9 ஆண்டுகள் முன்பு புக் செய்த காரை டெலிவரி எடுத்தது இவ்வளவு பெரிய ஆளா? இவருக்கிட்ட இல்லாத பணமா என்ன?

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவாக இருக்கும் விஜய் சேர் ஷர்மா என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு புக் செய்த டெஸ்லா காரை தற்போது தான் டெலிவரி எடுத்துள்ளார். ஒரு காருக்காக இவர் 9ஆண்டுகள் வரை காத்திருக்க வண்டியது இருந்தது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பேடிஎம் என்ற பேமென்ட்ஸ் ஆப்பை உருவாக்காகியவர் விஜய் சேகர் ஷர்மா. இவர் கடந்த 2016ம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் மாடல் 3 என்ற காரை புக்கி்ங் செய்ய துவங்கிய போது தான் அந்த காரை வாங்க வேண்டும் என புக் செய்தார். அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்தது. டெஸ்லா நிறுவனமும் அந்த காரின் பெயரைழயே மாற்றியது. மாடல் 3 என்ற பெயரை மாற்றி மாடல் ஒய் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த கார் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

Paytm CEO Vijay Shekhar Sharma buys Tesla Model Y

அதன்பிறகு டெஸ்லா நிறுவனம்இந்தியாவிற்குள் நுழைய நீண்ட காலம் பிடித்தது. கடந்த சில மாதங்களுக்க முன்னர் தான் இந்தியாவில் தனது ஷோரூமை திறந்து விற்பனையை துவங்கியது. இதற்கு முன்னர் டெஸ்லா காரை வாங்க வேண்டும் என்றால் வெளிநாட்டில் வாங்கி நாம் தான் சொந்தமாக இ்நதியாவிற்குள் இறக்குமதி செய்ய வேண்டும் தற்போது டெஸ்லா நிறுவனமே வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் கூர்கான் பகுதியில் துவங்கிய ஷோரூமில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தனது மாடல் ஒய் காரை வாங்கினர். இந்த காரை அவர் கடந்த 2016ம் ஆண்டே ஈக் செய்திருந்தார். இந்த காரில் கிளேஸியர் ஃப்ளூ நிறத்தை அவர் தேர்வு செய்திருந்தார். இந்த தகவலை ஷர்மான வெளியிடவில்லை. ஆனால் டெஸ்லா இந்தியா தலைவர் ஷாரத் அகர்வால் இந்த காரின் சாவியை சேகர் ஷர்மாவிடன் ஒப்படைக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த காரில் பேஸ் வேரியன்ட் மற்றம் லாங்க் ரேஞ்ச் வேரியன்ட் ஆகிய கார்கள் உள்ளது.இதில் பேஸ் வேரியன்ட் கார் இந்தியாவில் ரூ59.89 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் 64kWh பேட்டரி, 500 கி.மீ ரேஞ்ச் உடன் விற்பனையாகி வருகிறது. லாங் ரேஞ்ச் வேரியன்ட் ரூ67.87 லட்சம் விலை மற்றும் 84.2 kWh பேட்டரி மற்றும் 661 கி.மீ ரேஞ்ச் உடன் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் மினிமலான கேபின், பெரிய டச் ஸ்கிரீன், பானரோமிக் சன் ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீ்டும், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் டிரைவர் அசிஸ்ட் சிறா்டம் உள்ளிட்ட அம்சங்கள். உள்ளது. டெஸ்லா நிறுவனம் கூர்கான் பகுதியில் கார் விற்பனை, சர்வீஸ், டெஸ்ட் டிரைவ், டெலிவரி, சார்ஜிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளை கொண்ட ஷோரூமை கடந்த 26ம் தேதிதான் திறந்தது.

இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தனது வாகனங்களுக்கான முதல் விற்பனை ஷோரூமை தமிழகத்தில் திறந்தது. அப்பொது முதல் தற்போது வரை மொத்தம் 140 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பை விட விற்பனை குறைவாகதான் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதன் விலை தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒருவர் ஒரு காருக்காக 9 ஆண்டுகள் காத்திருந்தது எல்லாம் ஆச்சரியமான விஷயம் தான். இந்த காரை புக் செய்தவர்கள் பலர் இ்நத காரின் வருகைக்காக காத்திருந்தனர். இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் ஆனால் இதன் விலை குறைய வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 30, 2025, 12:50 [IST]
English summary
Paytm ceo vijay shekhar sharma buys tesla model y ev elite india
மேலும்... #tesla #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+