பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
பேடிஎம் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்த நிலையில் இனி பேடிஎம் வங்கி மூலம் இணைக்கப்பட்ட கார்டுகளை பயன்படுத்த முடியாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தலாமா? அதில் உள்ள பணத்தை எப்படி செலவு செய்வது என பலர் யோசித்து வருகிறார்கள். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் பேடிஎம் பேமெண்ட் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. சரியாக விதிமுறைகளை பின்பற்றாததன் காரணமாக இனி பேடிஎம் பேமெண்ட் வங்கியை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவித்திருந்தது. மேலும் அந்த பேமெண்ட்ஸ் வங்கி மூலம் பணப்பரிவத்தனை செய்பவர்கள் வேறு வழியை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவில் வாகனங்களில் பாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தும் பலர் பேடிஎம் பேமெண்ட் வங்கி மூலமே ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் இனி எந்த விதமான பணத்தையும் ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் பணம் இதுவும் வரவு வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அப்பொழுதே செய்தி வெளியான நிலையில் பல பேடிஎம் பேமெண்ட் வங்கி காரில் உள்ள பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டு வேறு வங்கி மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பெற்றுக் கொண்டனர். சிலர் அதிகமான தொகையை ஏற்கனவே பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து வைத்திருந்ததால், அதை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் பேடிஎம் பாஸ்ட் ஃடேக் கார்டுகளை இன்னும் பயன்படுத்த முடியுமா? அதை பயன்படுத்தி அதில் உள்ள பணத்தை எல்லாம் சுங்க கட்டணமாக செலுத்த முடியுமா என சந்தேகம் எழுப்பி வருகிறார்கள். இது குறித்து பேடிஎம் நிறுவனம் கடந்த 15ஆம் தேதி விளக்கம் ஒன்றை அளித்திருந்தது. அதில் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவுகளை வழங்கி உள்ளது.
அதன்படி பேடிஎம் பேமெண்ட் வங்கியில் தற்போது டெபாசிட் செய்வதை மட்டுமே நிறுத்தி உள்ளதாகவும், அந்த வங்கியில் உள்ள மக்கள் பணத்தை மக்கள் செலவு செய்ய எந்த விதமான பிரச்சினையும் இல்லை எனவும், அவர்கள் வழக்கமாக எப்படி செலவு செய்வார்களோ அந்த வழியிலேயே செலவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பார்த்தால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டுகளை தற்போது மக்கள் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பயன்படுத்த முடியும். அந்த வங்கி கணக்கில் பணம் இருப்பு இருக்கும் வரை இந்த கார்டை பயன்படுத்திக் கொள்ள எந்தவிதமான தடையும் இருக்காது.
ஆனால் புதிதாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணத்தை வரவு வைக்க முடியாது. இதனால் இருக்கும் பணத்தை மட்டுமே செலவு செய்து விட்டு புதிதாக கார்டு வாங்கி, அதில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும். புதிய கார்டை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் இணைக்க முடியாது. அந்த கார்டை வழங்கும் வங்கி கணக்கில் தான் இணைக்க முடியும் பேடிஎம் பேமெண்ட் மூலம் இணைக்க முடியாது.
இது மட்டுமல்லாமல் பேடிஎம் பேமென்ட் வங்கியில் உள்ள பணத்தை மற்ற அனைத்து விதமான விஷயங்களுக்கும் செலவு செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது, யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது அல்லது ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது உள்ளிட்ட அனைத்து செலவு குறித்த பரிவர்த்தனைகளை பேடிஎம் பேமென்ட் வங்கியில் உள்ள பணத்தில் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேடிஎம் நிறுவனம் தான் ஃபாஸ்ட் ட்ராக் கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் வந்த போது அதிக எண்ணிக்கையிலான ஃபாஸ்ட் டேக் கார்டுகளை விற்பனை செய்தது. இந்த கார்டுகள் வைத்திருக்கும், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தற்போது வேறு கார்டுக்கு மாறிவிட்ட நிலையில், ஒரு சிலர் தொடர்ந்து இதை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் விரைவில் வேறு வங்கி கார்டுக்கு மாற வேண்டிய சூழ்நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications









