பெட்ரோல் பங்க்கில் 2,000 ரூபாய் நோட்டை குடுத்தவருக்கு நேர்ந்த கதி! வீடியோவ பாத்ததும் மக்கள் கொந்தளிச்சுட்டாங்க

2,000 ரூபாய் நோட்டுக்கள் (Rs 2,000 Currency Notes) திரும்ப பெறப்படும் என கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India - RBI) அறிவித்தது. ஆனால் தற்போது 2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

வரும் செப்டம்பர் 30ம் (September 30) தேதி வரை, 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்ற பரிவர்த்தனைகளுக்கும் கூட 2,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த முடியும். இதில், 2வது ஆப்ஷனைதான் பலரும் விரும்புகின்றனர்.

Petrol Bunk Attendant Retrieves Fuel From Scooter

அதாவது வங்கிகளுக்கு சென்று 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதை விட, பெட்ரோல் பங்க் (Petrol Bunk) போன்ற இடங்களில் பயன்படுத்தி கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. பலரும் இதே எண்ணத்தில் உள்ளதால், பெட்ரோல் பங்க்குகளில் தற்போது சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பலரும், 100 ரூபாய் அல்லது 200 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்புவதற்காக, பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுப்பதால், மீதி சில்லறை கொடுக்க முடியாத நிலைக்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஆளாகியுள்ளனர். எனவே பெட்ரோல் பங்க்குகளில், வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் சம்பவங்கள் தற்போது நிகழ தொடங்கியுள்ளன.

இதை நிரூபிக்கும் வகையில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜலூன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வாடிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் எரிபொருள் நிரப்ப சென்றார். அவரது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்பிய பிறகு, அவர் 2,000 ரூபாய் நோட்டை வழங்கியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர், ஸ்கூட்டரில் நிரப்பப்பட்ட பெட்ரோலை மீண்டும் வெளியே எடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாய் நோட்டுக்களால் நடைபெற்று வரும் பிரச்னைகளை இந்த வைரல் வீடியோ (Viral Video) தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும், பெட்ரோல் பங்க் ஊழியர் தவறு செய்து விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், காவல் துறையினரும் இந்த பிரச்னையில் தலையிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லறை வழங்குவதில் இருக்க கூடிய பிரச்னைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோலை மீண்டும் எடுத்திருப்பது சரியான விஷயமாக தெரியவில்லை.

2,000 ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லறை இல்லை என்பது முன் கூட்டியே அந்த வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டதா? என்ற தகவல் நமக்கு கிடைக்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் என்ன நடந்தது? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள, காவல் துறை விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் பங்க்குகளில், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளிலும் பணம் செலுத்த தயாராக இருந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது. அவசரமாக ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், பயணம் தடைபட்டு விடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 14:03 [IST]
English summary
Petrol bunk attendant retrieves fuel from scooter after customer pays with rs 2000 note viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+