மேஷ ராசிக்காரர்களே... உங்களுக்கு ஏற்ற கார் செவர்லே க்ரூஸ், கலர் சிவப்பு!

By Saravana

கார் வாங்கும்போது பலர் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். எந்த கலரில் வாங்குவது, எந்த மாடல் உகந்ததாக இருக்கும் போன்றவை குறித்து அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.

அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, ஒரு ஜோதிட ஆராய்ச்சியின் மூலமாக, இங்கே உங்கள் ராசியின் பொதுவான குணநலன்களுக்கு ஏற்ற கார் மாடல்களை தெரிவு செய்து வழங்கியுள்ளோம். அத்துடன், உங்களது ராசிக்கு எந்த கலரில் கார் வாங்குவது சிறப்பாக இருக்கும் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பட்ஜெட் கருதி, ரூ. 20 லட்சத்திற்குள் விலை கொண்ட ஒரு மாடலும், விலையுயர்ந்த வகையில் ஒரு மாடல் என ஒரு ராசிக்கு இரு கார்கள் வீதம் வழங்கியுள்ளோம். அட, ஆர்வம் பீறிடுகிறதா, வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

 01. மேஷ ராசிக்காரர்களே

01. மேஷ ராசிக்காரர்களே

செவ்வாய் கிரக ஆட்சி பெற்ற மேஷ ராசிக்காரர்களே, அதிவேக விரும்பிகளாக இருப்பர். மேலும், உங்கள் ராசிக்கு சிவப்பு உகந்த நிறம். கம்பீரமான நடத்தை உள்ளிட்ட உங்களது குணாதிசயங்களை வைத்து பார்க்கும்போது செவர்லே க்ரூஸ் கார் சிறப்பானதாக அமையும். இந்த கார் ரூ.17 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதுதவிர, உங்களது காஸ்ட்லி கார் கனவை மெய்ப்பட வைக்கும் மாடல் எதுவாக இருக்கும் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 மேஷம் தொடர்ச்சி...

மேஷம் தொடர்ச்சி...

மேஷ ராசிக்காரர்களின் கனவை நனவாக்குவதில் ஃபெராரி கார்கள் உகந்ததாக இருக்கும். ரூ.2.50 கோடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக, ஆல் வீல் டிரைவ் கார்கள் இவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இருக்கும்.

02. ரிஷப ராசிக்காரர்களே...

02. ரிஷப ராசிக்காரர்களே...

சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் சற்று சொகுசாகவும், அதேநேரத்தில் சிக்கனமாக இருப்பதை விரும்புபவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு சற்று சொகுசான பயணத்தை வழங்கும் எஸ்யூவி அல்லது எம்பிவி உகந்ததாக இருக்கும். முதல் சாய்ஸ் டொயோட்டா இன்னோவா. ரூ.12 லட்சம் முதல் கிடைக்கிறது.

ரிஷபம் தொடர்ச்சி...

ரிஷபம் தொடர்ச்சி...

விலையுயர்ந்த காரை விரும்புபவர்களுக்கு ஆடி க்யூ5 எஸ்யூவி சிறந்த தேர்வாக அமையும். இவர்களுக்கு உகந்த நிறம் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் கார் வாங்குவது சிறந்ததாக அமையும். ரூ.55.5 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.

 03. மிதுன ராசிக்காரர்களே

03. மிதுன ராசிக்காரர்களே

புதன் கிரகத்தை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள், சமூகத்தின் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பதோடு, அதிக இடவசதியை விரும்புவபர்களாகவும் இருக்கின்றனர். நண்பர்களுடன் அவ்வப்போது டூர் அடிக்க விரும்பும், இவர்களுக்கு முதல் சாய்ஸ் ஹோண்டா சிவிக் கார். இந்த காரும், ஹோண்டா சிட்டியும் முன்பு பச்சை வண்ணத்திலும் கிடைத்தன. சிவிக் இல்லை என்பவர்கள், ஹோண்டா சிட்டிதான் அடுத்த சாய்ஸ். அப்போ, காஸ்ட்லி சாய்ஸ் என்ன? அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

மிதுனம் தொடர்ச்சி...

மிதுனம் தொடர்ச்சி...

விலையுயர்ந்த கார்களை வாங்க விரும்புபவர்களுக்கு ஜாகுவார் எக்ஸ்ஜே மாடல் பொருத்தமானதாக இருக்கும். ரூ.1.08 கோடி ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது. பச்சை நிறம் மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்ததாக இருக்கிறது.

 04. கடக ராசிக்காரர்களே...

04. கடக ராசிக்காரர்களே...

சந்திரன் ஆதிக்கம் பெற்ற கடக ராசிக்காரர்கள், மிகுந்த பாசப்பிணைப்பு கொண்டவர்களாகவும், பிரச்னைகளை எதிர்கொள்ளாமல், தவிர்த்துக் கொள்பவர்களாக இருக்கின்றனர். அச்ச குணமுடைய கடக ராசிக்காரர்களுக்ககு ரெனோ ஸ்காலா சிறந்த சாய்ஸாக இருக்கும். ரூ.8.44 லட்சம் விலை முதல் கிடைக்கிறது.

 கடகம் தொடர்ச்சி...

கடகம் தொடர்ச்சி...

காஸ்ட்லி காரை விரும்பினால், ஃபோக்ஸ்வேகன் பீட்டில் மாடல் சிறந்ததாக இருக்கும். ஆனால், இந்த மாடல் இப்போது இந்தியாவில் நேரடியாக கிடைக்கவில்லையெனினும், இறக்குமதி செய்து வாங்க முடியும். இவர்களுக்கு மஞ்சள் வண்ணம் சிறந்த தேர்வாக கூறலாம்.

05. சிம்ம ராசிக்காரர்களே

05. சிம்ம ராசிக்காரர்களே

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட வாகனங்கள் சூட் ஆகும். இவர்களுக்கு ஃபியட் அவென்ச்சுரா சிறந்த தேர்வாக அமையும். ரூ.7.03 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து இந்த க்ராஸ்ஓவர் மாடல் கிடைக்கிறது.

சிம்மம் தொடர்ச்சி...

சிம்மம் தொடர்ச்சி...

சிம்ம ராசிக்காரர்களுக்கு லம்போர்கினி அவென்டேடார் கார் சிறந்த தேர்வாக அமையும். ரூ.5.70 கோடி விலையில் கிடைக்கிறது. இவர்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் உகந்தது.

 06. கன்னி ராசிக்காரர்களே

06. கன்னி ராசிக்காரர்களே

புதன் ஆதிக்கம் பெற்ற இரண்டாவது ராசி. ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக ஆராயும் தன்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா சிறந்த தேர்வாக அமையும். ரூ.16.10 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

 கன்னி தொடர்ச்சி...

கன்னி தொடர்ச்சி...

வால்வோ வி40 க்ராஸ்கன்ட்ரி கார் இவர்களுக்கு சிறப்பானதாக அமையும். ரூ.39.15 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கும். இவர்களுக்கு உகந்த நிறங்களாக வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் போன்ற மென்மையான வண்ணங்களை கூறலாம்.

 07. துலாம் ராசிக்காரர்களே

07. துலாம் ராசிக்காரர்களே

சுக்கிரன் அதிபதியான துலாம் ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் ஒரு தனித்துவத்தை விரும்புபவர்களாக இருக்கின்றனர். மேலும், அரசியல், சமுதாய விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டுவர். இவர்களுக்கு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சிறந்த சாய்ஸ். ரூ.9.97 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது.

 துலாம் தொடர்ச்சி...

துலாம் தொடர்ச்சி...

துலாம் ராசிக்காரர்கள் காஸ்ட்லி காரை விரும்பினால், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சிறப்பான தேர்வாக அமையும். ரூ.51.77 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது. இவர்களுக்கு நீல நிறம் உகந்ததாக இருக்கும்.

08. விருச்சிக ராசிக்காரர்களே

08. விருச்சிக ராசிக்காரர்களே

செவ்வாய் கிரக ஆதிக்கம்பெற்ற விருச்சிக ராசிக்காரர்களுக்கு, கொஞ்சம் தில்லானவர்கள். இவர்கள் எதிர்பார்க்கும் செயல்திறனை ஈடுகொடுப்பதற்கு ஃபியட் லீனியா சிறந்ததாக அமையும். ரூ.8.23 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

விருச்சிகம் தொடர்ச்சி...

விருச்சிகம் தொடர்ச்சி...

காஸ்ட்லி ரகத்தில் மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே சிறந்ததாக இருக்கும். ரூ.1.57 கோடி விலையில் கிடைக்கிறது. மேலும், அடர் சிவப்பு நிறம் இவர்களுக்கு உகந்ததாக அமையும்.

 09. தனுசு ராசிக்காரர்களே

09. தனுசு ராசிக்காரர்களே

குரு அதிபதியான தனுசு ராசிக்காரர்கள் சமூக விவகாரங்களில் அதிக அக்கரையும் காட்டும் உங்களுடன் எப்போதும் சுற்றமும், நட்பும் சூழ இருப்பீர்கள். உங்களுக்கு ஸ்கோடா ஆக்டாவியா கார் சிறந்ததாக அமையும். ரூ.17.74 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

 தனுசு தொடர்ச்சி..

தனுசு தொடர்ச்சி..

தனுசு ராசிக்காரர்களுக்கு ஃபெராரி 458 இட்டாலியா சிறந்த தேர்வாக அமையும். ரூ.2.8 கோடி விலையில் கிடைக்கிறது. இவர்களுக்கு மஞ்சள் வண்ணம் சிறந்தது.

10. மகர ராசிக்காரர்களே

10. மகர ராசிக்காரர்களே

சனிக்கிரக ஆதிக்கம் பெற்ற மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஸ்டைலான, சொகுசான கார் அமைவது உசிதம். நிசான் சன்னி உங்களுக்கு ஏற்ற மாடலாக கூறலாம். ரூ.8.06 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

மகரம் தொடர்ச்சி...

மகரம் தொடர்ச்சி...

காஸ்ட்லி மாடலில் ஆடி ஏ8எல் கார் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். ரூ.1.53 கோடி விலையில் கிடைக்கிறது. பழுப்பு அல்லகு காக்கி நிறம் உங்களுக்கு உகந்தது.

 11. கும்ப ராசிக்காரர்களே

11. கும்ப ராசிக்காரர்களே

சனி பகவான் ஆட்சிபெற்ற மற்றொரு கிரகமான கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரத்யேகத்தை விரும்புபவர்களாக இருப்பர். எதையும் இயல்பாக யோசிக்காமல், மாற்று வழி தேடும் இவர்களுக்கு டாடா ஸினான் பிக்கப் டிரக் உகந்ததாக இருக்கும். ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

கும்பம் தொடர்ச்சி...

கும்பம் தொடர்ச்சி...

விலையுயர்ந்த வகையில், ரேஞ்ச்ரோவர் எவோக் சிறந்த சாய்ஸ். ரூ.74 லட்சம் ஆரம்ப விலை முதல் கிடைக்கிறது. புதுமையான வண்ணங்களை தேடிப்பிடித்து வாங்கும் இவர்களுக்கு குறிப்பிட்ட நிறத்தை வரையறுத்து கூற முடியாது. ஆனால், இவர்களுக்கு வெள்ளை சிறந்ததாக இருக்கும்.

 12. மீன ராசிக்காரர்களே

12. மீன ராசிக்காரர்களே

குரு அதிபதியான மீன ராசிக்காரர்கள் எப்போதுமே கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவர்கள். ஜென்டில்மேன் அந்தஸ்தில் வலம் வரும் இவர்களுக்கு டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.19.5 லட்சம் விலையிலிருந்து கிடைக்கிறது.

 மீனம் தொடர்ச்சி...

மீனம் தொடர்ச்சி...

காஸ்ட்லி வகையறாவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் இவர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். ரூ.1.30 கோடி விலையில் கிடைக்கிறது. வெள்ளை மற்றும் வெளிர் நிறங்களில் கார் வாங்குவது சிறந்தது.

மனசுதாங்க காரணம்...

மனசுதாங்க காரணம்...

ராசி, நிறத்தை பார்த்து பார்த்து எடுப்பதை விட உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற, சிறந்த கார் மாடலை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம். எந்த கார் வாங்கினாலும், வைத்திருந்தாலும் நம்பிக்கையுடன் ஓட்டுங்கள்.

Article Published On: Wednesday, April 29, 2015, 13:19 [IST]
English summary
Your star sign can also be an indicator of the type of car you should own. Check out these cars as per your zodiac sign.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+