திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு எவ்வளவு தான் நடவடிக்கைகளை கொண்டுவந்தாலும், தனி மனித கட்டுப்பாடுகளும் அவசியமே.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

ஏனெனில் தலை விரித்தாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் அதேநேரத்தில் வழக்கமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. கொரோனாவின் தாக்கம் ஒருபக்கம் அதிகரிக்க, மறுபக்கம் கொலை, கொள்ளைகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

அவற்றை தடுக்க போலீஸ் துறையை மேம்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும். அதனை நினைவில் கொண்டு, திருப்பூர் மாநகர பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரோந்து வாகனமாக ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

அதன்படி 7 துணை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்கூட்டர்களை தான் மேலே காண்கிறீர்கள். சம்பந்தப்பட்ட டீலர்கள் இந்த ஸ்கூட்டர்களை திருப்பூர் மாநகர கமிஷ்னர் அலுவலத்தில் டெலிவிரி செய்துவிட்டு சென்றுள்ளனர்.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

அலுவலக வேலைகளுக்கும், போக்குவரத்து நெரிசல்களை சரி செய்வதற்கும் பெண் போலீஸார்களுக்கு உதவியாக இருக்கும் விதத்தில் இந்த ஸ்கூட்டர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவினால் அமலில் உள்ள ஊரடங்கினால் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலங்கள் இயக்கத்தில் இல்லை.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

இதனால் தான் மேலுள்ள படத்தில் ஸ்கூட்டர்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்படாமல், பெண் போலீஸாருக்கு டெலிவிரி செய்யப்படாமல் உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் எப்போது திறக்கப்படுமோ அப்போதுதான் இவை அவற்றின் உரிமையாளர்களை சென்றடையும்.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

டெலிவிரிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் ஹீரோ மோட்டோகார்பின் டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களாகும். இந்த ஹீரோ ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.68,821 ஆக தற்போதைக்கு உள்ளது.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 124.6சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,750 ஆர்பிஎம்-இல் 8.7 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 10.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

திருப்பூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காத்திருக்கும் பரிசு!! எப்போது ஊரடங்கு முடியுமோ!

ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோவில் வழங்கப்படும் 110சிசி என்ஜினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த 125சிசி என்ஜின் மென்மையான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஆக்ஸலரேஷனை வழங்குகிறது. இதனால் ஹீரோ டெஸ்டினி அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற வாகனமாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Patrol vehicle for female police sub-inspectors in Tirupur.
Story first published: Saturday, May 22, 2021, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X