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒரு சின்ன இடத்தில் பிரச்சினை வந்தால் கூட ஒட்டுமொத்த விமான பயணமும் பாதிக்கப்படும்.

delhi pune flight delay

இப்படியாக நேற்று இரவு டெல்லியிலிருந்து புனைவிற்கு செல்ல ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ 853 என்ற விமானம் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பயணிகள் எல்லாம் டிக்கெட்களை புக் செய்து இருந்தார்கள் விமானம் திட்டமிட்டபடி போர்டிங் இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணிப்பதற்கான விமான பயணிகளுக்கும் போடிங் பாஸ் வழங்கப்பட்டது.

இதன் பின்பு பயணிகள் எல்லாம் பாதுகாப்பு சோதனைகள் முடிக்கப்பட்டு விமானத்தில் போர்டிங் செய்யப்பட்டனர். பயணிகள் எல்லாம் தங்கள் தங்கள் சீட்டிற்கு சென்று அமர்ந்தனர். விமானம் சரியாக இரவு 7:10 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்ப வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. மணி 7:10-ஐ தாண்டியும் விமானம் கிளம்புவதற்கான எந்த அறிகுறியும் பயணிகளுக்கு தெரியவில்லை. விமான பணி பெண்கள் மற்றும் விமானத்தின் பைலட் ஆகியோரிடம் இருந்து எந்த அப்டேட்டும் பயணிகளுக்கு வரவில்லை.

delhi pune flight delay

இதையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் சிலர் விமான பணி பெண்களிடம் விமானம் ஏன் கிளம்பவில்லை என விளக்கம் கேட்டனர். அதற்கும் விமான பணிப்பெண்கள் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சில பயணிகள் விமான பணி பெண்களிடம் சண்டை போட்டுள்ளனர். அதன் பின்பு தான் விமானத்திற்கு இன்னும் விமானியே வரவில்லை என்ற தகவல் பயணிகளுக்கு கிடைத்துள்ளது.

விமானியே இல்லாமல் எப்படி இவர்கள் போர்டிங் பாஸ் மற்றும் போர்டிங் ஆகியவற்றை வழங்கினார்கள் என பயணிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பயணிகள் விமானத்திற்குள்ளேயே காக்க வைக்கப்பட்டனர். ஒரு வழியாக இரவு 9:10 மணிக்கு விமானத்திற்குள் வந்த விமானி விமானத்தை ஸ்டார்ட் செய்து பறக்க துவங்கினார். இந்த விமானம் சரியாக 11 மணிக்கு புனேவில் தரையிறங்கியது. சுமார் 2 மணி நேர தாமத்திற்கு பிறகு விமானம் பயணத்தை முடித்தது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் இப்படியாக விமானிகள் வராமல் போவது இது ஒன்றும் முதன் முறையல்ல கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படியாக பெங்களூருவில் இருந்து மும்பை செல்லும் விமானம் 9 மணி நேரம் வரை தாமதமானது. இதற்கும் விமான நிறுவனத்தின் தரப்பில் இருந்து சரியான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. முதலில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே தாமதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் எந்தவித காரணமும் இல்லாமல் இது 9மணி நேர தாமதமாக மாறியது. இந்த 9மணி நேரத்திற்கும் விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகளுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை என அப்பொழுதே குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் பயணிகள் அசௌகரியம் அடைந்தனர். இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த ஒரு சில நாட்களிலேயே மீண்டும் டெல்லியில் இருந்து புனே செல்ல வேண்டிய விமானம் இப்படியாக காரணமில்லாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்த போது ஏர் இந்தியா நிறுவனத்தில் கடுமையான விமானிகள் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. விமானிகள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களுக்கு விமானத்தை ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது என்றும், சில நேரங்களில் விமானிகள் விடுப்பு எடுத்தால் அதை சமாளிக்க மாற்று விமானிகள் இல்லாத நிலை இருப்பதால் இப்படியான பிரச்சினைகள் அவ்வப்போது வருகிறது என தெரியவந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர் இந்தியா விமானம் என்பது இந்தியாவிற்கு பெயர் பெற்ற விமான நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது டாடா குழுமத்தின் நிர்வாகத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது தனது செலவுகளை குறைக்க விமானிகள் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் விமானிகள் இல்லாமல் ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடி தாமதம் ஆகிறது. இதை உடனடியாக ஏர் இந்தியா நிறுவனம் சரி செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 30, 2023, 10:51 [IST]
English summary
Passengers traveling from delhi to pune endure a two hour wait for the pilot onboard the aircraft
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+