பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி

பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம் எனவும், புதிதாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை அப்ளை செய்து வாங்கிக் கொள்ளலாம் எனவும், தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பேடிஎம் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்த பின்பு அதன் செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், மீண்டும் இந்த சேவையை வழங்குவதாக பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்த வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கிறது. ஃபாஸ்ட் டேக் கார்டுகள் இல்லாத கார்கள் சுங்க சாவடிகளை கடக்க இரு மடங்கு சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுவே ஃபாஸ்ட் டேக் கார்டு இருந்தால் சரியான கட்டணத்தில் வாகனங்களால் சுங்க சாவடியை கடந்து செல்ல முடியும்.

paytm fastag

இந்நிலையில் இந்தியாவில் அதிகமான ஃபாஸ்ட் டேக் கார்டுகளை விற்பனை செய்தது பேடிஎம் நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை விற்பனை செய்ததில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. இதனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

கடந்த மாதமே இது குறித்து அறிவிப்புகள் எல்லாம் வெளியான நிலையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வாங்கி மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி பயன்படுத்தி வருபவர்கள் உடனடியாக அந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பிளாக் செய்து விட்டு புதிதாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிமுறைகளும் அப்போது பிறப்பிக்கப்பட்டிருந்தன.

paytm fastag

தற்போது பெரும்பாலான நபர்கள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பேடிஎம் பேமென்ட் வங்கியில் குளோஸ் செய்துவிட்டு புதிதாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை அங்கீகரிக்கப்பட்ட வேறு வங்கிகள் மூலம் பெற துவங்கி விட்டனர். தொடர்ந்து ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் ரீசார்ஜ் செய்து பணம் காலியாகாமல் தொடர்ந்து கார்டில் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே அந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த ஃபாஸ்ட்டேக் வாங்கி இருந்தாலும் பேடிஎம்ஆப் மூலம் இனி அதை ரீசார்ஜ் செய்வதற்கான வழிவகைகளை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி நீங்கள் நேரடியாக ஃபாஸ்ட்டேக் ரீசார்ஜ் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்து உங்கள் வாகன பதிவெண்ணை பதிவு செய்தால் அதற்குரிய ஃபாஸ்ட்டேக் கார்டில் நேரடியாக நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகை ரீசார்ஜ் ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

paytm fastag

இது மட்டுமல்லாமல் புதிதாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்க நினைப்பவர்களும் பேடிஎம் ஆப் மூலம் விண்ணப்பிக்க முடியும். இப்படியாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பேடிஎம் நிறுவனம் எச்டிஎப்சி நிறுவனத்துடன் வைத்துள்ள ஒப்பந்தத்தின் படி எச்டிஎஃப்சி நிறுவனம் தான் இந்த புதிய ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீட்டுக்கே கொரியர் மூலம் அனுப்பி வைக்கும்.

இந்த கார்டுகளையும் நீங்கள் பேடிஎம் ஆப் மூலமே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் பேடிஎம் ஆப் மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்ய இருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி பேடிஎம் நிறுவனம் நேரடியாக ஃபாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்து அந்த பணத்தை உடனடியாக உரிய வங்கிக்கு செலுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் டேக் கார்டுகளை மத்திய அரசு ஒரு பக்கம் முறை படுத்தி வரும் நிலையில், மற்றொரு பக்கம் முழுமையாக சுங்கச்சாவடிகளை நீக்கிவிட்டு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த பல்வேறு திட்டங்களையும் செய்து வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் நீக்கப்பட்டு ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டண வசூல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது பேடிஎம் ஆப் மூலம் நேரடியாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை விநியோகம் செய்யும் வங்கிகளுக்கு பணத்தை அனுப்பும் வகையில் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யும் ஆப்ஷனும், எச்டிஎப்சி மூலம் புதிய ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வழங்குமாறும் அறிமுகப்படுத்தி உள்ளது. பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 7:00 [IST]
English summary
Paytm fastag recharge now available
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X