மத்திய அமைச்சராக இருந்தாலும் இதை ஓப்பனாக சொல்ல ஒரு தைரியம் வேணும்!! ஒவ்வொரு வருஷமும் இத்தனை உயிர் பலிகளா...
அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் என்று கேட்டால், இயற்கை பேரழிவுகள், கலவரங்கள், போர்கள் என்றுதான் பலரும் சொல்வார்கள். ஆனால் யாருக்கும் சாலை விபத்துகள் என்று சொல்ல தோன்றாது. ஆனால் உண்மையில், உலகளவில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பது சாலை விபத்துகள் ஆகும். எந்த அளவிற்கு அதிகம் என்றால், போர்கள், தீவிரவாத தாக்குதல்களினால் ஏற்படும் உயிர் பலிகளை காட்டிலும் சாலை விபத்துகளினால் அதிக உயிர் பலிகள் நடக்கிறதாம். இதை கூறியிருப்பவர் வேறு யாரும் இல்லை, இந்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆவார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
வாகனங்கள் இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கை ஓடாது என்கிற அளவிற்கு நாம் நிறைய விஷயங்களில் ஆட்டோமொபைல் வாகனங்களை பெரிதும் சார்ந்துள்ளோம். வாகனங்களை உபயோகப்படுத்துவது ஒன்றும் தவறில்லை. மனிதனின் கண்டுப்பிடிப்புகளில் அதுவும் ஒன்றுதான். ஆனால், நம்மில் நிறைய பேருக்கு வாகனங்களை எவ்வாறு முறையாக பயன்படுத்துவது என்பது தெரியவில்லை.

குறிப்பாக, அதிவேக பயணத்திற்கு வழிவகுக்கும் விரைவுச்சாலைகளில் தான் அதிக சாலை விபத்துகள் நடப்பதாகவும், ஆதலால் அங்குதான் உயிரிழப்புகளும் அதிகம் நடப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கரும்புள்ளிகள் என அழைக்கின்றனர். இந்த கரும்புள்ளிகள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
FICCI சாலை பாதுகாப்பு விருதுகள் மற்றும் மாநாட்டின் 6வது ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார். கரும்புள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக அவர் கூறுவது, சாலை திட்டங்களுக்கான மோசமான விரிவான திட்ட அறிக்கைகளை ஆகும். மேலும் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "போர்கள், தீவிரவாத தாக்குதல்களை காட்டிலும் சாலை விபத்துகளில் அதிக பேர் உயிரிழக்கின்றனர்" என பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 5 இலட்ச சாலை விபத்துகள் நடப்பதாகவும், இதில் ஒவ்வொரு வருடமும் 1.5 இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும், 3 இலட்சம் பேர் காயமடைவதாகவும் தெரிவித்துள்ளார். "இது நாட்டின் ஜிடிபி-இல் 3% சரிவு காரணமாக உள்ளது. அனைத்து விபத்துகளுக்கும் ஓட்டுனர்கள் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். ஆனால், ரோடு என்ஜினீயரிங்கில் தான் தவறு உள்ளது" என கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் பாதுகாப்பு தர சோதனைகளை நடத்த வேண்டும் என கூறுகிறார்.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமெனில், சாலையில் ஒரே பாதையில் செல்லும் பழக்கம் இருக்க வேண்டும் என்பதை ஆணித்தனமாக நம்பும் அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்துகளில் சிக்குவோரை விரைவாக மீட்க ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவர்களை சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை தயார் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆக, சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்க தற்சமயம் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் துரிதமாக செயல்படுவது இல்லையா? என கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க 3 மணிநேரம் வரையில் கூட ஆகிறது. வாகனங்களின் பாதுகாப்பு தர நிலைகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர், 2025ஆம் ஆண்டு முதல் சர்வதேச பாதுகாப்பு தர நிலைகளை பூர்த்தி செய்யும் பேருந்துகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக கொண்டுவரப்படும் இந்த நடவடிக்கை குறித்து மேலும் பேசிய கட்கரி, "தற்போதைய பேருந்துகள் பெரும்பாலும் சுத்தியல்கள், மரப்பலகைகள் மற்றும் அலுமினிய தகடுகளை கொண்டு உருவாக்கப்படுவதை கண்டறிந்ததை அடுத்து சர்வதேச பாதுகாப்பு தர நிலைகளை பின்பற்ற முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனித உயிர் விலை மதிப்பற்றது. ஆனால், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. இதற்கு அதிவேக பயணம், மது போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. ஆனால், சாலை திட்டங்களை மோசமாக வரையறை செய்வதுதான் காரணம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









