சென்னையில மத்தவங்க வீட்டு வாசல்ல காரை நிப்பாட்னுனா இதான் கதி! சைலெண்டா சம்பவம் பண்ணிய வீட்டு ஓனர்!
சென்னையில் அடுத்தவர் வீட்டு வாசலை மறித்து வாகனத்தை பார்க்கிங் செய்தவருக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் டிவிட்டர் மூலம் சென்னை போலீசாருக்கு புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் சாலை விதிமுறை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான வழக்குகள் சாலை விதிமுறை மீறளூக்காக போடப்படுகிறது. இப்படியாக சாலை விதிமுறை மீறலில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் உள்ளிட்ட சட்ட அமலாக்க அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

பொதுவாக சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் தான் சாலை விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது அபராதம் விதிப்பது, வழக்கு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள். இப்படியாக லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக சென்னை போலீசார் டிவிட்டர் மூலமும் வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டனர். அதன்படி ஒருவர் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால், சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்தை டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு அதை சென்னை போலீசாருக்கு டேக் செய்தால் விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக விதிமுறை மீறல் நடந்த இடம் மற்றும் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான புகார்கள் சென்னை போலீசாருக்கு டிவிட்டர் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் தகுந்த ஆதரமுள்ள புகார்கள் மீது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதில் ஒருவர் தனது வீட்டின் முன்பக்கம் வாசலில் வழியை மறித்து காரை நிறுத்தியதை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் புகார் அளித்திருந்தார். அவர் நேரம் மற்றும் இடத்தை குறிப்பிட்டு இருந்த நிலையில் போலீசார் விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த கார் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரூபாய் 500 அபராதம் விதித்தனர்.
சாலைகளில் மற்றவர்களுக்கு இடையூறாக வாகனங்களை பார்க்கிங் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இப்படி ஒரு சட்டம் இருப்பதே பலருக்கும் தெரியாது. பலர் இஷ்டத்திற்கு கார்களை சாலை ஓரமாக பார்க்கிங் செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் கூட வாகனத்தை சாலையிலேயே பார்க்கிங் செய்துவிடுகின்றனர்.
இப்படியாக பார்க்கிங் செய்யும் வாகனங்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக யாராவது புகார் அளித்தால் அந்த வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் போலீசாருக்கு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இந்த புகார் அளிக்கப்பட்ட உடன் போலீசார் தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட புகைப்படத்திலுள்ள காரின் எண்ணிற்கு அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான செல்லான் அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை அவர் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் தான் அவர் தொடர்ந்து பயமில்லாமல வாகனத்தை ஓட்ட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் அமலில் இருந்தாலும் அதை பலர் பின்பற்றுவதில்லை. இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது ஏன் முக்கியம் என்பதையும் மக்கள் உணர வேண்டும். அப்பொழுது தான் சாலையில் விபத்துக்கள் குறையும். மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படாது.


Click it and Unblock the Notifications








