பொக்லைன் வாயில் சிக்கி பீஸ் பீஸான பென்ஸ் ஸ்போர்ட்ஸ் கார்!
புதிய பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார் ஒன்று பொக்லின் எந்திரத்தின் வாயில் சிக்கி பீஸ் பீஸ் ஆகும் காணொளி ஒன்று இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.
எந்த காரணத்துக்காக இந்த ஸ்போர்ட்ஸ் கார் கசாப்புக்கு வந்திருந்தாலும், இதனை பார்க்கும் கார் பிரியர்களின் மனதில் அந்த கார் நொறுக்கப்படும் காட்சிகள் வலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அமெரிக்காவில்...?
இந்த கார் எங்கு, எப்போது நொறுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், அமெரிக்காவிற்கான அம்சங்கள் பொருந்தியதாக அந்த பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார் கண்டறிப்பட்டிருக்கிறது. மேலும், காரை உடைக்க பயன்படுத்தப்படும் பொக்லின் எந்திரமும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மாடல் என்பது உறுதியாகியுள்ளது.

காரணம்
உடைக்கப்பட்ட கார் சட்டவிரோதமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதனை பறிமுதல் செய்து போலீசார் உடைக்க அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு காரணம்
ஆனால், சில இணையதளங்களில் இந்த கார் கப்பலில் வரும்போது தண்ணீரில் விழுந்து பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனாலேயே உடைப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடைப்பு
உடைப்புக்கு வந்த காரை பொக்லைன் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு ராட்சத இரும்பு கவைகள் மூலமாக பீஸ் பீஸாக உடைக்கப்படுகிறது. இது கார் பிரியர்கள் மனதை கரைக்கும் விஷயமாகவே இருக்கிறது. இதன் வீடியோ கடைசியில் இணைக்கப்பட்டிருக்கிறது.

பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி
கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார். இந்த செயல்திறன் மிக்க காருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். 2007ம் ஆண்டு மார்க் ஃபெதர்ஸ்டன் இந்த காரை டிசைன் செய்தார்.

பிரத்யேக டிசைன்
இந்த காரின் மிக முக்கியமான அம்சமே, மேல்நோக்கி திறக்கும் இதன் பிரத்யேக கல்விங் வகை கதவுகள்தான். இந்த காரை எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பத்தில் திறந்து மூடும் வசதியுடன் மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்தது.

எஞ்சின்
இந்த காரில் 6,208சிசி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 571 பிஎஸ் பவரையும், 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. 7 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் கியர்பாக்ஸ் கொண்டது.

பெருமை
உற்பத்தியில் இருந்த 2010,2011,2012,2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்களுக்கான பாதுகாப்பு காராக பயன்படுத்தப்பட்ட பெருமை கொண்டது.

மதிப்பு
இந்திய மதிப்பில் ரூ.2.50 கோடி விலை மதிப்பு கொண்டது. கிராண்ட் டூரர் வகையை சேர்ந்த இந்த மாடல் 2 டோர் கூபே மற்றும் 2 டோர் கன்வெர்ட்டிபிள் ஆகிய பாடி டைப்புகளில் விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு ஸ்பெஷல் எடிசன் பெயர்களிலும் வந்தது.
வீடியோ
கார் உடைக்கப்படும் காட்சி!


Click it and Unblock the Notifications








