வரியை உயர்த்திட்டாங்க! பெட்ரோல், டீசல் செலவு உங்களுக்கு எவ்வளவு அதிகம் செலவு வைக்கும் தெரியுமா?
இந்தியாவில் தற்போது மத்திய அரசு தற்போது பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் டீசலுக்க ரூ2 வரை வரி உயர்வு ஏற்படுகிறது. இது ஏப்ரல் மாதம் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்னதான் வரியை உயர்த்தினாலும் விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என தெரிவித்துள்ளது. இது எப்படி சாத்தியம்? வரி உயர்வு இருந்தாலும் சில்லறை விற்பனையில் உயர்வு இல்லாதது எப்படி? இதனால் மக்களுக்கு லாபமா நஷ்டமா? விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது. இதனால் நேரடியாக விற்பனையாகும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ரூ2 வரை சுங்க வரி உயர்ந்துள்ளது. என்னதான் வரி உயர்வு இருந்தாலும் சில்லறை விற்பனை விலையில் எந்த விதமான விலை உயர்வும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கும் பெரிய அளவில் புரியவில்லை இது எப்படி சாத்தியம் என யோசிக்கிறார்கள்.

இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் பெட்ரோல் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் எல்லாம் கச்சா எண்ணெய் என்ற மூலப்பொருளில் இருந்து தான் தயாராகிறது. இந்தியா வெளிநாட்டிலிருந்து தான் பெரும்பாலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
இந்திய பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிற்கு அடுத்த 45 நாட்களுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெயை கையில் வைத்திருப்பார்கள். சர்வதேச மார்கெட்டில் ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெயின் விலை மாறிக்கொண்டே இருக்கிறது. பேரலுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 60 டாலருக்கு விற்பனையாகிறது. இதுதான் வரி உயர்த்தப்படவும் ஒரு முக்கியமான காரணம்.

கடந்த ஜனவரி மாதம் 83 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது அது மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்து தற்போது 60 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை பொருத்தவரை கடந்த ஜனவரி மாதத்தில் என்ன விலையில் விற்பனையானதோ கிட்டத்தட்ட அதே விலையில் தான் தற்போதும் விற்பனையாகிறது.
வரி உயர்த்திய போதும் கடந்த 45 நாட்கள் ஸ்டாக்கில் இருக்கும் கச்சா எண்ணெயின் விலையின் சராசரியை பார்க்கும் போது இந்த வரி உயர்வை நேரடியாக பெட்ரோல், டீசல் விலையில் உயர்த்தாலேயே செலுத்த முடியும் என்பதால் இந்த முடிவை பெட்ரோல், டீசல் தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்துள்ளது.

ஆனால் திடீரென சர்வதேச மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இது நேரடியாக சில்லறை விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரம் உயர்த்தப்பட்ட இந்த வரியை மத்திய அரசு குறைக்கவும் வாய்ப்புள்ளது கடந்த சில ஆண்டுகளாக இப்படியா கச்சா எண்ணெனை விலை குறையும் போது எல்லாம் மத்திய அரசு வரியை அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆனால் இந்த விலை குறைப்பை நேரடியாக மக்களுக்கு வழங்கியிருந்தால் பெட்ரோல் டீசல் விலையில் கணிசமான குறைவு இருந்திருக்கம். ஆனால் இதை மத்திய அரசு வரி உயர்வைஏற்படுத்தி வருவாயை அதிகரிக்கும் யுக்தியாக கையாண்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









